• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ்! தியேட்டரில் ரன் முடிந்தவுடன்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ்! தியேட்டரில் ரன் முடிந்தவுடன்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Jailer 2 OTT Release : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், தியேட்டரில் ஓடி முடிந்ததும் எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் தெரியுமா? இதோ அதற்கான முழு தகவல்.

Written ByYuvashree M
Published: Oct 16, 2026, 10:45 AM IST|Updated: Oct 16, 2026, 10:54 AM IST
joinshare
ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ்! தியேட்டரில் ரன் முடிந்தவுடன்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
Image Credit: Jailer 2 OTT | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Jailer 2 OTT Release : 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் 2ஆம் பாகமாக ஜெயிலர் 2 வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். வழக்கம் போல, இந்த படத்திற்கும் அனிருத்தான் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு எக்கச்சக்க பாசிடிவ் விமர்சனங்கள் வந்திருப்பதையொட்டி, இந்த படம் தியேட்டரில் ஓடி முடிந்த பின்னர் எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்து காெள்வோம்.

ஜெயிலர் 2 திரைப்படம் தியேட்டர் ரிலீஸ்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வந்தது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த சமயத்தில், முன்கூட்டியே ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, ஜெயிலர் 2 வெளியாகி விட்டது. முதல் பாகம் வெளியான போது, இந்த படத்திற்கு கிடைத்திருந்த வரவேற்பை விட, தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் பாசிடிவ் விமர்சனங்களும் கிடைத்திருக்கிறது.

ஜெயிலர் 2 திரைப்படம், ரஜினியின் முந்தைய படமான கூலி படத்தை விட முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. வரும் நாட்களும் வீக்-எண்ட் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை எனும் காரணத்தால் இன்னும் படத்தின் வசூல் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 : மோகன் லால் காட்சிகளை தேவையில்லாமல் கட்! காஸ்டியூம் டிசைனர் புலம்பல்..

படத்தில் இடம் பெற்றுள்ள கேமியோ கதாப்பாத்திரங்கள்:

ஜெயிலர் 1 படம் போலவே, ஜெயிலர் 2 திரைப்படத்திலும் எக்கச்சக்க கேமியோ கதாப்பாத்திரங்கள் இருக்கின்றன. பழைய பாகத்தில் ஜாக்கி ஷ்ராஃப், மோகன்லால், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கேமியோவில் வந்தனர். இரண்டாம் பாகத்திலும் அவர்களின் கதாப்பாத்திரங்கள் தொடர்கின்றன. ஆனால், இவற்றுடன் இன்னும் பல கேரக்டர்கள் இணைந்துள்ளன. குறிப்பாக, சுராஜ் நெடிமொரு படத்தின் வில்லன்களுள் ஒருவராக வருகிறார். அதே போல பழைய பாகத்தின் வில்லன் விநாயகனும் சில சீன்களுக்கு வருகிறார். வித்யா பாலன் வில்லியாக சில காட்சிகளுக்கு வருகிறார். கூடவே ரித்திக் ரோஷன் சில காட்சிகளுக்கு கடைசியில் வருகிறார். சர்ப்ரைஸாக, விஜய் சேதுபதியும் திரைப்படத்தில் இருக்கிறார். இத்தனை பேர் இருந்தும், ரஜினிாந்த்தான் காட்சிக்கு காட்சி AURAKANTH-ஆக மாறி இருக்கிறார்.

ஓடிடி ரிலீஸ்!

இந்த காலக்கட்டத்தில், எந்த படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பும் அதன் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் முன்கூட்டியே விற்கப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது. ஜெயிலர் 2 படத்திற்கும் இதே நிலைதான். இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த படம், தீபாவளி சமயத்தில் ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ் மொழியில் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியாகலாம் எஅ கூறப்படுகிறது.

ஜெயிலர் 3 வருமா?

ஜெயிலர் 2 திரைப்படத்தின் இறுதியில், ஜெயிலர் 3 திரைப்படத்திற்கான ஹிண்ட் காெடுக்கப்பட்டுள்ளது. அதில், வித்யா பாலன் வில்லனாக இருப்பார் என தெரிகிறது. அதே போல அடுத்த பாகத்தில் ஜெயிலரான முத்துவேல் பாண்டியனுக்கு உதவியாக விஜய் சேதுபதி இருப்பார் என தெரிகிறது.

ரஜினி அடுத்ததாக, கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் பிறகு ஜெயிலர் 3யில் நடிப்பார் என எதிரப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இவர் தன்னுடைய ஆட்டோபயோகிராஃபியையும் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அலப்பறை கிளப்பிய ஜெயிலர் 2! முதல் நாள் வசூல் எவ்வளவு? அடடேய்..இவ்ளோ கோடியா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema