• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /நாட்டின் முதல் LNG ரயில்... தொடங்கிவைத்த அமித்ஷா - இதில் என்ன ஸ்பெஷல்?

நாட்டின் முதல் LNG ரயில்... தொடங்கிவைத்த அமித்ஷா - இதில் என்ன ஸ்பெஷல்?

குஜராத்தின் சமர்மதியில் இந்தியாவின் முதல் LNG ரயிலைக் கொடியசைத்து தொடங்கிவைத்த அமித்ஷா. இதன் சிறப்பம்சங்கள் என்ன...? அவர் தொடங்கிவைத்த மற்ற திட்டங்கள் குறித்தும் இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 27, 2026, 15:48 IST|Updated: Sep 27, 2026, 16:11 IST
joinshare
நாட்டின் முதல் LNG ரயில்... தொடங்கிவைத்த அமித்ஷா - இதில் என்ன ஸ்பெஷல்?
Image Credit: India's First LNG Train | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

2

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

3

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

4

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

5

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

India's First LNG Train: குஜராத் மாநிலம் சபர்மதி நகரில் இந்திய ரயில்வேயின் மாற்று எரிபொருள் பயன்பாடு குறித்த புதிய முயற்சியில், நாட்டின் முதல் LNG எரிபொருள் இயக்கப்படும் ரயில் இன்று (செப். 27) அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் முதல் LNG ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், குஜராத்தில் மொத்தம் ரூ.1,542 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

மேலும் படிக்க | SIR to Form 6: அனைத்து சர்ச்சைகளுக்கும்... தேர்தல் ஆணையர்கள் கூட்டாக விளக்கம்!

LNG ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • சபர்மதி ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு பணிமனையில் இருந்த வந்திருக்கும் இரண்டு 1,400 குதிரைத்திறன் (HP) திறன்கொண்ட எஞ்சின்கள் (Driving power cars), டீசல் மற்றும் LNG என இரு எரிபொருள்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • இதன்மூலம் ரயலில் பயன்படுத்தப்படும் டீசலில் சுமார் 40 சதவீரம் வரை LNG மூலம் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீசல் பயன்பாடு குறையும், எரிபொருள் செலவும் குறையும்.
  • அதுமட்டுமின்றி கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் நுண்துகள் உள்ளிட்ட மாசு உமிழ்வை குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ரயிலின் எஞ்சினில் 2,200 லிட்டர் கொள்ளவு கொண்ட LNG தொட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ஒருமுறை எரிபொருள் நிரப்பினாலே நீண்ட தூரம் பயணிக்க உதவும்.
  • இதில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 222 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம்.
  • டீசல் மீது அதிகம் சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில், இந்த ரயிலின் எஞ்சின் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், டீசல் மற்றும் LNG ஆகிய இரண்டிலும் இந்த ரயில் இயங்கும்.  
  • தானாகவே டீசல் மற்றும் LNG பயன்பாட்டிற்கு இடையே மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது. நீண்டதூரம் பயணங்களின்போது, LNG தீர்ந்துவிட்டால் எஞ்சின் தானாகவே டீசல் பயன்பாடடிற்கு மாறிவிடும்.
  • இந்த ரயிலால் டீசல் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் இந்தியன் ரயில்வே ஓராண்டுக்கு ரூ.24 லட்சத்தை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

अहमदाबाद में देश की पहली LNG ट्रेन, साबरमती रेलवे स्टेशन के नए स्वरूप व मेंटेनेंस शेड के शुभारंभ से लाइव... 

અમદાવાદમાં દેશની પ્રથમ LNG ટ્રેનનો શુભારંભ, સાબરમતી રેલવે સ્ટેશનના પુન:વિકસિત સ્વરૂપનું લોકાર્પણ તેમજ WAG 12 મેઈન્ટેનન્સ શેડના ઉદ્ઘાટનથી લાઈવ. https://t.co/3JclEQuVge

— Amit Shah (@AmitShah) September 27, 2026

சபர்மதியில் அமித்ஷாவால் இன்று LNG ரயில் மட்டுமின்றி, ரயில் பாதுகாப்பு, வழித்தடத் திறன், சரக்கு போக்குவரத்து செயல்பாடுகள் ஆகியவை தொடர்பான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

கவாச் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு

  • அகமதாபாத் கோட்டத்தின் கீழ் வரும் 404 கி.மீ., ரயில்வே வழித்தடத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பமான Kavach எனப்படும் கவாச் தானியங்கி பாதுகாப்பு அமைப்பிற்கு அடிக்கல் நாடப்பட்டது. இதன் மதிப்பு ரூ.414 கோடியாகும்.
  • அகமதாபாத் - பாலன்பூர் பிரிவில் 157 கி.மீ., தூரத்திற்கும்; அகமதாபாத் - சாமகியாலி பிரிவில் 157 கி.மீ., தூரத்திற்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதை தவிர்க்கும் வகையிலும், அதிக வேகத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மனித தவறுகளால் ஏற்படும் விபத்து அபாயங்களை குறைப்பது உள்ளிட்டவையே கவாச் அமைப்பின் நோக்கம்.

தானியங்கி பிளாக் சிக்னலிங் அமைப்பு

ரூ.118.83 கோடி மதிப்பில் சபர்மதி - கலோல் - பந்து மோடிடாவு மற்றும் சபர்மதி - சனந்த் - ஜக்வாடா ஆகிய பிரிவுகளஇல் 122.57 கி.மீ., தூத்திற்கு இந்த தானியங்கி பிளாக் சிக்னலிங் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு உபதேசம் செய்யக்கூடாது: பாக். பிரதமர் பேச்சுக்கு இந்தியா கடுமையான கண்டனம்

ரயில்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பதுடன் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கான திறனை அதிகரிக்கச் செய்யும்.

சபர்மதி - சார்கேஜ் இரட்டை ரயில்பாதை திட்டம்

ரூ.313.27 கோடி மதிப்பில் 21 கி.மீ., தூரத்திற்கு நடைபெறும் இந்த இரட்டிப்பு பணியில் சபர்மதி, காந்திகிராம், வஸ்த்ராபூர் மற்றும் சார்கேஜ் ஆகிய ரயில் நிலையங்கள் அடங்கும். மேலும் பல பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

சார்கேஜ் - தோலோரா பிராந்தியத்திற்கான இணைப்பை மேம்படுத்தி, தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு இது உறுதுணையாக அமையும். இதை 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WAG-12 லோகோமோட்டிவ் பராமரிப்பு பணிமனை

சபர்மதியில் ரூ.700  கோடி மதிப்பீட்டில் 12 ஆயிரம் HP கொண்ட அதிநவீன 300 WAG-12 மின்சார  சரக்கு ரயில் என்ஜின்களை பராமரிக்கும் பிரம்மாண்டப் பணிமனையை அமித்ஷா திறந்துவைத்தார்.

மேலும் படிக்க | மிகப்பெரிய வங்கி கொள்ளை... ரூ.33.62 கோடியில் தங்கம், பணம் அபேஸ் - ஜார்க்கண்டில் நடந்தது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Railways