வனவிலங்குகள் பாதுகாப்பையும் மனித வாழ்வியலையும் மையமாகக் கொண்ட ‘அரிக்கொம்பன்’ – படக்குழுவினருக்குத் திரையுலகினர் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன். மிதுன் மகேஷ்வரன் நீ கதாநாயகனாக நடித்துள்ளார் தேவகி கிருஷ்ணன் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அப்பு குட்டி ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 24.11.2026 அன்று சென்னையில் நடைபெற்றது.
1/5
அரிக்கொம்பன் படம்
அரிக்கொம்பன் திரைப்படம், வனவிலங்குகள் பாதுகாப்பையும் மனித வாழ்வியலையும் மையமாகக் கொண்ட கதையை மையமாக வைத்துள்ளது. இதனை மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கியுள்ளார்.
2/5
நடித்தவர்கள் யார்
சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன். மிதுன் மகேஷ்வரன் நீ கதாநாயகனாக நடித்துள்ளார் தேவகி கிருஷ்ணன் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அப்பு குட்டி ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
3/5
இசை வெளியீட்டு விழா
இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவின் தொடக்கத்திலேயே படக் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நடிகர் மிதுன் மகேஸ்வரன், அப்புகுட்டி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
4/5
நடிகர் அப்புகுட்டி பேச்சு
நடிகர் அப்புக்குட்டி இந்த படம் குறித்து பேசும் போது, “திரைப்படங்களில் தொடர்ந்து தீவிரமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால், இந்த மேடையிலாவது நகைச்சுவையாகப் பேசுகிறேன். இந்தப் படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். ஏற்கெனவே 'எங்க காட்டுல மழை' திரைப்படத்தில் மிதுனுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். மிதுன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது, கதையைக் கேட்டுத் தனது சம்மதத்தைத் தெரிவித்தேன். கதையை மிதுனே விவரித்தபோது, அவரே இப்படத்தின் இயக்குநர் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்தார். இயக்கம் என்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதால், மிதுன் இந்த முயற்சியில் இறங்குவது குறித்து ஆரம்பத்தில் எனக்குச் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் கதையின் மீது இருந்த நம்பிக்கை மகிழ்ச்சியளித்தது எனவும் அவர் பேசியிருந்தார்.
5/5
டிசம்பர் 11 வெளியீடு
இப்படம், வரும் டிசம்பர் 11ஆம் தேதி ரிலீச் ஆகிறது. இப்படத்தை பார்க்க யானை பிரியர்களும், இயற்கை விரும்பிகளும் காத்துக்கொண்டுள்ளனர்.