கிரீஸ் நாட்டில் இசையமைப்பாளர் அனிருத்திற்கும், தொழிலதிபர் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணம் எப்படி நடந்தது என்றும், இதில் யார் கலந்து கொண்டனர் என்றும் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
பலருக்கும் ட்ரீம் வெட்டிங் டெஸ்டினேஷனாக இருக்கும் கிரீஸ் நாட்டில்தான் அனிருத்-காவ்யா திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டது. தமிழ் மக்கள் பலர் இந்த திருமண நாளை எதிர்நோக்கி காத்திருக்க பல்வேறு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், கலாநிதி மாறனின் குடும்பம் தமிழ்நாட்டில் பல்வேறு அதிகாரங்களை கொண்ட குடும்பம் ஆகும். திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்தின் குடும்பத்துடன் அவர்கள் சம்பந்தம் செய்து கொள்ளப்போகின்றனர் என்பதால் பலர் இந்த திருமணத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
அதே போல, முதல் காதல் தோல்வியில் முடிந்ததும், பல ஆண்டுகள் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இசையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அனிருத்திற்கு இப்போது காவ்யா மாறன் மனைவியாக அமைவதும் அனிருத் ரசிகர்களை குஷிப்படுத்தியது. இதனாலும், இவர்களின் திருமண நாளை எதிர்நோக்கி பலர் காத்துக்கொண்டிருந்தனர்.
பெரியோர்களால் முடிவெடுத்தபடி, கடந்த நவம்பர் 11ஆம் தேதி 11.11 மணிக்கு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் நடந்தது எப்படி என்பது குறித்து, இணையத்தில் பலரும் பேசி வந்ததை அடுத்து, டி.ஆர்.பி.ராஜா இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
வழக்கமாக, இந்தியாவில் நடக்கும் பல்வேறு திருமணங்களில் தாலி கட்டப்படுகின்றன. வட இந்தியாவில் கருப்பு மணிகள் வைத்து தாலி கட்டப்படும். தெலங்கானா, கர்நாடாக உள்ளிட்ட இடங்களில் அவரவர் முறைப்படி தாலி கட்டப்படும். தமிழ்நாட்டிலும் பலர் மஞ்சள் தாலி கட்டி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. பெண்கள் கழுத்தில் கட்டப்படும் இந்த தாலிகள் அவரவர் சாதி அடையாளத்தையும் குறிக்கும் வகையில் இருக்கின்றன.
திமுக போன்ற திராவிட கட்சிகளில் செயல்படும் பெரும்பாலானோர், இப்படி அவர்கள் வீட்டு திருமணத்தில் தாலி கட்டினாலோ பூஜை செய்தாலோ அது பெரிய சர்ச்சையாக வெடிக்கும். தற்போது அனிருத்தும் அப்படிப்பட்ட குடும்பத்தில் இணைகிறார் என்பதால், தாலி கட்டும் முறை இந்த திருமணத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.
@DrGanesh_Japan YES ... Kavya and Anirudh garlanded each other... #Thalaivar handed over a chain to Kavya and #Superstar handed over a chain to Anirudh... the bride and groom exchanged chains and an union of hearts was blessed by their friends and family♥️🎊
— Dr. T R B Rajaa (@TRBRajaa) November 12, 2026
எக்ஸ் தளத்தில் ஒருவர், அனிருத்-காவ்யாவின் திருமண புகைப்படம் ஒன்றை பதிவிட்டில் அதில் திருமணம் நடந்த முறை குறித்து ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். “இது பார்ப்பதற்கு வேதங்கள் ஓதாமல் நடந்த சுய மரியாதை திருமணம் போல இருக்கிறது. நான் கூறியது உண்மையா?” என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு டி.ஆர்.பி ராஜா விளக்கமளித்திருக்கிறார். இது, வேதங்கள் ஓதாமல் நடந்த திருமணம் என்றும், முதலில் அனிருத்தும் காவ்யாவும் மாலை மாற்றிக்கொண்டதாகவும், பின்னர் மு.க.ஸ்டாலின் காவ்யாவிற்கு ஒரு செயின் எடுத்துக்கொடுக்க, மணமகன் பக்கத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்தும், அனிருத்திற்கு செயின் எடுத்து கொடுத்துள்ளார். இருவரும் செயினை மாற்றிக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு குடும்பத்தினர் ஆசீர்வாதம் செய்துள்ளனர்.