)
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (மேலும் படிக்க)
மதுரையில் காவல்துறையினர் தாக்கியதில் தனது கணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மனைவி குற்றச்சாட்டு (மேலும் படிக்க)
அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வளைகுடா நாடுகளின் அழுத்தம், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை மற்றும் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்கள் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள.. (மேலும் படிக்க)
ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல வகையில், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
தஞ்சாவூரில் விசிக சாலை மறியலில் ஈடுபட்டபோது, தனக்கு வழிவிடுமாறு விசிக நிர்வாகிகளுடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எஸ்எஸ்ஐ ஒருவர் அந்த இளைஞரை சமாதானம் செய்ய சென்று, பின்னர் அவரும் அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில் எஸ்எஸ்ஐ அந்த இளைஞரின் கன்னத்தில் அடிக்க, உடனே அதே வேகத்தில் அந்த இளைஞரும் எஸ்எஸ்ஐயின் கன்னத்தில் அறைந்துவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதன் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இளைஞரை அறைந்த SSI
திருப்பி அறைந்த இளைஞர்
தஞ்சாவூரில் வி.சி.க. சாலைமறியல், போராட்டத்தின் போது சாலையில் சென்ற இளைஞர் தனக்கு வழியிடுமாறு வி.சி.கவினரிடம் வாக்குவாதம்.
வாக்குவதாம் செய்த இளைஞரை ssi பளார் என அறை விட்டார். பதிலிக்கு ssi யை அறைந்த இளைஞர்@TVKVijayHQ— Manikandan Sankar (@reportermani) August 17, 2026
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எப்போது? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் –புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி மீண்டும் வலியுறுத்தல். மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக பேச்சு.. (மேலும் படிக்க)
பாலிவுட் மற்றும் தெலுங்கு பட நடிகை அனன்யா ராஜ் (27) உடல் மற்றும் மனநல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். ஜூலை 15 அதிகாலையில் அவர் தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளனர்.(மேலும் படிக்க)
இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கல் நடைமுறையை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிவைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனை மலரை முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டார்.
பேரவையில் முன்னாள் முதல்வர் பெயரை குறிப்பிட்டது தவறு தான் எனவும், அதற்கு அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
தனது லிவ்-இன் பார்ட்னரால் பெண் கொல்லப்பட்ட செம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாக கூறப்படுகின்றது.... (மேலும் படிக்க)
கர்நாடக அரசு தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில்:
கர்நாடக அரசு: இந்த முறை கர்நாடகாவில் கடுமையான வறட்சி நிலவியது. காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் கொடுத்த உத்தரவுகள் பின்பற்றப்பட்டன. 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்கள். அதைவிட அதிகமாக தண்ணீரை திறந்துவிட்டோம்.
தமிழக அரசு: ஆணைய உத்தரவை கர்நாடகா செயல்படுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் திறக்க உத்தரவிட்டதே மிக குறைந்த அளவுதான். ஆனால் உபரி நீரையே கர்நாடகா திறந்தது.
நீதிபதிகள்: தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகா ஏன் திறந்துவிடவில்லை? அணைகளில் மொத்த நீரையும் சேமிக்க முடியவில்லை என்பதால் நீரை திறந்துவிட்டுள்ளீர்கள்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
அரசு அளித்துள்ள நடைமுறைகளின்படி, சுயஉதவிக் குழு (SHG) உறுப்பினர்கள் காலை உணவைச் சமைத்து பரிமாறுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள சுயஉதவிக் குழுவில் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் கொண்டவராகவும், அதே கிராமம் அல்லது பேரூராட்சியில் வசிப்பவராகவும், உணவு தயாரிப்பதில் அடிப்படை அறிவு கொண்டவராகவும் இருக்க வேண்டும்... (மேலும் படிக்க)
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட சோலைவாயில் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான முதலமைச்சருமான விஜய்யின் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் 100 நாட்களில் நடந்த சாதனைகள், சர்ச்சைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இதுகுறித்து தமிழக அரசு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)
மத்திய அரசு நிறுவனத்தில் பணி செய்ய விரும்பும் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி வேதியியல் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் சம்பள வரம்பு மாதம் ₹25,000 முதல் ₹1,05,000 ஆகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2026 முதல் 11.09.2026 வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்... (மேலும் படிக்க)
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "கோவை கல்லூரி மாணவர் கொலை சம்பவம், திருவொற்றியூர் பள்ளி மாணவர் கொலை சம்பவம் ஆகியவற்றில் உயிரிழந்த 2 குழந்தைகளும் எங்கள் குழந்தைகள். இந்த விவகாரங்களில் முழுமையான நேர்மையான விசாரணை எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் நடைபெறும். தவெக அரசை பொறுத்தவரை நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இனி இது போல எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்" என்றார்.
கோவை மாணவர் கொலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "மாணவர் கொலை வழக்கு போதைப்பொருள் புகார் தொடர்பானது இல்லை. உண்மை நிலவரத்திற்கு மாறாக வழக்கை திசை திருப்ப வேண்டாம். எதிர்க்கட்சிகள் கூறியது போல எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே கொலை ஏற்பட்டது" என விளக்கம்.
4 நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டமன்றம்: தமிழ்நாடு சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இன்று முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இன்று பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
பீகார் கூட்டநெரிசல்: பீகார் மாநிலம் லஹிசராய் மாவட்டத்தில் அசோக் தாம் கோவில் ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இந்தோனேஷியாவில் புளோரஸ் தீவு அருகே 7.7 என்ற ரிக்டர் அளவில் நேற்று முன்தினம் (ஆக. 15) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது. 5000 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்துள்ளன. இந்நிலையில், இந்தோனேஷியாவின் எண்டே நகரின் வடக்கு-வடமேற்கு பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.