SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரயிலில் போன் சார்ஜ் போட இனி கட்டுப்பாடு! ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு..

சமீபத்தில் ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து, அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written By Yuvashree M
Published: Oct 28, 2026, 10:58 AM IST | Updated: Oct 28, 2026, 11:05 AM IST
Join

ரயிலில் நெடுந்தூரம் பயணம் செய்பவர்களுக்கு, வரப்பிரசாதமாக இருக்கிறது, செல்போன் சார்ஜர். அனைத்து விதமான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், பயணிகள் தங்களுடைய செல்போன்களை சார்ஜ் போடுவதற்கு வசதியாக ஃப்ளக் பாய்ண்ட் கொடுக்கப்பட்டிருக்கும். பயணிகளும், தங்களின் வசதிக்கேற்ப சார்ஜ் போட்டுக்கொள்வர். அதே போல, பயணத்தின் போது பலர் தங்கள் லேப்டாப்பில் வேலை பார்த்துகொண்டும் வருவர். அவர்களுக்கும் இந்த சார்ஜின் வசதியாக இருக்கும். ஆனால், இப்போது அதற்கு கெடுபிடி வந்துள்ளது.

பவர்பேங்க் வெடித்தது!

சமீபத்தில், தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்பட்ட ரயிலில் பயணித்த பயணி ஒருவர், தன்னுடைய பவர் பேங்கில் சார்ஜ் இல்லாத காரணத்தால் அதற்கு சார்ஜ் போட்டுவிட்டு, தூங்கியிருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடு இரவில் அந்த பவர் பேங்க் வெடித்து அதிலிருந்து புகை வந்துள்ளது. இது அனைவரையும் தூக்கி வாரிப்போடும் அளவிற்கு பயமுறுத்தும் விஷயம் என்றாலும், யாருக்கும் பெரிதாக காயமோ அடியோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.

சார்ஜ் போடுவதில் கெடுபிடி!

மேற்கூறிய சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. ரயில்வெ வாரியத்தின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவு, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது.

அதன்படி, ரயில் பெட்டிகளில் இருக்கும் சார்ஜிங் பாய்ண்டிகளின் மின் இணைப்பை, இரவு 11 மணி முதல், அதிகாலை 5 மணி வரை துண்டிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரயில்வே  வாரியத்தின் சுற்றறிக்கை..!

இது குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டிருக்கும் உத்தரவில், “சார்ஜிங் பாயிண்ட் அனைத்து வகைப்படும் விஷயத்தில் எந்த விதிவிலக்கும் இருக்க கூடாது. நடைமுறையை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கல், திடீர் ஆய்வு மேற்கொண்டு, உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டிஏ உயர்வு, சம்பள உயர்வு, டிஏ அரியர்: அரசு ஊழியர்களுக்கு 3 பரிசுகள்.. இன்று அறிவிப்பா?

பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பொதுவாகவே, நம்முடைய செல்போனை இரவு நேரம் முழுவதும் சார்ஜ் போடக்கூடாது என பிறர் சொல்வதை கேட்டிருப்போம். காரணம், தலையணைக்கு அடியில் அல்லது காற்றோட்டம் இல்லாத இடங்களில் போனை வைத்து இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் போது அதில் அதிக வெப்பம் உருவாகி, பேட்டரிக்கும் போனில் உள்ள உறுப்புகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். மின்சார வாரியத்தின் எச்சரிக்கையின்படி, தூங்கும் போது, சார்ஜ் போடுவதால் மின்கசிவு அல்லது அதிக வெப்பமடைந்தல் காரணமாக எதிர்பாராத தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து ரயில் பெட்டிகளின் இருக்கைகளுக்கு அருகிலும் சார்ஜிங் பாய்ண்ட் இருந்தாலும், அதில் ஒரு சில பாய்ண்ட்கள் அவ்வப்போது வேலை செய்யாமல் போகலாம். அது மட்டுமன்றி, ஒரு பக்க இருக்கையில் ஆறு பேர் வரை அமர்ந்திருப்பர். அவர்களில் அனைவருக்குமே சார்ஜரை பயன்படுத்த வேண்டும் எனும் சூழல் வரும் போது, அவர்கள் இதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படலாம். இருப்பினும், உயிரா-சார்ஜா? என்று வரும் போது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவை நீங்கள் எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சார்ஜ் போடும் வழிமுறைகள்..

ரயிலில் இருக்கிறீர்களோ, வீட்டில் இருக்கிறீர்களாே, எங்கு இருந்தாலும் நீங்கள் உங்கள் போனை அவ்வப்போது சார்ஜில் வைப்பதை நிறுத்த வேண்டும். அதாவது, உங்கள் போன் 20 சதவீதம் வந்தவுடன் சார்ஜில் போட வேண்டும், 80 சதவீதம் முடிந்தவுடன் போனை சார்ஜில் இருந்து எடுத்து விட வேண்டும். அப்போதுதான் உங்கள் போனின் பேட்டரி வாழ்நாள் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | கரையை கடக்கும் அர்னாப் புயல்!! தத்தளிக்கும் ஆந்திரா, தயாராகும் ஒடிசா

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES