SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள்... 2 பேர் கைது - சிக்கியது எப்படி?

மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாத்திரைகள் வாங்கப்பட்டது எப்படி, விற்பனை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Nov 08, 2026, 10:58 AM IST | Updated: Nov 08, 2026, 11:04 AM IST
Image Credit: Madurai Drug Seized | Image Source : X/@tnpoliceoffl
Join

மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட காவல்துறை அளித்த தகவலின்படி, மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதியில் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும்; அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் போடலையா... இதோ Unreserved ரயில்கள் அறிவிப்பு

50 ஆயிரத்திற்கும் மேலான போதை மாத்திரை

அதில், அவர்கள் இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது என்றும்; இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, அவர்களை மதுரை விளாச்சேரி பகுதிக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டதாகவும், அப்போது முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை மீட்டு எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2 பேர் கைது... ரூ.400-க்கு விற்பனை

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போதை மாத்திரை கடத்தலில் தொடர்புடைய மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சுகந்த கணேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜெயபாரதி ராஜா ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் ஒரு மாத்திரை 400 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகத் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 9 முதல் தங்க அனுமதியில்லை.. அதிரடி அறிவிப்பு

போதை மாத்திரைகளால் வரும் பாதிப்பு

இதுகுறித்து மதுரை தெற்கு துணை ஆணையாளர் இனிகோ திவ்யன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர்:

மேலும் படிக்க | தீபாவளி: மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்டில் செல்ல தடை.. வாகன ஓட்டிகளே அலர்ட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES