• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /அரை ஆடை புரட்சி டூ ஆலய நுழைவு வரை... மதுரையும் சுதந்திர போராட்டமும்...

அரை ஆடை புரட்சி டூ ஆலய நுழைவு வரை... மதுரையும் சுதந்திர போராட்டமும்...

இந்தியாவின் விடுதலைப் போராட்டப் பாதையை திசைதிருப்பிய புரட்சி பூமிதான் மதுரை. 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் நிலைத்து நிற்கும் சுதந்திர போராட்டங்கள் மற்றும் சுதந்திர போராட்ட சின்னங்கள் ஆகியவற்றை இங்கு நினைவுகூரலாம்.

Written BySudharsan G
Published: Aug 10, 2026, 12:36 AM IST|Updated: Aug 10, 2026, 12:47 AM IST
joinshare
அரை ஆடை புரட்சி டூ ஆலய நுழைவு வரை... மதுரையும் சுதந்திர போராட்டமும்...
Image Credit: Madurai Freedom Struggle | Image Credit : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

2

Explainer: EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.... ECR கணக்கீடு, சம்பளம், ஓய்வூதியம், PF-இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

3

வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!

4

குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் பல உச்சங்களை எட்டப்போகும் 3 ராசிகள் இவைதான்

5

பிரதமர் மோடி வருகை... சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய விடுதலை வரலாற்றில் மதுரைக்கு என்று தனித்துவமான இடம் உண்டு. மதுரையை வெறும் கோவில் நகரம் மட்டுமல்ல. அண்ணல் காந்தியடிகளின் எண்ண ஓட்டத்தையே தலைகீழாக மாற்றியது எனலாம்.

தேசத்தின் விடுதலைப் போராட்டப் பாதையைத் திசைதிருப்பிய புரட்சி பூமிதான் மதுரை. அந்த வகையில் இந்திய விடுதலை போராட்ட வாழ்வில் அரை ஆடைப் புரட்சி, ஆலய நுழைவு போராட்டம், மதுரையில் நிலைத்து நிற்கும் சுதந்திர போராட்ட சின்னங்கள் ஆகியவற்றை 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நினைவுக்கூரலாம்.

அரை ஆடைப் புரட்சி

1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மதுரைக்கு வருகை தந்த காந்தியடிகள், மேலூர் சாலையில் சென்றபோது ஏழை விவசாயிகள் மேலாடையின்றி வயலில் உழைப்பதைக் கண்டார்.

அந்த நொடியில் அவர் மன உளச்சல் அடைந்தார். அழரது தனது ஆடம்பர ஆடைகளை துறந்து அரை ஆடை உடுத்த முடிவெடுக்க காரணமானது.

மேலமாசி வீதி

காந்தியடிகள் தனது ஆடம்பர ஆடைகளை களைந்து எளிய அரை ஆடை உடுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்தான் மேலமாசி வீதி.

மேலமாசி வீதியில் அவர் தங்கியிருந்த இந்த இடம், இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய திருப்பமான 'ஆடைப் புரட்சி' நடந்த நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது.

மதுரையின் சுதந்திர போராட்டம்

  • சுதந்திரப் போராட்டக் காலத்தில் மதுரை மக்கள் காந்தியடிகளின் வழிகாட்டுதலை அப்படியே பின்பற்றினார். 1934ஆம் ஆண்டில் காந்திர மதுரை வந்தபோது, தலித் மக்களின் ஆலயப் பிரவேசத்திற்காக குரல் கொடுத்தார்.
  • அதன் தொடர்ச்சியாகவே, 1939ஆம் ஆண்டில் வைத்தியநாத அய்யர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயப் பிரவேசம் நடைபெற்றது.
  • சுதேசி இயக்கத்தின் போது மதுரை நெசவாளர்கள் கதர் ஆடை உற்பத்தியில் காந்தியடிகளுக்கு பெரும் பக்கபலமாக இருந்தனர்.
  • மதுரையின் காந்தி என அழைக்கப்படும் காந்தியடிகளின் தியாகிகளான என்.எம்.ஆர். சுப்பராமன் போன்ற தலைவர்கள், காந்தியப் பாதையில் மக்களை ஒருங்கிணைத்து விடுதலைப் பரணியை பாடினார்.

காந்தி நினைவு அருங்காட்சியகம்

  • இந்தியாவில் காந்தியடிகளுக்காக அமைக்கப்பட்ட மிக முக்கிய நினைவு அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று.
  • இது திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆட்சியர் அலுவலகமாக பயன்படுத்தப்பட்ட தமுக்கம் கொட்டாரம், 1959ஆம் ஆண்டில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டது.
  • காந்தியடிகள் சுடப்பட்டபோது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடையின் ஒரு பகுதி இங்கு பாதுகாக்கப்படுகிறது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்று புகைப்படங்கள் மற்றும் காந்தியின் வாழ்வியல் சார்ந்த அரிய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க வைகை ஆற்றங்கரை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தடையை மீறி தேசபக்த பேச்சாளர்களும், காந்தியடிகளும், சுப்பிரமணிய பாரதியார் போன்ற தலைவர்களும் பெருந்திரளான மக்களைச் சந்தித்து உரையாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக வைகை ஆற்றங்கரைத் திடல்கள் விளங்குகின்றன.

ஆடை மாற்றத்தில் தொடங்கி சமூக சீர்திருத்தம் வரை, மதுரையில் ரத்தமும் சதையுமாக வளர்ந்த காந்திய சித்தாந்தமே இந்திய சுதந்திரத்தின் பிரகாசமான ஜோதியாக மாறியது. வைகை நதிக்கரையில் மூண்ட அந்த தேசிய உணர்வு, இந்தியாவின் விடுதலை வரலாற்றில் என்றும் அழியாத சுவடாக நிலைத்து நிற்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Independence Day