• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /30 வயதில் ராணுவத்திலிருந்து ரிட்டையர் ஆன குடியரசு தலைவரின் மெய்காப்பாளர்! காரணம் என்ன?

30 வயதில் ராணுவத்திலிருந்து ரிட்டையர் ஆன குடியரசு தலைவரின் மெய்காப்பாளர்! காரணம் என்ன?

குடியரசு தலைவரின் மெய்க்காப்பாளராக இருந்த ரிஷப் சிங் சாம்பயால், தன் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 14, 2026, 11:28 AM IST|Updated: Sep 14, 2026, 11:39 AM IST
joinshare
30 வயதில் ராணுவத்திலிருந்து ரிட்டையர் ஆன குடியரசு தலைவரின் மெய்காப்பாளர்! காரணம் என்ன?
Image Credit: Major Rishabh Singh | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

3

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

4

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

5

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

குடியரசு தலைவர், திரௌபதி முர்முவின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர்தான், மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால். இவர், திரௌபதி முர்மு கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளில் அவருக்கு பின் நின்று வைரலானவர் இவர். இவரை பெண்கள் பலர் ’நேஷனல் க்ரஷ்’ என்று குறிப்பிட்டதோடு, சமூக வலைதளஙகளில் இவரை பெரிதும் பிரபலமும் ஆக்கினார்.

ஓய்வு பெறுவதாக அறிவிப்பு:

குடியரசு தலைவரின் உதவி மெய்க்காப்பாளராக இருந்து, இந்தியா முழுவதும் பிரபலமான மேஜர் ரிஷப், தன்னுடைய பணியை 2013ஆம் ஆண்டு தொடங்கினார். இதன் பிறகு, இவர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியதோடு பின்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் மெய்க்காப்பாளராக பணியில் சேர்ந்தார். 2021ஆம் ஆண்டு, குடியரௌ தின அணிவகுப்பில் அப்போதைய கேப்டனாக இருந்த ரிஷப் சிங் சம்ப்யால், ஜாட் ரெஜிமெண்ட் அணிவகுப்பு குழுவினை வழிநடத்தினார். இந்த அணிவகுப்பு குழு சிறந்த அணிவகுப்பு குழுவிற்ற்கான விருதையும் வென்றது.

குடியரசு தலைவரின் மெய்க்காப்பாளராக இருந்து, அந்த பொறுப்பை நிறைவு செய்து விட்டு மீண்டும் ராணுவ பணிக்கு மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால் திரும்பினார். தன்னுடைய பணிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, இந்திய ராணுவத்தில் இருந்து, முன்கூட்ட்யே ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருக்கிறார். இவர், சுமார் 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதோடு, தற்போது தன்னுடைய ராணுவ பணிக்கு விடை கொடுத்திருக்கிரார்.

மேலும் படிக்க | பிரதமரை சந்தித்த பள்ளி நண்பர்... சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை - என்ன மேட்டர்?

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by HINDUSTAN (@hindustan)

 மேஜர் ரிஷப், தன்னுடைய ஓய்வை அறிவித்ததோடு இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ரிஷப், ராணுவத்தில் இருந்து விலகியதற்கு தனிப்பட்ட காரணங்களும், குடும்ப காரணங்களும் இருக்கலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இவருடைய பணி, அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் இது நிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

வீடியோவில் குறிப்பிட்ட விஷயம்..!

இது குறித்து ரிஷப் சிங்கே ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில், தான் குழந்தையாக இருந்த போதிலிருந்து எப்போதும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று கருதியதாகவும் இப்படி ஓய்வை அறிவிப்பேன் என்று நினைத்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

”ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு சூழ்நிலை வரும், சில சந்தர்ப்பங்கள் அமையும். அவை, நம் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, சில தனிப்பட்ட காரணங்களினால் நான் இதிலிருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறேன்.

இதுவரை நான் சாதித்த எல்லாவற்றிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருப்தியகவும் இருக்கிறேன். உங்கள் அனைவரது ஆதரவோடும், ஆசீர்வாதத்தோடும் என்னுடைய அடுத்தக்கட்ட வாழ்க்கை இன்னும் வெற்றிகரமாகவோ அல்லது இன்றைக்கு நான் செய்ததை விட சிறப்பாகவோ அமையும்.

எனக்கு கொடுத்த ஆதரவுக்கும், ராணுவ காலங்கள் முழுவதும் நீங்கள் அளித்த அன்பிற்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

திருமணத்திற்கு தடை!

ரிஷப், இன்னும் சில விஷயங்களையும் கூறியிருக்கிறார். அதாவது, தான் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாவலராக இருந்த போது நெறிமுறைப்படி தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறியுள்ளர். அதே போல, இவர் தன்னுடைய குடும்பத்தினரிடமிருந்தும் தள்ளியிருக்க வேண்டும் என்பது மிகப்பெறிய தியாகமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தன்னுடைய தனிப்பட்ட மற்றும் உறவுகளுக்கான வாழ்க்கைக்கு இடமே இல்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | பவர்கட் பஞ்சாயத்து Explained: மின்சாரம் இருக்கிறது... ஆனாலும் மின்வெட்டு வருவது ஏன்?

Add Zee News as a Preferred Source
TAGS:
India