• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /மகிழ்ச்சியில் ஓய்வூதியதாரர்கள்: கூடுதல் ஓய்வூதியத்தை அதிகரித்து மாநில அரசு உத்தரவு

மகிழ்ச்சியில் ஓய்வூதியதாரர்கள்: கூடுதல் ஓய்வூதியத்தை அதிகரித்து மாநில அரசு உத்தரவு

Pension Hike: ஆந்திர பிரதேச ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஆந்திரப் பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 70 மற்றும் 75 வயதுடைய தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய விகிதங்களை அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

Written BySripriya Sambathkumar
Published: Sep 24, 2026, 09:11 AM IST|Updated: Sep 24, 2026, 09:16 AM IST
joinshare
மகிழ்ச்சியில் ஓய்வூதியதாரர்கள்: கூடுதல் ஓய்வூதியத்தை அதிகரித்து மாநில அரசு உத்தரவு
Image Credit: Representative / Additional Pension Hike

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Pension Hike: வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஓய்வூதியதாரர்களுக்கு அவர்கள் மாதா மாதம் பெறும் ஓய்வூதியம் மிக முக்கியமாகும். மாத ஓய்வூதியம் அவர்களது ஓய்வுகால நிதி ஆதாரமாக விளங்குகிறது. ஓய்வூதியதாரர்களின் தேவை மற்றும் அரசின் நிதி நிலைக்கு உட்பட்டு மத்திய, மாநில அரசுகள் அவ்வபோது ஓய்வூதியத்தில் சில திருத்தங்களை செய்கின்றன.

அந்த வகையில், ஆந்திர பிரதேச ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஆந்திரப் பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 70 மற்றும் 75 வயதுடைய தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய விகிதங்களை அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விகிதங்களின்படி, 70 வயதுடையவர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் 7%-லிருந்து 10%-ஆகவும், 75 வயதுடையவர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் 12%-லிருந்து 15%-ஆகவும் உயரும்.

மேலும் படிக்க | அக்டோபர் 1 முதல் இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து: மாநில அரசு கூறியது என்ன?

செப்டம்பர் 22 அன்று அரசு அறிவிப்பை வெளியிட்டது

ஆந்திரப் பிரதேச அரசின் நிதித் துறை இது தொடர்பான அறிவிப்பை செப்டம்பர் 22 அன்று வெளியிட்டது. அமராவதியில் உள்ள ஆந்திரப் பிரதேச ஓய்வூதியதாரர்கள் சங்கம், கூடுதல் ஓய்வூதிய விகிதங்களை மாற்றியமைக்குமாறு மாநில அரசிடம் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உள்ள ஓய்வூதிய விகிதங்களை அரசு திருத்தியது.

ஓய்வூதிய உயர்வு

அரசின் இந்த அறிவிப்பின் மூலம்,

  • 70 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் அடிப்படை ஓய்வூதியத்துடன் 10 சதவீத கூடுதல் தொகையைப் பெறுவார்கள் (இது முன்பு 7 சதவீதமாக இருந்தது). 
  • 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் அடிப்படை ஓய்வூதியத்துடன் 15 சதவீத கூடுதல் தொகையைப் பெறுவார்கள் (இது முன்பு 12 சதவீதமாக இருந்தது).

மேலும் படிக்க | நடு ரோட்டில் சிறுமியிடம் அத்துமீறல்! 20 நிமிடமாக துடித்த மாணவி..பீகாரில் அதிர்ச்சி

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதிய விகிதங்களில் மாற்றமில்லை

80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, இந்த விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. 80 வயதை எட்டியவர்கள் முன்பைப் போலவே தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் கூடுதலாக 20 சதவீதத்தைப் பெறுவார்கள். 
முதிய வயதுப் பிரிவினருக்கான கூடுதல் ஓய்வூதிய விகிதங்கள் பின்வருமாறு தொடரும்:

  • 85 வயதுடையவர்களுக்கு 25 சதவீதம், 
  • 90 வயதுடையவர்களுக்கு 30 சதவீதம், 
  • 95 வயதுடையவர்களுக்கு 35 சதவீதம் மற்றும் 
  • 100 வயதுடையவர்களுக்கு 50 சதவீதம்.

புதிய ஓய்வூதியத் தொகை எப்போது கிடைக்கத் தொடங்கும்?

நிதித் துறையின் தகவலின்படி, 70 மற்றும் 75 வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கான திருத்தப்பட்ட விகிதங்கள் டிசம்பர் 2026-க்கான ஓய்வூதியப் பணம் முதல் அமலுக்கு வரும். இத்தொகை ஜனவரி 1, 2027 அன்று வழங்கப்படும்.

அனைத்து வழிகாட்டுதல்களும் பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு உத்தரவின்படியே பின்பற்றப்படும் என்று அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய விகிதங்கள் சுமூகமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு, கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கூடுதல் ஓய்வூதியத்தில் வயது வாரி அதிகரிப்பை கோரியுள்ளன. இதற்கான பரிந்துரை 8வது ஊதியக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுடன் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஓய்வூதிய உயர்வு அதிகரிக்கப்பட்டால் அது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக அமையும்.

மேலும் படிக்க | UNSC-இல் நிரந்தர உறுப்பினராக இந்தியா எடுக்கும் முயற்சிக்கு 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

Add Zee News as a Preferred Source
TAGS:
Government Employees