SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரயில் பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் வழித்தடம் மாற்றம் - முழு விவரம்

பராமரிப்பு பணி மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுவதால் சில ரயில் சேவைகளில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது, சில ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Written By Sudharsan G
Published: Nov 01, 2026, 01:34 PM IST | Updated: Nov 01, 2026, 01:44 PM IST
Join

Southern Railway Madurai Bench: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுவதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மூன்று ரயில்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்பட இருக்கின்றன. அதேபோல், 6 ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | சென்ட்ரல் டூ அரக்கோணம், திருவள்ளூர்! மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்

ரயில் சேவைகளில் வழித்தட மாற்றம்

1. குருவாயூர் - தாம்பரம் எக்ஸ்பிரஸ்

ரயில் எண்: 16128, குருவாயூர் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நவம்பர் 1, 3, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் டிசம்பர் 1, 3, 6 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றிவிடப்படுகிறது.

நிற்காத ரயில் நிலையங்கள்: மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை.

கூடுதல் ரயில் நிலையங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.

2. நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ்

ரயில் எண்: 16321, நாகர்கோவில் சந்திப்பு முதல் கோவை சந்திப்பு எக்ஸ்பிரஸ் நவம்பர் 2, 4, 11, 13, 16, 18, 20, 23 மற்றும் டிசம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது.

நிற்காத ரயில் நிலையங்கள்: திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடை ரோடு, அம்பாதுரை, திண்டுக்கல், ஈரோடு, பாளையம்.

கூடுதல் ரயில் நிலையங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை

3. செங்கோட்டை - மதுரை எக்ஸ்பிரஸ்

ரயில் எண் 56772, செங்கோட்டை - மதுரை சந்திப்பு பயணிகள் ரயில் நவம்பரில் 2, 4, 11, 13, 16, 18, 20, 23 மற்றும் டிசம்பரில் 4,7 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் விருதுநகர், மானாமதுரை சந்திப்பு வழியாக மதுரைக்கு திருப்பிவிடப்படும்.

நிற்காத ரயில் நிலையங்கள்: கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம்

கூடுதல் ரயில் நிலையங்கள்: மானாமதுரை, மதுரை கிழக்கு

மேலும் படிக்க | வந்தே பாரத் வேகத்தில் சீறிய வைகை எக்ஸ்பிரஸ்; 430 km தூரம்... வெறும் 5.30 மணிநேரம்...

ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டவை

1. ரயில் எண் - 56711: மதுரை சந்திப்பில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி காலை 7 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் நவம்பர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் ராமநாதபுரத்தோடு நின்றுவிடும்.

2. ரயில் எண் - 56711: மதுரை சந்திப்பில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் நோக்கி செல்லும் பயணிகள் ரயில் வரும் நவம்பர் 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும். இந்த ரயில் சேவை மண்டபத்தோடு நிறுத்தப்படும்.

3. ரயில் எண் - 56714: ராமேஸ்வரத்தில் இருந்து பகல் 11.30 மணிக்கு மதுரை சந்திப்பு நோக்கி புறப்படும் பயணிகள் ரயில், நவம்பர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் - ராமநாதபுரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். எனவே, இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்துதான் தனது பயணத்தை தொடங்கும்.

4. ரயில் எண் - 56714: ரமேஸ்வரததில் இருந்து பகல் 11.30 மணிக்கு மதுரை சந்திப்பு நோக்கி புறப்படும் பயணிகள் ரயில் நவம்பர் 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும். இதன்மூலம் இந்த தேதிகளில் மண்டபத்தில் இருந்து ரயில் புறப்படும்.

5. ரயில் எண் - 56742: செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு பயணிகள் ரயில் வரும் நவம்பர் 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் சேரன்மகாதேவி - திருநெல்வேலி ஜங்ஷன் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும்.

6. ரயில் எண் - 56743: திருநெல்வேலியில் மதியம் 2.40 மணிக்கு செங்கோட்டை நோக்கி புறப்படும் ரயில் நவம்பர் 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பு டூ சேரன்மகாதேவி வரை பகுதியளவு ரத்து செய்யப்படும். சேரன்மகாதேவியில் இருந்து இந்த ரயில் புறப்படும்.

மேலும் படிக்க | நெருங்கும் தீபாவளி! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது? குஷியில் தென் மாவட்ட பயணிகள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES