SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

21 மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர்... பெண்களே தேடி வருவார்களாம்!

வங்கதேசத்தில் 21 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பிச்சைக்காரர் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Oct 08, 2026, 07:47 PM IST | Updated: Oct 08, 2026, 07:53 PM IST
Join

அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமற்றவர்கள் மற்றவர்களிடம் யாசகம் பெற்று தங்களின் வாழ்வை போக்குவார்கள். உணவு, உடை, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் அற்ற இந்த மக்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமும், கதையும் இருக்கும்.

வங்கதேசத்தை சார்ந்த 21 மனைவிகளுடன் ஒரே ஒரு அறை கொண்ட குடிசையில் வாழ்ந்து வரும் ஒரு பிச்சைக்காரர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். 21 மனைவிகளின் பெயர்களையும் மனதில் வைத்துக்கொள்வதே சிரமமாக இருப்பதாக கூறும் அவர் குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க | சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்: 3 பேர் பலி... இந்தியா கடும் கண்டனம்

பெண்களே கேட்பார்கள்...

35 வயதான அந்த நபரின் பெயர் மோரு மியா. 21 மனைவிகள் குறித்து அவரிடம் உள்ளூர் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு, தானாக திருமணங்கள் செய்துகொள்வதில்லை என்றும்; பெண்களே தன்னை நாடி வந்து திருமணம் செய்துகொள்ளும்படி கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"என்னிடம் என்னத்தை கண்டார்கள் என தெரியவில்லை. அதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பெண்கள்தான் என்னிடம் வந்து,'திருமணம் செய்துகொள்ளலாம்' என கேட்கிறார்கள்" என்று மோரு மியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் தான் கேட்டதே இல்லை...

மேலும், திருமணம் செய்துகொள்ளும்படி கேட்ட பல பெண்கள் தன்னை விட வயதில் மூத்தவர்கள் என்று தெரிவித்த மோரு மியா, அவர்களை நிராகரிப்பதற்கு பதில் அவர்களை ஏற்றுக்கொள்ளலாம் என தான் நினைத்ததாகவும் மியா தெரிவித்துள்ளார்.

அவரை பொருத்தவரை, பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்கும்போது, அதை மறுப்பது என்பது அவர்களுக்கு செய்யும் அவமரியாதை என நினைப்பாராம். அதேநேரத்தில், இதுவரை யாரையும் திருமணம் செய்துகொள்ள தான் கேட்டதே இல்லை என்றும்; அனைத்து திருமணங்களும் பெண்களே தன்னிடம் நேரடியாக வந்து கேட்டதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது சிரமம்

21 மனைவிகளுடன் வசித்து வந்தாலும், மோரு மியா ஒரே ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறார். இவரது முக்கிய வருமானமே மற்றவர்களிடம் இருந்து யாசகம் பெறுவதுதான். அவர் தினமும் ஒரு வழக்கத்தை பின்பற்றுகிறார். அதன்படி, அவர் பிச்சை எடுக்கும்போது ஒரு மனைவி அவருடன் செல்வார், அதேபோல் ஒவ்வொருவரும் அடுத்து செல்வார்களாம்.

மேலும் படிக்க | சவுதி தலைநகர் ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல்! அமெரிக்காவின் புதிய முன்மொழிவை நிராகரித்த ஈரான்

மேலும் மனைவிகளின் பெயர்களை சொல்லும்படி ஊடகத்தினர் கேட்டபோது, வரிசையாக சொல்லி வந்த அவர், இத்தனை பேர் இருப்பதால் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதில் சிரமம் இருக்கிறது என்றார். மோரு மியாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் மோரு மியாவை பாராட்டியும் சிலர் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் பாராட்டு

"அவர்கள் (பெண்கள்) தன் பெயரை நிலைநாட்டவும், வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையைப் பெறவும் ஒரு ஆணை விரும்பிய ஒரே காரணத்திற்காக அவர் அவர்களை மனைவிகளாக ஏற்றுக்கொண்டார். இதுதான் அதன் நிலை.

திருமணமாகாத பெண்கள் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்டார். அந்த வகையில் சிந்தியுங்கள், பிறகு இந்தக் காணொளியை மீண்டும் பாருங்கள்" என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES