• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /“நாட்டை விட்டு வெளியேறுங்கள்..” போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகருக்கு போலீஸ் நோட்டீஸ்!

“நாட்டை விட்டு வெளியேறுங்கள்..” போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகருக்கு போலீஸ் நோட்டீஸ்!

பாலிவுட்டின் பிரபல நடிகராக விளங்கும் இம்ரான் கானுக்கு தற்போது அமெரிக்க குடியுரிமை உள்ளது. இதையடுத்து, மும்பை போலீஸ், அவரை அக்டோபர் 28க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளது.

Written ByYuvashree M
Published: Oct 15, 2026, 11:28 AM IST|Updated: Oct 15, 2026, 11:35 AM IST
joinshare
“நாட்டை விட்டு வெளியேறுங்கள்..” போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகருக்கு போலீஸ் நோட்டீஸ்!
Image Credit: Imran Khan Asked To Leave India | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர்  கொடுத்த டிப்ஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

2

பாஜகவின் Operation D... தமிழக அரசியலில் புதிய நடிகர்... மாணிக்கம் தாகூர் சொல்லும் முக்கிய மேட்டர்

3

FD போடும் முன் இத தெரிஞ்சுக்கோங்க! FD Laddering என்றால் என்ன? நன்மைகள் என்னென்ன? Explained

4

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடு: நேரில் மனுக்கள் வாங்கப்படாது – அரசு அதிரடி!

5

IIT மெட்ராசில் வேலை: மொத்தம் 8 காலியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியாவில் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது, இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம். சிஜேபி, மாணவர் அமைப்பினர் என பலரும் ஞானேஷ் குமாரை பதவி விலக வேண்டுமென கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதில், பாலிவுட்டின் பிரபல நடிகரான இம்ரான் கானும் கலந்து கொண்டார். தற்போது அவரை நோக்கியும் ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கிறது.

போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்!

அமீர் கானின் உறவினரும், பிரபல நடிகருமான இம்ரான் கான், வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என போலீஸார் அவருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் உள்ள க்ராந்தி மைதானத்தில் இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக்கூறி போராட்டம் நடைப்பெற்றது. அதில், தன்னுடைய நீண்டநாள் காதலியான லேகா வாஷிங்டன்னுடன் இம்ரான் கான் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் மும்பை போலீஸார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க | இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மாணவி! யார் இந்த நேஹா போரா?

நடிகர் இம்ரான் கானுக்கு ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் இம்ரான் இந்தியக் குடியுரிமை இல்லாதவராக இருக்கும் போதிலும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால், குடிவரவுச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இருப்பினும், இம்ரானிடம் இந்திய குடியுரிமை இல்லை என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Imran Khan (@imrankhan)

வைரலான போஸ்ட்..

கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்படுவது போன்ற வீடியோவை, இம்ரானின் காதலி லேகா வாஷிங்க்டன் வெளியிட்டிருந்தார். அதில், தாங்கள் எங்கு அழைத்து செல்லப்படுகிறோம் என்பதே தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ அந்த சமயத்தில் கடும் வைரலானது. அதே சமயத்தில் இம்ரானும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னை வண்டியில் அழைத்து செல்வது போன்ற போட்டோவை பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து இன்னொரு வீடியோவையும் வெளியிட்டு, தங்களை வண்டியை விட்டு கீழே இறக்கி விட்ட பிறகும் போலீஸார் தங்களை எந்த கார் அல்லது வண்டியையும் பிடித்து வீட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என தெரிவித்திருந்தார். கேப்ஷனில், “இம்ரானுக்குப் பின்னால் இருந்த அந்த இருவர், எங்களைக் கைது செய்ய முயன்ற காவல் நிலையத்திலிருந்து எங்களைப் பின்தொடர்ந்து வந்த சீருடை அணியாத காவலர்கள் ஆவர். மக்கள் கூட்டம் இல்லாத, ஆனால் ஏராளமான ஊடகத்தினர் இருந்த ஒரு தெருவிலிருந்து அவர்கள் எங்களை அழைத்துச் சென்றனர். பின்னர், எங்களை வலுக்கட்டாயமாக ஒரு வேனுக்குள் ஏற்றி, இரண்டு மணி நேரம் சுற்றி அழைத்துச் சென்றனர். நான் முன்பதிவு செய்த ஊபர் ஓட்டுநரைத் தொந்தரவு செய்தது உட்பட, எந்தவொரு பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்த அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இம்ரானிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர், தான் ஒரு குடிமகனாக இங்கு இருப்பதாகவும், நகரத்தில் வாழும் ஒருவனாக ஏன் சுதந்திரம் தங்களை போன்ற ஆட்களிடமிருந்து பறிக்கப்படுகிறது என்று கேள்வி எழுவதாகவும், மக்களின் குரல் ஏன் ஒடுக்கப்படுகிறது என்றும் கேட்டிருந்தார். அதற்காகத்தான் தான் இதில் கலந்து கொள்வதாக கூறியிருந்தார். 

மேலும் படிக்க | மம்தா பானர்ஜியை கொல்ல சதி? கத்தியால் குத்த முயன்ற பெண் கைது.. என்ன நடந்தது?

Add Zee News as a Preferred Source
TAGS:
India