• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன்... இந்தியாவில் முதல்முறை - இது எப்படி சாத்தியம்? Explained

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன்... இந்தியாவில் முதல்முறை - இது எப்படி சாத்தியம்? Explained

இந்தியாவின் மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக 25 வாரக் கருவில் இருந்த குழந்தையின் கடுமையான முதுகுத்தண்டு குறைப்பாட்டை (Spina Bifida) டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகச் சரிசெய்து சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

Written BySudharsan G
Published: Nov 15, 2026, 18:46 IST|Updated: Nov 15, 2026, 18:57 IST
joinshare
கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன்... இந்தியாவில் முதல்முறை - இது எப்படி சாத்தியம்? Explained
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

India's First Fetal Spine Surgery: இந்திய மருத்துவத் துறையில் புதிய மைல்கல்லாக, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்கள் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

இதன்மூலம், இந்தியாவில் முதல்முறையாக கருவில் இருக்கும் குழந்தையின் கடுமையான முதுகுத்தண்டு குறைபாடு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சாதனை முக்கியத்துவம் பெறுகிறது? என்ன பாதிப்பு சரிசெய்யப்பட்டுள்ளது? விரிவாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | Explained : மேகதாது அணை விவகாரம்! காங்கிரஸ் டபுள் கேம் ஆடுகிறதா? தலைவர்கள் சொல்வது என்ன?

நடந்தது என்ன?

  • டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (AIIMS) மருத்துவமனையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி இந்த சிறப்புவாய்ந்த அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. 25 வாரக் கர்ப்பத்தில் இருந்த குழந்தைக்கு, கருவிலியே அறுவை சிகிச்சை செய்து முதுகுத்தண்டு குறைபாட்டை மருத்துவர்கள் சரிசெய்துள்ளனர்.
  • சுமார் 6 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. ஐந்து வாரங்களுக்கும் மேலாக மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டுள்ளனர்.
  • நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா தலைமையில் மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

𝐀𝐈𝐈𝐌𝐒 𝐃𝐞𝐥𝐡𝐢 𝐏𝐞𝐫𝐟𝐨𝐫𝐦𝐬 𝐈𝐧𝐝𝐢𝐚'𝐬 𝐅𝐢𝐫𝐬𝐭 𝐎𝐩𝐞𝐧 𝐅𝐞𝐭𝐚𝐥 𝐒𝐮𝐫𝐠𝐞𝐫𝐲 AIIMS New Delhi has performed India’s first open fetal surgery to repair a severe spinal defect in an unborn baby at 25 weeks' gestation. The six-hour procedure involved repairing a lumbosacral myelomeningocele, the most severe form of spina bifida. The operation repaired the cerebrospinal-fluid-leaking lumbosacral defect in utero. Myelomeningocele is an open neural tube defect in which the spinal cord and its coverings protrude through an opening in the spine. @aiims_newdelhi | @MoHFW_INDIA

— All India Radio News (@airnewsalerts) November 14, 2026

குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?

  • கருவில் குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டு உருவாகும் ஆரம்ப கட்டத்தில், நியூரல் டியூப் எனப்படும் நரம்புக் குழாய் முழுமையாக மூடப்பட வேண்டும்.
  • கர்ப்பத்தின் முதல் மாதத்திலேயே நடைபெறும் இந்த வளர்ச்சியில் குறைபாடு ஏற்பட்டால், ஸ்பைனா பிஃபிடா (Spina Bifida) எனப்படும் பிறவிக் குறைபாடு ஏற்படலாம்.
  • இதில் மிகவும் தீவிரமான நிலையைதான் மோலைமெனிங்கோசீல் (Myelomeningocele) என மருத்துவ உலகம் அழைக்கிறது.

மோலைமெனிங்கோசீல் பாதிப்புகள்...?

மோலைமெனிங்கோசீல் பாதிப்பில், முதுகுத்தண்டின் எலும்புகளில் உருவாகும் இடைவெளி வழியாக முதுகுத்தண்டின் நரம்புகளும் அவற்றைப் பாதுகாக்கும் உறைகளும் வெளியே துருத்திக்கொண்டிருக்கும். இதனால், குழந்தையின் நரம்புகள் பாதிக்கப்படலாம்.

இதன் காரணமாக, பிறக்கும் குழந்தைகளுக்கு கால்களில் பக்கவாதம் போன்ற பாதிப்புகள், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் கட்டுப்பாட்டின்மை, மூளையில் நீர் தேங்கும் ஹைட்ரோசோபல்ஸ் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவச் சிகிச்சையும், மறுவாழ்வுப் பயிற்சியும் தேவைப்படலாம்.

மேலும் படிக்க | Operation Kala Pani: ஜூபிலன்ட் ஆலையால் 7 பேர் பலி? சுற்றுச்சூழல் பாதிப்பை அம்பல்ப்படுத்திய கிராமவாசிக்கு மிரட்டல்?

கருவிலேயே எப்படி ஆபரேஷன்...?

  • பொதுவாக இந்த குறைபாடு இருந்தால், குழந்தை பிறந்த பிறகே அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரிசெய்யப்படும். ஆனால், கருவில் இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்தால், தொடர்ந்து ஏற்படக்கூடிய நரம்பப் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
  • இதற்காக, தாயின் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் திறந்து, குழந்தையின் முதுகுத்தண்டில் உள்ள குறைபாட்டை நுண்ணோக்கி மற்றும் அல்ட்ராசவுண்ட் உதவியுடன் மருத்துவர்கள் சரிசெய்வார்கள். பின்னர், கருப்பையை மீண்டும் மூடுவார்கள். தாயும் குழந்தையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
  • இந்தச் சிகிச்சை எல்லா கர்ப்பிணிகளுக்கும் பொருந்தாது. மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தகுதியானவர்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படும்.

🇮🇳 𝗔 𝗣𝗶𝗼𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴 𝗠𝗶𝗹𝗲𝘀𝘁𝗼𝗻𝗲 𝗶𝗻 𝗔𝗱𝘃𝗮𝗻𝗰𝗲𝗱 𝗠𝗲𝗱𝗶𝗰𝗮𝗹 𝗖𝗮𝗿𝗲 𝗮𝘁 𝗔𝗜𝗜𝗠𝗦 𝗡𝗲𝘄 𝗗𝗲𝗹𝗵𝗶! In a remarkable medical breakthrough, doctors at @aiims_newdelhi have successfully performed India's first fetal surgery to repair a baby's spine while still in the mother's womb. The complex six-hour procedure, performed at 25 weeks of pregnancy, involved repairing myelomeningocele, a severe form of spina bifida, to protect the developing spinal cord from further damage and improve the baby's prospects for better neurological outcomes. Both the mother and the unborn baby are stable and recovering well. This landmark achievement reflects the exceptional expertise of India's medical professionals and the growing capabilities of our public healthcare institutions in delivering highly specialised, cutting-edge medical care. #AIIMS #MedicalExcellence #HealthcareInnovation #HealthForAll

— Ministry of Health (@MoHFW_INDIA) November 15, 2026

சிகிச்சையால் கிடைக்கும் பலன்கள்

  • அமெரிக்காவில் நடைபெற்ற Management of Myelomeningocele Study ஆய்வு, கருவிலேயே அறுவை சிகிச்சை செய்வதால் கிடைக்கக்கூடிய பலன்களை எடுத்துக்காட்டி உள்ளது.
  • அதன்படி, கருவிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளில் 40 சதவீதத்தினருக்கு மட்டுமே 12 மாதங்களுக்குள் மூளையில் தேங்கும் நீரை வெளியேற்ற Shunt பொருத்த வேண்டியிருந்தது.
  • பிறந்த பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளில் இந்த எண்ணிக்கை 82% ஆக இருந்தது. குழந்தைகளின் ஆரம்பகட்ட உடல் இயக்கத் திறனில் முன்னேற்றம் ஏற்படுவதற்கும், மூளையின் பின்பகுதி கீழ்நோக்கி நகரும் பாதிப்பைக் குறைப்பதற்கும் இந்த சிகிச்சை உதவக்கூடும்.

ஆபத்துகள் இருக்கிறதா?

இந்த அறுவை சிகிச்சை முழுமையான தீர்வு கிடையாது. குறைப்பாட்டால் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நரம்புப் பாதிப்புகளை முழுமையாகச் சரிசெய்ய முடியாது. 

மேலும் குறைப்பிரசவம், கருப்பையில் தழும்பு ஏற்படுதல், எதிர்காலக் கர்ப்பங்களில் சிக்கல்கள் உள்ளிட்ட ஆபத்துகளும் உள்ளன. எனவே, தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு அவசியமாகும்.

இந்தியாவில் ஏன் முக்கியத்துவம்?

  • இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் குழந்தைகள் நியூரல் டியூப் குறைபாடுகளுடன் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் குழந்தைகள் வரை திறந்தநிலை குறைபாடுகளால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • AIIMS மருத்துவமனையில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை, இந்தியாவில் கருவிலேயே மேற்கொள்ளப்படும் நவீன மருத்துவச் சிகிச்சைக்கான புதிய வாய்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த சிகிச்சை இலவசமாக, மத்திய அரசின் ஜனனி சிசு சுரக்ஷா கார்யக்ரம் (JSSK) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த சிகிச்சையைத் தகுதியான குடும்பங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், பிரத்யேக கருவிலேயே சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க AIIMS திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தக் குறைபாட்டைத் தடுப்பதற்குக் கர்ப்பத்திற்கு முன்பும், ஆரம்பகட்ட கர்ப்ப காலத்திலும் மருத்துவ ஆலோசனையின்படி ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

கருவிலேயே அறுவை சிகிச்சை செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வந்திருப்பது மருத்துவத் துறையின் முக்கிய முன்னேற்றம் என்றாலும், தாய் மற்றும் குழந்தையின் நீண்டகால உடல்நலனைக் கண்காணிப்பதும், இந்தச் சிகிச்சையைத் தகுதியானவர்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதுமே அடுத்தகட்ட சவாலாக இருக்கும்.

மேலும் படிக்க | பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? அவை உண்மையிலேயே காற்று மாசை குறைக்குமா? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer
Delhi