Nilgiris Mountain Train Service Cancelled: ஊட்டி செல்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அக்டோபர் 27,28,29ஆம் தேதிகளில் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nilgiris Mountain Train Service Cancelled: கனமழை எதிரொலியாக, தெற்கு ரயில்வே மலை ரயில் சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது.
1/5
தமிழகத்தில் கனமழை பெய்தது
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அர்னாப் புயல் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்தது. இதனால், வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. சாலைகளிலும் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. மேலும், நீலகிரி பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டது.
2/5
கனமழையால் ஊட்டில் மலை பாதையில் மண் சரிவு
குறிப்பாக, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இதனால், பயணிகள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டில் மலை பாதையில் மண் சரிந்தும் மரம் விழுந்தும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெற்கு ரயில்வே முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, ஊட்டி மலை ரயில் சேவையை ரத்து செய்துள்ளது.
3/5
ஊட்டி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயில் எண் 56136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நிலையில், அக்டோபர் 27,28,29ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
அக்டோபர் 27,28,29ஆம் தேதிகளில் ஊட்டி மலை ரயில் சேவை
மேலும், ரயில் எண் 56137 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2 மணிக்கு உதகமண்டலத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவை, அக்டோபர் 27,28,29ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5/5
ஊட்டி மலை ரயில் சேவை ரத்துக்கு காரணம்
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிக்கு நடக்கிறது. இதன் காரணமாக, தெற்கு ரயில்வே மலை ரயில் சேவை அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.