• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : கடந்த 4 ஆண்டுகளில் கட்சி தாவியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழ்நாட்டின் நிலை?

Explained : கடந்த 4 ஆண்டுகளில் கட்சி தாவியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழ்நாட்டின் நிலை?

2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுவரை, கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் எத்தனை மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சித்தாவி உள்ளனர்?, எந்தக் கட்சியில் அதிகமானோர் கட்சித் தாவி உள்ளனர்? உள்ளிட்டவற்றின் முழு விவரங்களை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 27, 2026, 11:20 PM IST|Updated: Sep 28, 2026, 03:36 PM IST
joinshare
Explained : கடந்த 4 ஆண்டுகளில் கட்சி தாவியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழ்நாட்டின் நிலை?
Image Credit: ADR Study on Political Defection | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஒரு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றிபெற்று, எம்.பி., எம்எல்ஏ ஆக தேர்வான பின்னர் அவர்கள் கட்சி மாறும் சமீபத்தில் அதிகமாகி வருகிறது.

இந்திய ஜனநாயகத்தின் முக்கிய பிரச்னையாக இது பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை இந்த நான்காண்டு காலத்தில் மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், பல்வேறு மாநிலச் சட்டமன்றங்களில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளின் கட்சித் தாவல்கள் குறித்து விரிவான ஆய்வை 'Association For Democratic Reforms' அமைப்பு மேற்கொண்டுள்ளது.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்ட அறிக்கை, இந்திய அரசியல் நீரோட்டத்தில் கட்சித் தாவல் குறித்த அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மேலும் படிக்க | நாட்டின் முதல் LNG ரயில்... தொடங்கிவைத்த அமித்ஷா - இதில் என்ன ஸ்பெஷல்?

பகுதி 1 - ஆய்வின் முக்கிய பின்னணி

கட்சித் தாவல் சட்டம் பாதிக்காதவாறு ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவியவர்கள் மட்டும் இதில் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2022 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்ற பிறகு, பதவியில் இருந்தவாறே கட்சி மாறிய மக்கள் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 111 ஆகும்.

பதவி  கட்சி மாறியவர்களின் எண்ணிக்கை
மக்களவை உறுப்பினர்கள்26
மாநிலங்களவை உறுப்பினர்கள்   7
சட்டப்பேரவை உறுப்பினர்கள்  78
மொத்தம்  111

பகுதி 2 - அதிகளவில் கட்சித் தாவல் எங்கு நடந்தது?

இந்த ஆய்வு 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிகழ்ந்த கட்சி மாற்றங்களை உள்ளடக்கி உள்ளது. இதில் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

நாகாலாந்து: எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என 32 பேர் கட்சி மாறி உள்ளனர். இது தேசியளவில் 29% EKgcd.

மேற்கு வங்கம்: இங்கு 20 பேர் கட்சி மாறியுள்ளனர் (18%)

தெலங்கானா: 9 பேர் கட்சி மாறியுள்ளனர் (8%)

கோவா மற்றும் பஞ்சாப்: தலா 8 பேர்

மகாராஷ்டிரா & மேகாலயா: தலா 6 பேர்

மணிப்பூர்: 5 பேர்

அருணாச்சலப் பிரதேசம் & குஜராத்: தலா 4 பேர்

இமாச்சலப் பிரதேசம் & ராஜஸ்தான்: தலா 2 பேர்

பிற மாநிலங்கள்: கர்நாடகா, மத்திய பிரதேசம், டெல்லி, சிக்கிம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கட்சி மாறியிருக்கிறார்கள்.

பகுதி 3: அதிகம் எந்தெந்த கட்சிகளில் இருந்து பிரிந்தனர்...?

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP): 25 உறுப்பினர்கள் வெளியேறினர்.

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்: 20 உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்திய தேசிய காங்கிரஸ்: 19 உறுப்பினர்கள் வெளியேறினர்.

பாரத் ராஷ்டிர சமிதி: 9 உறுப்பினர்கள் வெளியேறினர்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ்: தலா 7 உறுப்பினர்கள்

சிவ சேனா (உத்தவ் தாக்கரே): 6 உறுப்பினர்கள் வெளியேறினர்.

ஐக்கிய ஜனதா தளம்: 5 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் கட்சி: 4 உறுப்பினர்கள்.

NDPP, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளில் இருந்து மட்டும் 64 பேர் கட்சி மாறி உள்ளனர். அதாவது மொத்த எண்ணிக்கையில் இது 58% ஆகும்.

மேலும் படிக்க | SIR to Form 6: அனைத்து சர்ச்சைகளுக்கும்... தேர்தல் ஆணையர்கள் கூட்டாக விளக்கம்!

பகுதி 4: அதிக பிரதிநிதிகளை ஈர்த்த கட்சிகள் எவை?

நாகா மக்கள் முன்னணி (NPF): 32 பிரதிநிதிகள் இணைந்ததன் மூலம் முதலிடம்.

பாரதிய ஜனதா கட்சி: 29 பிரதிநிதிகள் இதில் இணைந்தனர்.

காங்கிரஸ்: 9 பிரதிநிதிகள்

சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு): 8 பிரதிநிதிகள்

NPP: 6 பிரதிநிதிகள்

PPA (Peope Party of Arunachal): 4 பிரதிநிதிகள்

AAP, AD (WPD), சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா: தலா 1 பிரதிநிதி

நாகா மக்கள் முன்னணி, பாஜக, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி ஆகியவை மட்டும் 81 பேரை பிற கட்சியில் இருந்து தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளன. இந்த மூன்று கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) அங்கும் ஆகும்.

பகுதி 5 - கட்சித் தாவல் நடைபெற்ற 4 சட்ட வழிமுறைகள்

தனிநபர் கட்சித் தாவல்: சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமல், தாமாக முன்வந்து தங்கள் தாய் கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைவது.

கட்சி இணைப்பு: சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு கட்சியின் குறிப்பிட்ட பகுதி அல்லது பெரும்பான்மை உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் முறைப்படி இணைவது.

பதவி விலகல் மற்றும் இடைத்தேர்தல்: பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதிய கட்சியில் இணைந்து அதன்மூலம் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதும் இதில் அடக்கம்.

தகுதி நீக்கம் மற்றும் இடைத்தேர்தல்: அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மாற்று கட்சியில் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதாகும்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 78 பிரதிநிதிகளில் 70 பேர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கட்சி மாறியுள்ளனர். 8 பேர் கட்சி மாறி, அதன்பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் சபைக்குள் நுழைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் நிலை

தற்போது மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துகொண்டு தவெகவில் இணைந்தது இதில் சேர்க்கப்படவில்லை.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது, இதில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவர்களே தவெக சார்பில் போட்டியிடுவது கவனிக்கத்தக்கது.

பகுதி 6 - ADR சுட்டிக்காட்டும் முக்கிய குறைபாடு

இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் மட்டுமே இறுதியானது அல்ல என்றும்; இதில் விடுபடல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் ADR எச்சரித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவது தொடர்பான தரவுகள் முறைப்படியாகவும், வெளிப்படையாகவும் அதிகாரப்பூர்வ அமைப்புகளால் பராமரிக்கப்படாததால் ஆய்வில் இடம்பெறாத பிற கட்சி மாற்றங்களும் நடைமுறையில் நிகழ்ந்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு உபதேசம் செய்யக்கூடாது: பாக். பிரதமர் பேச்சுக்கு இந்தியா கடுமையான கண்டனம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer