மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து அந்நகரில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே இன்று காலை மோதல் வெடித்ததால் கடும் பதற்றம் நிலவி வருகிறது. கற்கள் வீசப்பட்டதாகவும், கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உஜ்ஜைனில் அடுத்த 2028ஆம் ஆண்டில் கும்பமேளா நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு நகரின் முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 730 மீட்டர் நீளமுள்ள சாலையை 15 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் வழித்தடத்தில் ஷாஹி மசூதியின் ஒரு பகுதி அமைந்துள்ளது. எனவே, அந்தப் பகுதியை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துளளது. இதற்கு மசூதி நிர்வாகமும், உள்ளூர் இஸ்லாமிய சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Police used tear gas shells to control a crowd in Ujjain as stone pelting occurred when a large group of people clashed with them at the spot where a portion of Shahi Masjid is planned to be demolished for a road-widening project. Rapid Action Force (RAF) personnel are also… pic.twitter.com/ntqfaGXR2S
— WION (@WIONews) September 28, 2026
மசூதி அமைந்துள்ள பகுதியை தவிர்த்து, எதிர்புறத்தில் உள்ள இடத்தை பயன்படுத்தி சாலையை விடுவுபடுத்தலாம் என்பது போராட்டாக்காரர்களின் வாதமாக உள்ளது. மத வழிபாட்டுத் தலங்களை சாலை விரிவாக்கத்திற்காக அகற்றக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உஜ்ஜைன் கோவில் நகரம் என பெயர் பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும். இங்குள்ள காளி கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். 2028ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் கும்பமேளா விழாவுக்கு உஜ்ஜைன் நகரம் தற்போதே தயாராகி வருகிறது.
கோடிக்கணக்கான பக்தர்கள் உஜ்ஜைன் நகருக்கு வருகை தருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பக்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாலை மற்றும் பிற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த சாலைத் திட்டத்தின் கீழ் மொத்தம் 272 கட்டடங்கள் பாதிக்கப்படும் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். சாலை விரிவாகத்திற்காக சுமார் ரூ.9.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Ujjain, Madhya Pradesh: A Police personnel makes an announcement to the crowd, urging them not to pelt stones as the Police attempt to speak to them.
The situation remains tense in the area around Shahi Masjid in Ujjain as clashes between a crowd and Police continue. A… pic.twitter.com/RGUSO5tHhg— ANI (@ANI) September 28, 2026
இதனிடையே, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவின் குடும்பத்துக்குச் சொந்தமான பூர்வீக வீட்டின் ஒரு பகுதியும் இந்த சாலைத் திட்டத்திற்குள் வருவதால் அவரே நேரடியாக அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது சாலை விரிவாக்கத்திற்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் விதமாக இருந்தது.
இந்த விவகாரம் ஏற்கெனவே நீதிமன்றத்திற்குச் சென்றது. ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் மாநகராட்சியின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இந்த மாதம் நிராகரித்தது.
சாலை விரிவாக்க நடவடிக்கையில் அதிகாரிகள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், மசூதி ஒரு மத வழிபாட்டுத் தலம் என்பதற்காக மட்டும் குறிவைக்கப்பட்டதாக கூறப்பட்ட வாதத்தையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.
உஜ்ஜைன் நகரில் சாலை விரிவாக்க நடவடிக்கைகளால் ஏற்கெனவே பிற மத வழிபாட்டுத் தலங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஷாஹி மசூதியைச் சுற்று ஏராளமானோர் நேற்று (செப். 27) முதல் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது பதற்றம் அதிகரித்தது.
செப்டம்பர் 28ஆம் தேதி அன்று போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தை கலைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. Rapid Action Force உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Madhya Pradesh: Situation remains tense in the area around Shahi Masjid in Ujjain as clashes between a crowd and Police continue. Police use tear gas shells and resort to baton charge for crowd control. Stone pelting also seen here.
The clash began this morning when a… pic.twitter.com/mfnIJetnJU— ANI (@ANI) September 28, 2026