• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /ஸ்டாலின், மம்தா தேர்தல் தோல்வி... பின்னணியில் SIR...? - கேள்வி எழுப்பும் CJP

ஸ்டாலின், மம்தா தேர்தல் தோல்வி... பின்னணியில் SIR...? - கேள்வி எழுப்பும் CJP

CJP Demands Gyanesh Kumar Resignation: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டும் என்றும் இல்லையெனில் காக்ரோச் ஜனதா கட்சி நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.

Written BySudharsan G
Published: Sep 24, 2026, 04:32 PM IST|Updated: Sep 24, 2026, 08:30 PM IST
joinshare
ஸ்டாலின், மம்தா தேர்தல் தோல்வி... பின்னணியில் SIR...? - கேள்வி எழுப்பும் CJP
Image Credit: CJP Demands Gyanesh Kumar Resignation | Images Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

CJP Demands Gyanesh Kumar Resignation: காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே இன்று (செப். 24) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அபிஜித் தீப்கே, "தலைமை தேர்தல் ஆணையர்தான் மிகப்பெரிய தேச விரோதி.

நாட்டின் மிகப்பெரிய தேச விரோதி ஞானேஷ் குமார்தான். இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்" என சீறினார்.

மேலும் படிக்க | வெளிச்சத்திற்கு வந்த SIR குளறுபடிகள்.. தேர்தல் ஆணையர் மீது பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது?

VIDEO | Delhi: Addressing a press conference, Cockroach Janata Party founder Abhijeet Dipke, says, "Chief Election Commissioner is the biggest anti-national. Gyanesh Kumar is the biggest anti-national of this country. He should resign immediately because he is the biggest threat… pic.twitter.com/rX9UHkJ4wY

— Press Trust of India (@PTI_News) September 24, 2026

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டும் என்றும் இல்லையெனில் காக்ரோச் ஜனதா கட்சி நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.

வாக்காளர்களை அரசு தீர்மானிப்பதா...?

நம் நாட்டில் ஜனநாயகம் என்றால் என்ன?, மக்களே அரசு தேர்ந்தெடுப்பதுதான் ஜனநாயகம் ஆகும். ஆனால், ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றதில் இருந்து யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்கக் கூடாது என்பதே அரசே தீர்மானிக்கத் தொடங்கி உள்ளது.

இதுதான் ஜனநாயகமா...? இது எத்தகைய ஜனநாயக வரையறை...? ஜனநாயகத்தின் ஒட்டுமொத்தத் கருத்தாக்கத்தையே தலைகீழாக மாற்றிவிட்டீர்கள்" என சாடினார்.

48 மணிநேரம் கெடு

48 மணிநேரத்தில் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி தொடங்கும் என்றும்; ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும்வரை போராட்டத்தை தொடர்வோம்" என தெரிவித்தார்.

13 கோடி வாக்குகள் அழிக்கப்பட்டன

மேலும், "மொத்தமாக 13 கோடி வாக்குகள் அழிக்கப்பட்டிருந்தது. இது குறைந்த எண்ணிக்கை இல்லை. 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கும், ஆளுங்கட்சி கூட்டணிக்கும் 2% தான் வித்தியாசம். 13 கோடி வாக்குகள் என்பது சுமார் 13% - 14%  வாக்குகள் நீக்கப்பட்டதற்கு சமம்.

மேலும் படிக்க | Explainer: ஊழியர்களுக்கு மத்திய அரசின் CGHS பரிசு: 5 கிமீ கட்டுப்பாடு இனி கிடையாது, முக்கிய விதியில் மாற்றம்

அந்த 2 சதவீத இடைவெளியை அதிகமாக்கி தாங்கள் ஒருபோதும் ஆட்சியை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே ஞானேஷ் குமார் அவற்றை வேண்டுமென்றே வாக்காளர்களை நீக்குகிறாரா...? இது ஏன் செய்யப்படுகிறது...? இவ்வளவு அதிகமான வாக்குகளை நீக்க வேண்டிய அவசியம் என்ன இருந்தது...?

பதற்றமடைந்த பாஜக...

2024 மக்களவை தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது அவர்கள் பதற்றமடைந்தனர். 400க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்வைத்த அவர்கள், 240 இடங்களையே பெற்றனர்.

நாட்டு மக்களின் மனநிலை மாறி வருவதையும், பிராந்திய சக்திகள் மிக வலுவாக உருவெடுத்து வருவதையும் அவர்கள் உணர்ந்தனர்" என குறிப்பிட்டார். இதனாலேயே, 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்த மூன்று முதலமைச்சர்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டார்கள் என தீப்கே பேசினார்.

தோற்கடிக்கப்பட்ட முக்கிய தலைவர்கள்

இதுகுறித்து மேலும் பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தொகுதியில் இருந்கு 50 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டன, அவர் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மு.க.ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன, அவர் சுமார் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அதேபோல், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதியில் இருந்து 40 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டன, அவர்கள் 4 ஆயிரம் - 5 ஆயிரம் வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்" என குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான சுதந்திரமான தேர்தல் வேண்டும்...

எங்களுக்கு எதிர்க்கட்சியின் மீதோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட கட்சியின் மீதோ எந்தவிதமான தனிப்பட்ட அக்கறையும் இல்லை. ஆனால், ஒரு ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி முழுவதையும் ஒழித்துக்கட்டிவிட்டால், அதை எப்படி ஜனநாயகம் என அழைக்க முடியும்...? அது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்குமா...?" என கேள்வி எழுப்பினார்.

மூன்று முக்கிய கோரிக்கைகள்

மேலும், சுதந்திரமான நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேபோல், மூன்று முக்கிய கோரிக்கைகளையும் அவரது X பக்கத்தில் அபிஜித் தீப்கே குறிப்பிட்டுள்ளார். அவை இதோ:

Gyanesh Kumar must go! 

Demand 1: Initiation of criminal proceedings against Gyanesh immediately, and an answer to the question: Who gave him the orders?

Demand 2: Put all upcoming elections on hold. Freeze the SIR and restore the January 2025 voter list. Set up an independent…

— Abhijeet Dipke (@abhijeet_dipke) September 24, 2026

முதல் கோரிக்கை: ஞானேஷ் குமார் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும்; அத்துடன் அவருக்கு உத்தரவிட்டது என்ற கேள்விக்கு விடை அளிக்கப்பட வேண்டும்.

2வது கோரிக்கை: நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களையும் நிறுத்திவைக்க வேண்டும். SIR நடைமுறையை முடக்கி, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான வாக்காளர் பட்டியலை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். எந்தவொரு ஆவணமும் அழிக்கப்படவோ, மாற்றப்படவோ அல்லது காணாமல் போகவோ இல்லை என்பதை உறுதிசெய்ய SIR தொடர்பான அனைத்து கோப்புகளையும் உச்சநீதிமன்றம் உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

3வது கோரிக்கை: இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான 2023ஆம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிவில் சமூகத்தினரின் தீவிரப் பங்கேற்புடன், பொதுமக்களின் நம்பிக்கையை பெறும் வகையிலான புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... நாளைக்கே வருது சம்பளம்...!

Add Zee News as a Preferred Source
TAGS:
India