SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மதுரை இளைஞர்களே... அக். 10இல் வேலைவாய்ப்பு முகாம் - முன்பதிவு முக்கியம்

மதுரை மதுரா கல்லூரியில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 3 மணிவரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க கல்வித் தகுதி, வயது வரம்பு, முன்பதிவு விவரம் உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.

Written By Sudharsan G
Published: Oct 03, 2026, 05:22 PM IST | Updated: Oct 03, 2026, 05:28 PM IST
Join

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு அரசு சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆட்சேர்க்கை நடத்தும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும். எனவே, பட்டம் பெற்றுவர்களோ அல்லது கல்லூரி கடைசி ஆண்டில் படிக்கும் மாணவர்களோ தன்னார்வமாக கலந்துகொள்ளலாம். தொடர்ந்து தங்களுக்கு ஏற்ற நிறுவனங்களில் விண்ணப்பித்து நேர்காணலிலும் பங்கேற்கலாம்.

இதன்மூலம், வேலைத் தேடும் இளைஞர்கள் ஒரே இடத்தில் பல நேர்காணல்களில் பங்கேற்கலாம். நிறுவனங்களுக்கும், வேலைத் தேடும் இளைஞர்களும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை இந்த இந்த முகாம் ஏற்படுத்திக் கொடுப்பதால் பல மாவட்டங்களில் இவை நல்ல வரவேற்பை பெறுகின்றன.

மேலும் படிக்க | திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... எப்படி விண்ணபிப்பது

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்

இந்தச் சூழலில், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வரும் அக்டோபர் 10ஆம் தேதி (சனி) அன்று மதுரா கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

முன்பதிவு முக்கியம்

200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இதில் தங்களின் நிறுவனங்களுக்கு ஆர்சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த முகாம் அக்.10ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். மதியம் 3 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலைத் தேடும் பட்டதாரிகள், இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். அதற்கு முன்பதிவும் செய்ய வேண்டும்.

எதில் முன்பதிவு செய்ய வேண்டும்?

தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெறலாம்.

தனியார்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்.

மேலும் படிக்க | சுகாதாரத்துறையில் வேலை! 44 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கல்வித் தகுதி என்ன?

இந்த வேலைவாய்ப்பு முகாம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை முடித்த பட்டதாரிகளுக்கு மட்டுமில்லை. 10ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், 12ஆம் வகுப்பை நிறைவு செய்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களும் பங்கேற்கலாம்.

வயது வரம்பு இருக்கிறதா?

மேற்கண்ட கல்வித்தகுதிகளை உடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைத் தேடுபவர்களை பதிவு செய்த முன்னணி நிறுவனங்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைத் தேடும் நபர்கள் தங்களின் பயோ – டேட்டா, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

முற்றிலும் கட்டணமில்லா சேவை

இம்முகாமில் பங்கு பெறும் வேலை தேடுபவர்கின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்காது என்றும்; இது முற்றிலும் கட்டணமில்லா சேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டிகிரி இருக்கா? உச்ச நீதிமன்றத்தில் வேலை ரெடியா இருக்கு: எப்படி விண்ணப்பிப்பது?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES