• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /8வது ஊதியக் குழு: HRA முதல் சம்பள உயர்வு வரை... மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முக்கிய அப்டேட்ஸ்

8வது ஊதியக் குழு: HRA முதல் சம்பள உயர்வு வரை... மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முக்கிய அப்டேட்ஸ்

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் நடவடிக்கைகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. இந்த குழு மூலம் எடுக்கப்படும் தீர்மானங்களின் தாக்கம் நாட்டின் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மீது இருக்கும்.

Written BySripriya Sambathkumar
Published: Aug 07, 2026, 04:05 PM IST|Updated: Aug 07, 2026, 04:07 PM IST
joinshare
8வது ஊதியக் குழு: HRA முதல் சம்பள உயர்வு வரை... மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முக்கிய அப்டேட்ஸ்

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் இவர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

துரித கதியில் 8வது ஊதியக் குழுவின் பணிகள்

8வது ஊதியக் குழுவின் நடவடிக்கைகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. இந்த குழு மூலம் எடுக்கப்படும் தீர்மானங்களின் தாக்கம் நாட்டின் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மீது இருக்கும்.

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இக்குழு, ஊழியர் அமைப்புகள், சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ச்சியான கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

குறிப்பாக, அடிப்படை சம்பள உயர்வு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் (fitment factor), வீட்டு வாடகைப்படி (HRA) ஆகியவற்றில் ஏற்படவுள்ள மாற்றங்கள் மீது அனைவரின் கவனமும் உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழு தொடர்பான 5 மிக முக்கியமான மற்றும் சமீபத்திய தகவல்கள் பற்றி இங்கே காணலாம்:

1. 8வது ஊதியக் குழுவின் தொடர் கூட்டங்கள்

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளிடமிருந்து கருத்துகள் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெற்ற பிறகு, 8-வது ஊதியக் குழு அவர்களுடனான நேரடிச் சந்திப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

  • நாட்டின் பல்வெறு நகரங்களில் இக்குழு பிராந்திய அளவிலான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. 
  • இந்தக் கூட்டங்களின்போது, ​​ஃபிட்மென்ட் ஃபாக்டர், அடிப்படை ஊதியம், படிகள் மற்றும் ஊதிய உயர்வு விகிதங்கள் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை ஊழியர்கள் குழுவிடம் முன்வைக்கின்றனர்.

2. ஃபிட்மென்ட் ஃபாக்டர்

ஊதியத்தைத் தீர்மானிப்பதற்கான முக்கிய சூத்திரமான ஃபிட்மென்ட் ஃபாக்டரை சுற்றியே அனைவரது கவனமும் உள்ளது. 8-வது ஊதியக் குழு தொடர்பான விவாதங்களில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

  • ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது புதிய ஊதிய அமைப்பின் (pay matrix) கீழ் பழைய அடிப்படை ஊதியத்தைப் புதிய அடிப்படை ஊதியமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பெருக்கியாகும்.
  • ஊழியர் அமைப்புகள் 2.86 மடங்கு முதல் 3.25 மடங்கு வரையிலான ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கோருகின்றன.
  • 8வது ஊதியக் குழு 1.92 மடங்கு முதல் 2.57 மடங்கு வரையிலான ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பரிந்துரைக்கக்கூடும் என நிபுணர்களின் கருதுகிறார்கள்.
  • அரசு 2.57 மடங்கு அல்லது அதற்கும் அதிகமான ஃபிட்மென்ட் ஃபாக்டரை நிர்ணயித்தால், 7-வது ஊதியக் குழுவின் கீழ் தற்போது ₹18,000 ஆக உள்ள குறைந்தபட்ச அடிப்படை ஊதியம், மாதம் ₹46,000 முதல் ₹50,000 வரை உயரக்கூடும்.

3. அலவன்சுகளில் ஏற்றம்

வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் பிற படிகளில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன், வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி (TA) மற்றும் பிற படிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும்.

  • 7-வது ஊதியக் குழுவின் கீழ், வீட்டு வாடகைப்படி (HRA) நகரங்களின் வகைகளின் (X, Y மற்றும் Z) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
  • புதிய அடிப்படை ஊதியம் நடைமுறைக்கு வந்தவுடன், திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் HRA மீண்டும் கணக்கிடப்படும்.
  • பணவீக்கம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஆரம்பக்கட்ட வீட்டு வாடகைப்படி (HRA) விகிதங்களை உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
  • அடிப்படை ஊதியத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான உயர்வு காரணமாக, கையில் கிடைக்கும் ஊதியத்தில் (NPS/PF பிடித்தங்களுக்குப் பிறகு) 25% முதல் 35% வரை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

4. ஆண்டு ஊதிய உயர்வில் ஏற்றம்

ஆண்டு ஊதிய உயர்வு விகிதத்தை 3%-லிருந்து 6%-ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கூட்டு ஆலோசனைக் குழு (NC-JCM) உள்ளிட்ட பல்வேறு ஊழியர் சங்கங்கள், ஆணையத்திடம் மனுக்களை அளித்துள்ளன.

  • ஆண்டு ஊதிய உயர்வு விகிதத்தை தற்போதைய 3%-லிருந்து 6%-ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
  • 8-வது ஊதியக் குழுவின் கீழ் 'ஃபிட்மென்ட் ஃபாக்டர்' (fitment factor) 2.1 மடங்காக இருந்து, ஆண்டு ஊதிய உயர்வு 6%-ஆக உயர்த்தப்பட்டால், நிலை 10 (Level 10) மற்றும் நிலை 12 (Level 12)-ல் உள்ள அதிகாரிகள் 10 ஆண்டு காலத்தில் தங்கள் மொத்த ஊதியத்தில் ₹24 லட்சம் முதல் ₹34 லட்சம் வரையிலான கூடுதல் பலனைப் பெறக்கூடும்.

5. 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம் மற்றும் நிலுவைத் தொகை

8வது ஊதியக் குழுவின் அமலாக்க தேதி பற்றி அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இதை பொறுத்து அவர்களது அரியர் தொகையும் தீர்மானமாகும்.

  • 8-வது ஊதியக் குழுவிற்கான அடிப்படைத் தேதியாக (அல்லது கணக்கீட்டுத் தொடக்கத் தேதியாக) 2026 ஜனவரி 1-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • விரிவான அறிக்கையைத் தயாரிப்பதற்கு, 2025 நவம்பர் முதல் 18 மாத கால அவகாசம் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு, 2027-ல் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2027-ல் இது அமல்படுத்தப்பட்டாலும், 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்படும் முழு நிலுவைத் தொகையையும் ஊழியர்கள் ஒரே தவணையில் பெறுவார்கள் என நம்பப்படுகின்றது.
Add Zee News as a Preferred Source
TAGS:
Pay Commission
Central Government
Government Employees