• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தேவாவிற்கு கானா மட்டுமல்ல..மெலோடியும் சூப்பரா வரும்! எடுத்துக்காட்டாக 7 பாடல்கள்

தேவாவிற்கு கானா மட்டுமல்ல..மெலோடியும் சூப்பரா வரும்! எடுத்துக்காட்டாக 7 பாடல்கள்

Written ByYuvashree M
Published: Oct 18, 2026, 10:53 AM IST|Updated: Oct 18, 2026, 11:20 AM IST
joinshare
மறைந்த இசையமைப்பாளர் தேவா, கானா பாடல்களுக்கு மெட்டிசைப்பதற்கு புகழ் பெற்றவர். ஆனால், இதைத்தாண்டி அவர் பல்வேறு முக்கிய மெலோடி பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?

தேனிசைத்தென்றல் தேவாவின் மறைவு, திரையுலகினரை கடும் சோகத்தில் தள்ளியுள்ளது. அவரது பாடல்களை கேட்டு வளர்ந்த 90s கிட்ஸால் அவரத் இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த சமயத்தில், அவரது கானா பிம்பத்தை உடைத்த 7 மெலோடி பாடல்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Deva Gana Song1/5

தேவா கானா பாடல்கள்

தேனிசைத்தென்றல் தேவா, கானா பாடல்களுக்கு பிரபலமானவர். தான் கானா பாடல் பாடுபவன் என்பதால் பல இடங்களில், அவமானப்படுத்தப்பட்டதாக அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில், தமிழ் திரையுலகில் இன்று கானா ஒரு அங்கமாக இருப்பதற்கு காரணம் இவர்தான்.
Deva Melody Songs2/5

தேவா மெலோடி பாடல்கள்

தேவா என்றால், கானாதான் என்ற அவருடைய பிம்பத்தை உடைக்கும் வகையில், பல ஹிட் மெலோடிகளையும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆசை திரைப்படத்தில், வைரமுத்துவின் வரிகளில் ‘புல்வெளி புல்வெளி ஒன்று’ என்று வரும் பாடலை குறிப்பிடலாம்.
Deva Nalam nalamariya aaval3/5

தேவா நலம் நலமறிய ஆவல் பாடல்

தேவா, 1997ல் வெளியான காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதில் வரும் ‘ஒரு மணி அடித்தால், உன் நியாபகம்’ எனும் பாடலுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அஜித்தின் காதல் கோட்டை படத்தில் ஒரு பக்கம் ‘கவலைப்படாதே சகோதரா’ என பாடலை இசைக்க, இன்னொரு பக்கம் ‘நலம் நலமறிய ஆவல்’ என்று ஒரு செம மெலோடியை போட்டிருந்தார்.
Deva Mugavari song4/5

தேவா முகவரி பாடல்

அதே போல, தேவா இசையமைத்திருந்த திரைப்படம் ‘முகவரி’ 2000ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ’ஏ நிலவே’ பாடலை உன்னி மேனன் பாடியிருப்பார். இதுவும் தேவாவின் இசையில் வெளியான இன்னொரு மேஜிக் ஆகும். அஹா திரைப்படத்திலும், ‘முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது’ பாடலுக்கு மெட்டு போட்ட தேவா, அன்றைய கல்லூரி இளைஞர்களின் பாடல் தோழனாகவே இருந்தார் என சொல்லலாம்.
Deva Melody Songs5/5

தேவா மெலோடி பாடல்கள்

ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் தேவா, 2024 முதல்தான் தன் மெலடி பாடல்களுக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதாக கூறியிருந்தார். சூர்ய வம்சம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த தூக்கணாங்குருவி கூடு, மாமரா அனிலோ உள்ளிட்ட பாடல்கள் இதற்கு சான்று. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மானன்னன் படத்தில் ‘நெஞ்சமே நெஞ்சம்’ பாடலின் reprise வெர்ஷனை பாடினார் தேவா. இதன் மூலம், தான் மெலடியிலும் கிங்தான் என்பதை நிரூபித்திருந்தார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
‘டோரதி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

‘டோரதி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

2

டிகிரி படித்தவர்களுக்கு அரசின் சூப்பர் வேலை.. கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

3

Exclusive: 'ஏழுமலையான் கொடுத்த சக்தி' TTD போட்டோகிராபரும்... 30 ஆண்டுகால இறைப்பணியும்!

4

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் அளிக்க சிறப்பு எண்.. தமிழக அரசு அதிரடி

5

சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.