• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /CSK vs RCB: இந்த வீரரை வாங்க சென்னை, பெங்களூரு திட்டம்.. ரூ. 10 கோடி வரை கொடுக்க தயார்?

CSK vs RCB: இந்த வீரரை வாங்க சென்னை, பெங்களூரு திட்டம்.. ரூ. 10 கோடி வரை கொடுக்க தயார்?

Written ByR Balaji
Published: Nov 25, 2026, 21:23 IST|Updated: Nov 25, 2026, 21:25 IST
joinshare

2027 ஐபிஎல் ஏலத்தில் மதீஷா பதிரனாவை மீண்டும் அணியில் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ள நிலையில், ஆர்சிபி அணியும் அவரை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் ரூ.10 கோடிக்கு மேல் ஏலம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

IPL1/5

பதிரனாவுக்கு குறிவைக்கும் சிஎஸ்கே

2027 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 28.05 கையிருப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது. பேட்டிங் வரிசை வலுவாக இருக்கும் நிலையில், பந்துவீச்சை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், சிஎஸ்கே அணியில் இருந்து ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட மதீஷா பதிரனாவை மீண்டும் அணிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
IPL2/5

போட்டிக்கு வரும் ஆர்சிபி

மதிஷா பதிரனாவை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.14.15 கோடி கையிருப்புடன் ஏலத்திற்குச் செல்லும் ஆர்சிபி, ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட மொத்தம் 5 வீரர்களை வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.
IPL3/5

பதிரனாவை அதிக தொகைக்கு வாங்க திட்டம்

ஆர்சிபி அணி நிர்வாகம் முக்கிய வீரர்கள் பலரையும் தக்கவைத்துள்ளது. மங்கேஷ் யாதவ், ஜாகப் பெத்தல், ரிச்சர்ட் கிளீசன், ஸ்வப்னீல் சிங், சாத்வீக் தேஷ்வால், வியான் மல்கோத்ரா ஆகியோரை மட்டுமே விடுவித்துள்ளது. இதனால், பதிரனாவைத் தவிர மற்ற வீரர்களை குறைந்த தொகையில் வாங்கி அணியை நிரப்ப ஆர்சிபி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
IPL4/5

சிஎஸ்கேவின் மாற்று திட்டம்?

சிஎஸ்கே அணி ஏலத்தில் நான்கு முக்கிய பந்துவீச்சாளர்களை குறிவைத்துள்ளது. பவர் பிளே ஓவர்களுக்கு தீபக் சஹார், டிரெண்ட் போல்ட் ஆகியோரையும், டெத் ஓவர்களுக்கு மதீஷா பதிரனா, ஆவேஷ் கான் ஆகியோரையும் வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், ஆர்சிபியும் போட்டியில் இறங்கியுள்ளதால் பதிரனாவை வாங்குவது சிஎஸ்கேவுக்கு சவாலாக மாறியுள்ளது.
IPL5/5

பதிரனா ரூ. 10 கோடிக்கு மேல் ஏலம் போக வாய்ப்பு

பதிரனாவை வாங்க மேலும் சில அணிகளும் ஆர்வம் காட்டக்கூடும் என்பதால், அவரது ஏலத்தொகை ரூ.10 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அடிக்கடி காயமடைவதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை விடுவித்துள்ளது. இருப்பினும், 23 வயதே ஆகும் பதிரனா முழு உடற்தகுதியுடன் திரும்பினால், சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளராக இருக்க முடியும்.
TAGS:
IPL

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக கல்வி விருது விழா: 2 நாட்கள் சென்னையில் நிகழ்ச்சி.. எந்தெந்த மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு?

தவெக கல்வி விருது விழா: 2 நாட்கள் சென்னையில் நிகழ்ச்சி.. எந்தெந்த மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு?

2

கோவையில் கொடூரம்: பெற்ற தாயை கொன்ற மகன்.. மறைக்க முயன்ற மனைவி! என்ன நடந்தது?

3

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

4

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

5

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.