• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /2024 மக்களவை தேர்தலே முறைகேடாக நடந்தது... ராகுல் காந்தி சொல்லிய முக்கிய பாயிண்ட்ஸ்

2024 மக்களவை தேர்தலே முறைகேடாக நடந்தது... ராகுல் காந்தி சொல்லிய முக்கிய பாயிண்ட்ஸ்

Rahul Gandhi: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேச விரோதிகள் என்றும் தேர்தல் ஆணையத்தின் இவ்வளவு பெரிய முறைகேடுகளுக்கு காரணமான மோடி, அமித்ஷாவை விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

Written BySudharsan G
Published: Sep 24, 2026, 20:25 IST|Updated: Sep 24, 2026, 20:27 IST
joinshare
2024 மக்களவை தேர்தலே முறைகேடாக நடந்தது... ராகுல் காந்தி சொல்லிய முக்கிய பாயிண்ட்ஸ்
Image Credit: Rahul Gandhi Demands CEC Gyanesh Kumar Resignation at Delhi Press Meet | Image Source : X/@RahulGandhi

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

2

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

3

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

4

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

5

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Rahul Gandhi Latest News : SIR குறித்து தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பை பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினர் செயலாளருக்கு தேர்தல் ஆணையர்கள் அனுபபிய 14 கடிதங்களை நேரடியாக ஆய்வு செய்ததில் இது அம்பலமானதாக The Indian Express ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார் மீதும் மற்றும் மத்திய பாஜக அரசு மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும் படிக்க | வெளிச்சத்திற்கு வந்த SIR குளறுபடிகள்.. தேர்தல் ஆணையர் மீது பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது?

ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏன் இல்லை...?

அதில் அவர், "இந்தியாவில் 'ஆட்சிக்கு எதிரான மனநிலை' (Anti-Incumbency) பாஜகவுக்கோ, மோடிக்கோ ஏற்படுவதில்லை. ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏன் ஏற்படுவதில்லை?, இதுவே அடிப்படையான கேள்வியாக உள்ளது.

வடகொரியா போன்ற நாடுகளில் ஆட்சிக்கு எதிரான மனநிலை என்ற பேச்சே கிடையாது. எங்கெல்லாம் ஜனநாயகம் இல்லையோ அங்கெல்லாம் அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை வெளிப்படாது.

2024 தேர்தல் மோசடி

இந்தியாவில் வாக்காளர்களால் நிர்ணயிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகள் திருடப்படுகின்றன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முடிவு மாற்றப்படுகிறது. வாக்குரிமை சிதைக்கப்பட்டால் அரசமைப்பு தனது அதிகாரத்தை இழந்து செயலற்றதாகிவிடும்.

LIVE: Press Conference | Indira Bhawan, New Delhi https://t.co/fGqRz6JtQM

— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2026

2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது. முறைகேடாக நடந்த தேர்தலில் வென்ற எம்.பி.க்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் சட்டவிரோதமானவை. 2024 தேர்தலுக்கு பின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

மோடி, அமித்ஷா தோற்கவில்லை ஏன்...?

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது, நாம் அனுபவிப்பதுதான் மிகவும் மோசமான காலகட்டம். தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டிய தேர்தல் ஆணையமே தேர்தலை முறைகேடாக நடத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்... மீண்டும் களத்திற்கு குதிக்கும் CJP

மக்களாட்சியை காப்பாற்ற வேண்டிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அத்தனை முறைகேடுகளையும் செய்திருக்கிறார்.  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரை விரும்பி தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி. முக்கிய தலைவர்கள் தோல்வியடைகிறார்கள். மோடி, அமித்ஷா மட்டும் ஏன் தோற்கவில்லை.

The vote is the foundation of Indian democracy. 

From the vote flows the power of our Constitution, the authority of our laws, and the legitimacy of our public institutions - this chain defines modern India. 

Today this chain is broken, and this has never happened in India… pic.twitter.com/rUnA4uU8B7

— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2026

பிரதமர் மோடி தேச விரோதி

இவ்வளவு பெரிய முறைகேடுகளுக்கு காரணமான மோடி, அமித்ஷாவை விரிவாக விசாரிக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தை அழித்த அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேச விரோதிகள்.

SIR நடவடிக்கைகளில் குளறுபடி, வாக்கு திருட்டை காங்கிரஸ் அம்பலப்படுத்திய அதே நேரத்தில்தான் தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை கடிதம் எழுதி உள்ளனர்.  ஹரியானா, உத்தர பிரதேசத்தில் பாஜக வெல்வதற்காக SIR செயல்முறையில் குளறுபடி நடந்துள்ளது.

मैं तीन साल से वोट चोरी का पर्दाफ़ाश करता आ रहा हूँ। अब चुनाव आयुक्त खुद इसे स्वीकार कर सच्चाई उजागर कर रहे हैं।

ज्ञानेश कुमार ने देशद्रोह किया है। वो अभी इस्तीफ़ा दें और approver बन जाएं।

वोट चोरी की साज़िश में नरेंद्र मोदी और अमित शाह की पूरी जांच होगी। pic.twitter.com/l7K0e1fSua

— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2026

தமிழ்நாடு தேர்தல் மீதும் சந்தேகம்

நடந்து முடிந்த தேர்தல்களில் முக்கிய தலைவர்கள் தோற்றுள்ளனர். தமிழ்நாடு தேர்தல் தொடர்பாகவும் தேசிய அளவில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும். வாக்கு திருட்டு மூலமாக அரசியலமைப்பு திருட்டும் நடந்துள்ளது" என தெரிவித்திருந்தார்.

விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

இவை ஒருபுறம் இருக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டுவர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க | Explainer: ஊழியர்களுக்கு மத்திய அரசின் CGHS பரிசு: 5 கிமீ கட்டுப்பாடு இனி கிடையாது, முக்கிய விதியில் மாற்றம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Rahul Gandhi