• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்! இனி என்ன ஆகும்?

Explained : 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்! இனி என்ன ஆகும்?

சீன அதிபரான ஜின்பிங், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வருகிறார். இந்த பயணத்தின் முக்கியத்துவங்கள் என்ன என்பது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 11, 2026, 06:03 PM IST|Updated: Sep 11, 2026, 06:04 PM IST
joinshare
Explained : 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்! இனி என்ன ஆகும்?
Image Credit: Xi Jinping | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சீனாவின் அதிபரான ஜி ஜின்பிங், கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 12-13ஆம் தேதிகளில், புதுடெல்லியில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாடு:

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சினா மற்றும் தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துக்களை கொண்ட இந்த கூட்டமைப்பு BRICS என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பில் இப்போது எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் முழு உறுப்பினர்களாக இணைந்து விட்டன.

2001ஆம் ஆண்டு BRIC எனும் சொல் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’நீல் என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்னாளில், 2006ஆம் ஆண்டு, இது முறைப்படுத்தப்பட்டு முதல் உச்சி மாநாடு 2009ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைப்பெற்றது.

உலக நாடுகளிடையே இருக்கும் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட பங்கினை, இந்த கூட்டமைப்பு கொண்டுள்ளது. அத்துடன், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கும் வகிக்கிறது.

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஜின்பிங்:

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவிற்கு வருகை தருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா வரும் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நிகழ்த்தி, பேச்சுவார்த்தை நடத்துவாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு முபாக, 2019ஆம் ஆண்டில்தான் கடைசியாக ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் நடைப்பெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் என உலகளவில் பல பதற்றமான சூழல்கள் நிலவும் காலத்தில் சீன அதிபர் இந்தியாவிற்கு வருகை புரிவது என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Explainer: சீன அதிபரின் இந்திய வருகை.... BRICS உச்சிமாநாட்டையும் தாண்டி 4 காரணங்கள்

ஜி ஜின்பிங்கின் வருகை ஏன் அவ்வளவு முக்கியம்?

2020ஆம் ஆண்டு, மே-ஜூன் மாதத்தில், இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே கடும் மோதல் வெடித்தது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன படையினர் எல்லைக்கோட்டை தாண்டி ஊடுருவி முகாம்களை அமைக்க முயற்சி செய்த்தாக இந்திய வீரர்கள் குற்றம் சாட்டினர். இதை இந்திய வீரர்கள் தட்டிக்கேட்டதக்வும், அப்போது மோதல் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

1996ல் இரு நாடுகளின் கட்டுப்பாட்டு கோட்டிற்கு 2 கிலோ மீட்டரூக்கு அருகில், துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்திருந்தன. இதனால், இந்த சண்டையின் போது இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கியை பயன்படுத்தாமல் கற்கள், தடிகள், இரும்புக்கம்பிகளை கொண்டு தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில், இந்தியா தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 20 பேர் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சீனாவின் தரப்பில், சுமார் 43 வீரர்கள் படுகாயமடைந்திருக்கவோ, உயிரிழந்திருக்கவோ வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இதில் இந்தியர்கள் சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தியாவிற்கு வருவதை தவிர்த்த ஜின்பிங்:

இதற்கு பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். இந்தியாவின் டெல்லியில் நடந்த 2023ல் நடந்த G20 மாநாட்டில் அவர்கலந்து கொள்ளவில்லை. இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழலை, இந்த பிரிக்ஸ் மாநாடு உருவாக்கும் என தெரிகிறது.

இந்தியா-சீனா இடையே இருக்கும் பிரச்சனைகள்:

இந்தியா-சீனா இடையேயான உறவு என்பது, தற்போது ஒரு மாற்றத்தை சந்தித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நம்பிக்கியில்லா தன்மை, வர்த்தக பற்றாக்குறை உள்ளிட்டவை இரு பெரும் பிரச்சனைகளாக பார்க்கப்படுகின்றன.

இதில், அதிகாரிகளின் கூற்றின்படி ஜின்பிங் பயணத்தின் போது 400 பிரதிநிதிகள் கொண்ட மிகப்பெரிய குழுவை அழைத்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறுகின்றனர்.

கல்வான் சம்பவம் நடந்த பிறகு, ஜின்பிங் இந்தியாவிற்கு முதல்முறை வருகிறார் என்பதால், இந்த சந்திப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது இரு நாடுகளுக்கு இடையேயுள்ள ஒட்டுமொத்த உறவையும் பதிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, வர்த்தக கூட்டாண்மையையும் இது பாதிக்கும் என கூறப்படுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்கள், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் நடந்தது. இதன் பிறகு, சீன முதலீடுகள் மீதான சில கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியிருக்கிறது.

வணிக தடைகள்:

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும், பொருளாதார ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் சில தடைகள் நீடிக்கின்றன. சீனாவின் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமிக்கு எதிரான தீவிர மோசடி குறித்தும் இந்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஏற்பட்டதக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அந்நிய முதலீட்டு சட்டங்களை மீறியதாக கூறப்படும் விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவை போலவே சீனாவும் இந்திய பொருட்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இப்படி இரு நாடுகளுக்கான வர்த்தக ரீதியிலான சிக்கல் தீர வேண்டும் என்றால் இந்தியா-சீனா இடையே இணக்கமான சூழலை கட்டமைப்பது அவசியம் ஆகும். அதை இந்த ப்ரிக்ஸ் மாநாடுதான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | BRICS Summit 2026: இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின்: இன்று பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:
India