• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஷார்ட் டைமில் ஷூட்டிங்கை முடித்த அமீர்! ‘மாகாளி’ படப்பிடிப்பு நிறைவு..

ஷார்ட் டைமில் ஷூட்டிங்கை முடித்த அமீர்! ‘மாகாளி’ படப்பிடிப்பு நிறைவு..

அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு

Written ByYuvashree M
Published: Oct 06, 2026, 07:42 PM IST|Updated: Oct 06, 2026, 07:50 PM IST
joinshare
ஷார்ட் டைமில் ஷூட்டிங்கை முடித்த அமீர்! ‘மாகாளி’ படப்பிடிப்பு நிறைவு..
Image Credit: Mahakali | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! அரசு லேட்டஸ்ட் அப்டேட்

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! அரசு லேட்டஸ்ட் அப்டேட்

2

ஷார்ட் டைமில் ஷூட்டிங்கை முடித்த அமீர்! ‘மாகாளி’ படப்பிடிப்பு நிறைவு..

3

TAMCO, TABCEDCO அரசு கடன் முகாம்: எந்தெந்த தொழில்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? – முழு விவரம்!

4

Explained : உலகம் முழுவதும் வரப்போகும் 4 நெருக்கடிகள்! ஜெய்சங்கர் சொன்ன பகீர் தகவல்..

5

தமிழக அரசின் இலவச லேப்டாப் சிப்-லெவல் பயிற்சி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினை ஒன்றை அழுத்தமாகப் பேசும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் இருக்கும் உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளதுடன், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | நான் ரத்த வாந்தி மட்டும் தான் எடுக்கல.. மேடையில் உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி!

இப்படத்தில் அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பாளராக செல்வா RK, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். கலை இயக்கத்தை ராமு தங்கராஜும், சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயனும் கவனிக்கின்றனர்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பில் வேகம் காட்டி வரும் ‘மாகாளி’, தற்போது பரபரப்பாகத் தயாராகி வருகிறது.

மேலும் படிக்க | “நான் எந்த தவறும் செய்யவில்லை..” புலம்பித்தள்ளிய ரகுல் ப்ரீத் சிங்! என்ன ஆச்சு?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema