• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /அனிருத் காவ்யா திருமணத்திற்கு பின் இருக்கும் 11.11 ரகசியம்! இந்த எண்ணின் அர்த்தம் என்ன?

அனிருத் காவ்யா திருமணத்திற்கு பின் இருக்கும் 11.11 ரகசியம்! இந்த எண்ணின் அர்த்தம் என்ன?

Anirudh Kavya Wedding : இசையமைப்பாளர் அனிருத்தும், காவ்யாவும் கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இந்த திருமணத்திற்கு பின்னால் இருக்கும் 11.11 ரகசியம் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 12, 2026, 11:32 AM IST|Updated: Nov 12, 2026, 11:39 AM IST
joinshare
அனிருத் காவ்யா திருமணத்திற்கு பின் இருக்கும் 11.11 ரகசியம்! இந்த எண்ணின் அர்த்தம் என்ன?
Image Credit: Anirudh Kavya Maran Wedding | Source X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Anirudh Kavya Wedding : தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்திற்கும், பிரபல தொழிலதிபர் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணம், வெளிநாட்டில் நடந்ததை ஒட்டி, இந்த திருமணம் நடந்த தேதிக்கும் நேரத்திற்கும் பின்னால் ஒரு காரணம் உள்ளது. இதோ அது குறித்த முழு தகவல்..

கிரீஸில் நடந்த திருமணம்:

17 வயது முதல் தமிழ் திரையுலகில் தன் இசையால் பலரை அசத்தி வரும் அனிருத், காவ்யாவை கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தங்களின் ட்ரீம் டெஸ்டினேணனாக கிரீஸை தேர்வு செய்தனர்.

அனிருத் காவ்யா இருவருக்கும் திருமணம் நடக்கும் முன்பு, நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நவம்பர் 11ஆம் தேதியான நேற்று இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

மேலும் படிக்க | ’மேகமோ அவள்’.. சிவப்பு புடவையில் பிரியா பவானி சங்கர்! வைரலாகும் திருமண போட்டோஸ்

11.11 ரகசியம்:

பலரும், தங்கள் மொபைல் ஸ்கிரீனில் 11.11 என்கிற நேரம் காட்டும் போது அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஸ்டோரியாக அப்லோட் செய்வதை பார்த்திருப்போம். இந்த நேரத்தில் நாம் எதையாவது நினைத்துக்கொண்டால் அது உண்மையாக நடக்கும் என பல பேர் நம்புகின்றனர். அனிருத்தும், காவ்யாவுடனான தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு, "My Once In A Lifetime, for a lifetime 11.11" என குறிப்பிட்டிருந்தார். இன்னொரு போஸ்டில் வெறும் 11.11 என்று குறிப்பிட்டிருந்தார். அது மட்டும் அல்ல, இவர்கள் 11ஆம் தேதி, 11ஆம் மாசம், 11.11 மணிக்கு திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி என்னதான் இந்த 11.11ல் இருக்கு? இதற்கு அர்த்தம் என்ன?

நியுமராலஜி அதாவது எண் ஜோதிடத்தில் 11 என்பது மாஸ்டர் நம்பராக பார்க்கப்படுகிறது. இந்த எண், உள் உண்ர்வு, மனதின் எழுச்சி, ஆன்மீக உணர்ச்சி உள்ளிட்டவற்றை குறிக்கின்றன. அதே போல, 11.11 எனும் இந்த எண், ஏஞ்சல் நம்பர் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தை நீங்கள் எதேச்சியாக பார்த்தால் உங்களின் எண்ணங்களும், இந்த யுனிவர்ஸ் இயங்கும் விதமும் ஒரே மாதிரி இயங்குகிறது என அர்த்தமாம்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Anirudh (@anirudhofficial)

இதனால்தான், பலரும், 11.11 மணியை பார்கும் போது மனதில் ஏதேனும் ஒரு விஷயத்தை வேண்டிக்கொள்வர். ஒரு சிலர், இந்த 11.11 எனும் நேரத்தில், ஒரு நிமிடம் கண்ணை மூடி மூச்சை இழுத்து விட்டு ரிலாக்ஸும் செய்கின்றனர்.

எனவே, அனிருத் தான் 11.11 நேரத்தின் போது வேண்டிக்கொண்ட ஒரே ஆள் காவ்யாதான் என்பதை சொல்லாமல் தன் போஸ்ட் மூலம் சொல்லியிருக்கிறார்.

திருமண வரவேற்பு எப்போது?

அனிருத்தும் காவ்யா மாறனும், 11ஆம் தேதியான நேற்று திருமணம் செய்ததை ஒட்டி, அவர்களுக்கு வரும் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்கள் தமிழ்நாடு முதல்வர் விஜய், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தாண்டி, இன்னும் பல்வேறு சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ்களை மனமக்களின் வீட்டார் நேரில் சென்று வழங்கினர். இந்த திருமண வரவேற்பில் அனைவரும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பிரப நட்சத்திர விடுதியில் நடைப்பெற்று வருவதாக தகவல்.

மேலும் படிக்க | அனிருத்-காவ்யா திருமண புகைப்படங்கள்..AI போட்டோஸ் போல இருப்பது ஏன்? காரணம் இதுதான்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema