SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

463 கிலோ மீட்டருக்கு பிரேக் பிடிக்கமல் சென்ற வந்தே பாரத் ரயில்! யாருக்கும் ஆபத்து இல்லையே..?

ஆளில்லா வந்தே பாரத் ரயில் ஒன்று, 463 கிலோ மீட்டருக்கு பிரேக் பிடிக்காமல் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 16, 2026, 11:50 IST | Updated: Nov 16, 2026, 12:29 IST
Image Credit: Vande Bharath | X Page
Join

இந்தியாவில், அதிவேகமாக செல்லும் ரயில்களுள் ஒன்றாக இருக்கிறது வந்தே பாரத். இந்த ரயில், ஜார்காண்ட்-உத்தர பிரதேசத்திற்கு இடையே சென்ற ரயில், பிரேக் பிடிக்காமல் சென்றிருக்கிறது.

என்ன நடந்தது..?

ஜார்காண்ட் முதல், உத்தரபிரதேசத்திற்கு இடையே கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ஆளில்லா வந்தே பாரத் ரயில், பிரேக் சரியாக வேலை செய்யாத போதும் 463 கிலோ மீட்டர்கள் பயணித்திருக்கிறது. இதை ஓட்டிய லோகோ பைலட், கொடுத்த பல்வேறு வார்னிங்கிற்கு பிறகும் இந்த ரயில் இயங்கியிருக்கிறது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி, ஜார்காண்டின் ஹதியா ரயில் நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் ஜான்சி பகுதிக்கு, வந்தே பாரத் ரயிலை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. பயணிகள் அற்ற அந்த ரயிலை, சரக்கு ரயில் இன்ஜின் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன்... இந்தியாவில் முதல்முறை - இது எப்படி சாத்தியம்? Explained

முதற்கட்டமாக, சரக்கு ரயிலின் இன்ஜின் ஒட்டுநர் வந்தே பாரத் ரயிலின் பிரேக் சிஸ்டத்தை சோதனை செய்திருக்கிறார். ஆனால்,  பிரேக் செயலிழந்த நிலையில் இருப்பதை முன்கூட்டியே கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் எடுத்துரைத்த போதிலும், ரயில்வே அதிகாரிகள் பிரேக் சிஸ்டம் நல்ல முறையில் இருப்பதாக கூறி, ரயிலை கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளனர்.

பிரேக் பிடிக்காமல் ஓட்டிய ஓட்டுநர்..!

பிரேக் செயலிழந்த நிலையில், சுமார் 463 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்த வந்தே பாரத் ரயிலை, இன்ஜின் ஓட்டுநர் ஓட்டி வந்திருக்கிறார். உத்தர பிரதேசத்தின் சந்தவுலி பகுதியில் அவர் ரயிலை நிறுத்தி விட்டார். அதற்கு மேலாக ரயிலை இயக்குவது சாத்தியமில்லை என கூறிவிட்டார்.

ரயில்வே மூத்த அதிகாரிகளிடம் அவர் எழுத்துப்பூர்வமாக இது குறித்து புகார் அளித்திருக்கிறார். புகார் அளித்தும், அவரை ரயிலை இயக்க விட்டது குறித்து தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் உயர்நிலை விசாரணையை நடத்தி வருகிறது. இதுகுறித்து பேசிய மூத்த அதிகாரிகள், தவறிழைத்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | IDBI Bank: விற்பனைக்கு முன் ரூ.2,122 கோடி சொத்து மதிப்பு குறைப்பு.. என்ன நடந்தது?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES