SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மூக்குத்தி அம்மன் 2 டீசர் வெளியீடு! சூர்யாவின் ‘சீன்’ படத்துடன் மோதும் நயன்தாரா..

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இதில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானதோடு அதன் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.

Written By Yuvashree M
Published: Sep 14, 2026, 12:03 PM IST | Updated: Sep 14, 2026, 12:15 PM IST
Join

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் - டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி - Mookuthi Amman 2: Mahasakthi' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம், சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

மூக்குத்தி அம்மன் 2 டீசர் ரிலீஸ்:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ் ஆப் மகாசக்தி - Rise of Mahasakthi' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், 'மைனா' நந்தினி, 'கருடா' ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை - வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் - குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் - ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் படிக்க | அட்லீ-யின் ‘ராக்கா’: ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்? ரசிகர்கள் ஷாக்

தீபாவளி ரிலீஸ் ரேஸ்:

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் 'ரைஸ் ஆஃப் மகா சக்தி- Rise of Mahasakthi' எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்... ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால். இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதே சமயத்தில், சூர்யா தன்னுடைய 47வது திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ‘சீன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நஸ்ரியா, நஸ்லேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படமும், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இதனால், இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதாக அறிவித்து தீபாவளி ரேஸில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள் என்ன?

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கும் அதற்கு முந்தைய படத்திற்கும் சுத்தமாக சம்பந்தமே இல்லை என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், இது மூக்குத்தி அம்மன் 2 படமே இல்லை, அரண்மனை 5 என்று கூறி வருகின்றனர். எது எப்படி இருப்பினும், தீபாவளி மூவி ரேஸில் ஜெயிக்கப்போவது யார் என்பது, படங்கள் ரிலீஸாகும் அந்த நாளில் தெரிந்து விடும்.

மேலும் படிக்க | காதல் மனைவியை சீக்ரெட்டாக விவாகரத்து செய்த பிரபல நடிகர்! 10 வருட திருமண வாழ்க்கை முறிவு..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES