மத்திய அரசின் கல்வி நிலையங்களில் உயர் கல்வி பயில மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்குகிறது. அந்த வகையில், இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி?, விண்ணப்பம் எங்கு கிடைக்கும்?, யார் யாருக்கு உதவித்தொகை வழங்கப்படும்? என்பதை இங்கு காணலாம்.
மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் பயில்வதற்கு ரூ. 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து, மதுரை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பை மதுரை மாவட்ட ஆட்சியிர் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1/5
ரூ. 2 லட்சம் மாணவ உதவித்தொகை
மத்திய அரசின் கல்வி நிலையங்களில் உயர் கல்வி பயில்வதற்கு மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2/5
எந்தெந்த சமூக மாணவர்களுக்கு உதவித்தொகை
குறிப்பாக, IIT, IIM, IIIT, NIT, மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதி உடைய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
3/5
திட்டத்தின் பயன்கள்
கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணங்கள் ஆகியவற்றுக்காக ஆண்டிற்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
4/5
உதவித்தொகை பெற தகுதிகள்
IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பயிலும் தமிழக மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் இதர உதவித்தொகை பெறுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
5/5
விண்ணப்பிக்க கடைசி தேதி
ஏற்கெனவே திட்டத்தில் பயன்பெற்று வருபவர்கள், புதுப்பித்தல் விண்ணப்பங்களை சமர்பிக்க அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். புதிதாக விண்ணப்பிப்போர் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மதுரை மாவட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெறலாம். www.bcw.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாகவும் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்யலாம்.