Chennai Government Job: சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆதரவு பணியாளர்கள் குழுவில் இணைவதற்கான விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Government Job: இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1/5
தமிழக அரசு வேலைவாய்ப்பு
சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (POCSO Act, 2012)-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ஆதரவுப் பணியாளர்களை (Support Persons) குழுவில் இணைக்க உள்ளது.
2/5
சென்னை மாவட்ட வேலைவாய்ய்பின் விவரம்
Support Persons பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சட்ட நடவடிக்கைகள் மற்றும் மறுவாழ்வு செயல்முறைகளின் போது தேவையான உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், தேவைக்கேற்ப சட்டம், மருத்துவம், உளவியல், கல்வி மற்றும் சமூக ரீதியான பொருத்தமான சேவைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பெற்றுத் தருவதற்கு உதவுவார்கள்.
3/5
இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் ஆகும். குழந்தைகள் உரிமைகள் அல்லது குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் தனிநபர் அல்லது அத்துறையில் செயல்படும் நிறுவனத்தின் பிரதிநிதி விண்ணப்பிக்கலாம். சமூகப்பணி (Social Work), சமூகவியல் (Sociology), சட்டம் (Law), உளவியல் (Psychology), குழந்தை வளர்ச்சி (Child Development) அல்லது குழந்தைகள் நலன், சுகாதாரம் அல்லது கல்வி தொடர்பான பிற பொருத்தமான துறைகளில் முதுநிலைப் பட்டம் (Post-Graduate Degree) பெற்றிருக்க வேண்டும்.
4/5
ரூ.10,000 மாத சம்பளம்
குழுவில் இணைக்கப்படும் ஆதரவுப் பணியாளருக்கு ஒவ்வொரு வழக்கிற்கும் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) மதிப்பூதியமாக, பயணப்படி உட்பட வழங்கப்படும். இம்மதிப்பூதியம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.
5/5
சென்னை மாவட்ட வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் தங்களது விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU), எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.