SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி கவலை வேண்டாம்... மதுரை - சென்னை விமான சேவையில் முக்கிய மாற்றம்

Madurai Latest News Updates : மதுரையில் இருந்து டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கு IndiGo நிறுவனம் முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 02, 2026, 02:43 PM IST | Updated: Oct 02, 2026, 02:48 PM IST
Join

Madurai Latest News Updates : மதுரையில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானப் பயணிகளுக்கு இனி தினமும் நேரடி விமான இணைப்பு கிடைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

IndiGo நிறுவனம் மதுரை - டெல்லி இடையே இதுவரை வாரத்திற்கு 5 நாட்களாக விமான சேவையை வழங்கி வந்தது. நேற்று முதல் (அக். 1) இந்த சேவை தினசரி சேவையாக மாற்றியிருக்கிறது. மதுரை - டெல்லி சேவை மட்டுமின்றி, மதுரை -சென்னை மற்றும் மதுரை - பெங்களூரு வழித்தடங்களின் அட்டவணைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை - டெல்லி இடையேயான இந்த தினசரி விமான சேவை என்பது அரசு பணி சார்ந்தவர்களுக்கும், வணிகர்களுக்கும், டெல்லி வழியாக வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிடுபவர்கள் ஆகிய பயணிகளுக்கு பெருமளவில் உதவும். விமானங்களுக்காக வாரக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை.

மேலும் படிக்க | 8ம் வகுப்பு படித்தவரா? ரூ.58,000 வரை சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை

மதுரை - சென்னை வழித்தடம்

மதுரை - சென்னை வழித்தடத்தில் இண்டிகோ நிறுவனம் வாரத்திற்கு 20 முறை விமான சேவைகளை இயக்கி வந்தது. தற்போது தினமும் மூன்று விமானங்கள் வீதம் வாரத்திற்கு 21 விமான சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இருப்பினும், மதுரை - சென்னை இடையேயான வழித்தடத்தில் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த Airbus A321 பெரிய ரக விமானங்களுக்கு பதிலாக A320 சிறிய ரக விமானங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த இருக்கைகளின் எண்ணிக்கை சற்று குறையும்.

முன்பு வாரத்திற்கு A321 16 விமானங்கள் மற்றும் A320 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 3 தினசரி சேவைகளும் A320 விமானங்கள் மூலமாகவே இயக்கப்பட இருக்கின்றன. இதன்மூலம், வாரத்திற்கு ஒரு கூடுதல் விமானம் மற்றும் நிலையான நேர அட்டவணை கிடைக்கும். அதேநேரத்தில் வாராந்திர மொத்த இருக்கை வசதி சற்றுக் குறையும்.

மேலும் படிக்க | திருமணத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பெண்கள்... House Husband... ஐகோர்ட் சொன்ன ஐடியா

மதுரை - பெங்களூரு வழித்தடம்

இதேபோல், மதுரை - பெங்களூரு வழித்தடத்தில் வாரத்திற்கு 14 விமானங்களாக இருந்தது. அதாவது தினமும் 2 சேவைகள் இருந்தது. ஆனால், அதை தற்போது IndiGo 11 விமானங்களாக குறைத்துள்ளது.

ஆனாலும், இந்த 11 விமானங்களுமே A320 விமானங்கள் மூலம் இயக்கப்படும் என்பதால் தற்போது வரை இயக்கப்பட்டு வரும் சிறிய ATR விமானங்களை விட அதிக இருக்கைகளை கொண்டிருக்கும். எனவே அதிக பயணிகள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IndiGo நிறுவனத்தின் இந்த மாற்றியமைக்கப்பட்ட உள்நாட்டு அட்டவணைகள் அக்டோபர் 28ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வர உள்ளன.

மேலும் படிக்க | 3 நாள் விடுமுறை... தென்மாவட்ட மக்களுக்கு சிறப்பு ரயில்கள் - முக்கிய அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES