• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - விணப்பிப்பது எப்படி?

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - விணப்பிப்பது எப்படி?

Written ByKarthikeyan Sekar
Published: Oct 09, 2026, 04:13 PM IST|Updated: Oct 09, 2026, 04:18 PM IST
joinshare
Tamil Nadu Government Scholarship : 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1000 உதவித்தொகை கொடுக்கப்படும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 2026 அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government Scholarship : 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Tamil Nadu Government Scholarship1/5

1. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு

1. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு : தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில், ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் 1991-1992 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Tamil Nadu Government Scholarship2/5

2. தேர்வு நடைபெறும் நாள்

2. தேர்வு நடைபெறும் நாள் : 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு, வரும் 21.11.2026 (சனிக்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. ஊரகப் பகுதி மாணவர்கள் இத்தேர்வை எழுதி பயன்பெறலாம்.
Tamil Nadu Government Scholarship3/5

3. ஆண்டுக்கு ரூ.1,000 உதவித்தொகை

3. ஆண்டுக்கு ரூ.1,000 உதவித்தொகை : இத்தேர்வில் பங்குபெற்று தகுதிபெறும் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் என மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,000/- வீதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
Tamil Nadu Government Scholarship4/5

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார்?

4. விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார்? : சென்னையைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் (Township) எல்லைக்குட்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தற்போது 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவியர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
Tamil Nadu Government Scholarship5/5

தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் கால அவகாசம்

5. தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் கால அவகாசம் : மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாகவே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுக் கட்டணமாக ரூ.10/- செலுத்த வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் 07.10.2026 (பிற்பகல்) முதல் 13.10.2026 வரை தங்கள் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
கோயில் பணியாளர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு - முழு விவரம் Explained

கோயில் பணியாளர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு - முழு விவரம் Explained

2

Explained: கிரீன் கார்டுக்கு தடை!! இந்திய ஐடி ஊழியர்கள், நிறுவனங்கள் மீதான உடனடி தாக்கம் என்ன?

3

தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

4

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

5

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.