• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /CSK ரசிகர்களே... தீபாவளிக்கு வந்த குட் நியூஸ்... அக்சர் படேல் போட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

CSK ரசிகர்களே... தீபாவளிக்கு வந்த குட் நியூஸ்... அக்சர் படேல் போட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

ருதுராஜ் கெய்க்வாட் உடன் அக்சர் படேல் இருக்கும் புகைப்படம் தற்போது சிஎஸ்கேவின் டிரேட் பேச்சுவார்த்தையை பலப்படுத்தி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Nov 08, 2026, 09:00 AM IST|Updated: Nov 08, 2026, 09:08 AM IST
joinshare
CSK ரசிகர்களே... தீபாவளிக்கு வந்த குட் நியூஸ்... அக்சர் படேல் போட்ட இன்ஸ்டா பதிவு வைரல்
Image Credit: Zaheer Khan (Left, Image Source: X); Axar Patel, Ruturaj Gaikwad (Right, Screen Grab: Instagram)

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
CSK ரசிகர்களே... தீபாவளிக்கு வந்த குட் நியூஸ்... அக்சர் படேல் போட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

CSK ரசிகர்களே... தீபாவளிக்கு வந்த குட் நியூஸ்... அக்சர் படேல் போட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

2

தீபாவளிக்கு மழை பெய்வது நன்மையா...? டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் விளக்கம்

3

போலி நூல்கள் விவகாரம்: ஸ்டாலின் ஒரு அறிக்கை கூட விடாதது ஏன்? அமைச்சர் ஆதவ் நறுக் கேள்வி

4

அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

5

டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு தீவிர டிரேட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்களை பெற சிஎஸ்கே தீவிரம் காட்டி வருவதாக சமீப நாட்களாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அக்சர் பட்டேல், அஷுதோஷ் சர்மா ஆகியோரை பெற சிஎஸ்கே அணி விரும்புவதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதில் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் நூர் அகமது ஆகியோரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேட்பதாகவும் தகவல்கள் வந்தன.

மேலும் படிக்க | சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

அக்சர் படேலின் இன்ஸ்டா ஸ்டோரி

இந்நிலையில், அக்சர் படேலின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது இந்த டிரேட் பேச்சுவார்த்தை தகவலை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதில் அக்சர் படேல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் அமர்ந்து சிரித்து பேசும் புகைப்படத்தை அக்சர் படேல் ஸ்டோரியாக வைத்துள்ளார்.

அக்சர் படேலின் ஸ்டோரியை ருதுராஜ் கெய்க்வாட்டும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால், அக்சர் படேல் சிஎஸ்கே வருவது உண்மை தான் போல என சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இன்னொரு தரப்பினர், இது வெறும் புகைப்படம் மட்டுமே, இது டிரேட் பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தாது என பதிவிட்டு வருகின்றனர்.

CSK Trade

டெவால்ட் பிரெவிஸை கொடுக்கக் கூடாது...

இன்னும் சிலரோ இந்த டிரேட் நடந்துவிடக் கூடாது என பதிவிட்டு வருகின்றனர். அதிரடி வீரரான டெவால்ட் பிரெவிஸ் கடந்த 2 சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்து வருகிறார். சர்வதேச போட்டிகளிலும் மிரட்டும் பிரெவிஸை சிஎஸ்கே டெல்லிக்கு தாரைவார்க்க கூடாது என அவர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | CSK-வில் இருந்து தானாக வெளியேறிய வீரர்.. நடக்கப்போகும் அடுத்த டிரேட்? 2 வீரர்களுக்கு குறி!

குறிவைக்கும் கங்குலி... கொடுக்குமா சிஎஸ்கே?

SA20 தொடரில் டிவால்ட் பிரெவிஸ், Pretoria Capitals அணிக்காக விளையாடி வருகிறார். Delhi Capitals உரிமையாளர்கள் அந்த அணியிலும் பங்குகளை வைத்துள்ளனர். Pretoria Capitals அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்தாண்டு சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு டிவால்ட் பிரெவிஸ் உடன் நல்ல பழக்கம் உண்டானது.

இதைத் தொடர்ந்தே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற உடன் பிரெவிஸை பெறுவதற்கு கங்குலி சிஎஸ்கேவிடம் பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்ட பின் முதல் டிரேடாக கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரை எஸ்ஆர்ஹெச் அணிக்கு கொடுத்து, லியம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வட்ர்ஸ் ஆகியோரை சிஎஸ்கே பெற்றுள்ளது. இந்த டிரேட்  ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | CSK-வில் இணையும் 22 வயது அதிரடி வீரர்? அடுத்த டிரேட் இதுதான்.. யாருனு பாருங்க!

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL