• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : சட்டப்பேரவை Updates; தமிழ்நாட்டில் அமித்ஷா - தென்மாநில முதல்வர்கள் மாநாடு
Live Now

Tamil News LIVE : சட்டப்பேரவை Updates; தமிழ்நாட்டில் அமித்ஷா - தென்மாநில முதல்வர்கள் மாநாடு

Tamil News LIVE Updates: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு விவாதம் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதம்; தென் மண்டல முதல்வர்கள் மாநாடு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Written BySudharsan G
Published: Aug 20, 2026, 09:16 AM IST|Updated: Oct 08, 2026, 03:12 PM IST
joinshare
Tamil News LIVE : சட்டப்பேரவை Updates; தமிழ்நாட்டில் அமித்ஷா - தென்மாநில முதல்வர்கள் மாநாடு
Image Credit: TN Assembly (X/@CMOTamilNadu), Amit Shah - CM Vijay (@AmitShah)
08 Oct 2026 15:11 IST (IST)
share

Tamil News LIVE : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.4,000

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.4000 வரவு வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.(மேலும் படிக்க)
 

20 Aug 2026 15:33 IST (IST)

பாகிஸ்தான் தூதரக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இந்திய அரசு அதிரடியாக இடித்து தள்ளியுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடந்த சம்பவத்திற்கு இந்தியா கொடுத்த கெத்தான பதிலடியா இது? பின்னணியில் உள்ள 'Why' காரணங்களை அறிய... (மேலும் படிக்க)

20 Aug 2026 14:51 IST (IST)

E10 vs E20 Petrol: பழைய வாகனங்களுக்கு E10 மீண்டும் வருமா?

E20 பெட்ரோல் பயன்பாட்டினால் பழைய வாகனங்களில் ஏற்படும் கோளாறுகள், மைலேஜ் குறைவு மற்றும் E10 பெட்ரோலை மீண்டும் கொண்டுவருவது குறித்து தலைமை பொருளாதார ஆலோசகரின் பரிந்துரைகள் பற்றிய விரிவான தொகுப்பு... (மேலும் படிக்க)

20 Aug 2026 14:34 IST (IST)

Tamil Nadu Assembly Live : பெண் எம்எல்ஏவை பாராட்டிய சபாநாயகர்

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், "வேலு நாச்சியாரை நாம் யாரும் பார்த்ததில்லை. வேலு நாச்சியார் பூமியில் இருந்து, சீறி பாய்ந்து சிவகங்கை மாவட்டத்திற்காக பல்வேறு சிறப்பான கருத்துக்களை பேசினீர்கள்" என சிவகங்கை எம்எல்ஏ குழந்தை இராணியை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வாழ்த்தினார்.

20 Aug 2026 13:26 IST (IST)

Tamil Live News : நெல்லை பாதிரியாருக்கு மரண தண்டனை

கடந்த 2022ஆம் ஆண்டு நெல்லையில் நான்கு சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில், இழந்தகுளம் பகுதியில் உள்ள திருச்சபையில் பங்குத்தந்தையாக பணியாற்றிய ஆபிரகாமிற்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு. திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவு.

20 Aug 2026 13:21 IST (IST)

Tamil Live News : உச்சநீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்

தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "காவிரி நதிநீர் பகிர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும்" என்றார்.

20 Aug 2026 11:59 IST (IST)

Tamil Nadu News : தவெக எம்எல்ஏ சபரி ஐயங்கரன் சொத்து மதிப்பு

காரே இல்லாமல் சட்டப்பேரவையில் ஆட்டோவில் வருவதாக கூறிய பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரனின் சொத்து விவரம் (மேலும் படிக்க)

20 Aug 2026 11:40 IST (IST)

Tamil Nadu Assembly Live : ஒண்டிவீரனின் நினைவுநாள் - ஸ்டாலின் பதிவு

ஆங்கிலேயர்களை அடித்து விரட்டிய ஒப்பிலா வீரத்திற்கு சொந்தக்காரர் ஒண்டிவீரனின் நினைவுநாள். இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "பூலித்தேவரின் சிறந்த போர்ப்படைத் தளபதியாக தென்னகத்தின் விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்தியவர். தென்மலைப் போர் நாயகனாக திகழ்ந்த பெருந்தீரர் ஒண்டிவீரனின் புகழ் மக்கள் மனங்களில் வாழும்" என பதிவிட்டுள்ளார்.

20 Aug 2026 11:19 IST (IST)

Tamil News Live: ஆவின் பால் விற்பனையில் மாற்றம்

நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மூலம் தானியங்கி பால் வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் ரூ.10க்கு பால் வாங்கலாம். (மேலும் படிக்க)
 

20 Aug 2026 10:40 IST (IST)

Tamil Nadu Assembly Live : அமைச்சர் வன்னி அரசு பதில்

  • மலேசியாவில் பயிலும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு 'அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டம்' வழங்கப்படவில்லை என்பது தவறான செய்தி. உள்நோக்கத்தோடு தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.
  • மாணவர் பாரதிதாசன் படிப்புக்கு தேவையான ரூ.48 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாணவர் அதற்குரிய சரியான பயனீட்டு விவரங்கள், ஆவணங்களை சமர்பிக்கவில்லை.
  • உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் கூடுதல் தொகையை பெற மாணவர் தவறான தகவலை சொல்கிறார். அயலக கல்வி உதவித் திட்டத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு 362 பேருக்கு ரூ.131 கோடி வழங்கப்பட்டது - அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் பேச்சு.
20 Aug 2026 10:32 IST (IST)

இலவச ரேஷன் திட்டம்

நாட்டின் ஏழை மற்றும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் 'பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா' (PMGKAY) செயல்படுத்தப்படுகிறது.... (மேலும் படிக்க)

20 Aug 2026 10:30 IST (IST)

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விவரம், விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பிற தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.... (மேலும் படிக்க)

20 Aug 2026 09:44 IST (IST)

Tamil Nadu Assembly Live : வந்தடைந்தார் முதல்வர் விஜய்

செங்கல்பட்டு கோவளத்தில் தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.

#WATCH | Kovalam, Chengalpattu | Tamil Nadu CM C Joseph Vijay reaches the venue for the 31st Meeting of the Southern Zonal Council, which will be chaired by Union Home Minister Amit Shah 

— ANI (@ANI) August 20, 2026

20 Aug 2026 09:34 IST (IST)

Tamil News Live: சட்டப்பேரவை கூடியது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்றுமுன் கூடியது. இன்று கூட்டுறவு, உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்று முதல்வர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 Aug 2026 09:33 IST (IST)

Tamil News Live: ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு

கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தொகுப்பூதிய ஆசிரியர்களின் சம்பளம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொகுப்பூதிய ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கோயில் பணியாளர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு - முழு விவரம் Explained

கோயில் பணியாளர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு - முழு விவரம் Explained

2

Explained: கிரீன் கார்டுக்கு தடை!! இந்திய ஐடி ஊழியர்கள், நிறுவனங்கள் மீதான உடனடி தாக்கம் என்ன?

3

தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

4

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

5

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சட்டப்பேரவை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்; கூட்டுறவு மற்றும் உணவு உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற இருக்கிறது.

தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு இன்று நடைபெற இருக்கிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குவார். மாநாட்டை நடத்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் துணை தலைவராக செயல்படுவார். கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்க்கா ஆகியோருடன் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், மத்திய மாநில அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.