Tiruchendur Murugan Temple Prasadam: திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த பன்னீர் இலை விபூதி இனி ஆன்லைன் விற்பனை செய்யப்படும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இதனை எப்படி புக் செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.
Tiruchendur Murugan Temple Prasadam: பன்னீர்இலை திருநீறு,100 கிராம் புட்டமுது, மூலவர், சண்முகர் புகைப்படம் என 160 கிராம் எடையில் வரும் பிரசாதம் ஒன்று ரூ.120-க்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
1/5
திருச்செந்தூர் முருகன் கோயில்
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் பக்தர்கள் இருக்கின்றனர். முருகனுக்கு தமிழகத்தில் மட்டும் அறுபடை வீடுகள் உள்ளன. இதில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
2/5
பன்னீர் இலை விபூதி
இந்த கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்களுக்கு சூப்பரான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை இனி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/5
ஆன்லைனில் விற்பனை
அதாவது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பன்னீர் இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பன்னீர் இலைகளை வாங்கி வந்து அதில் விபூதியை வைத்துக் கொடுப்பது என்பது வழக்கமாக இருக்கிறது. இதற்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த பன்னீர் இலை விபூதி வாங்க இனி கோயிலுக்கு செல்ல தேவையில்லை. இனி ஆன்லைனிலேயே பனீர் இலை விபூதி பிரசாதததை பெறலாம்.
4/5
பிரசாதம் முன்பதிவு செய்யும்முறை
அதாவது, hrce.t.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை முன்பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் அஞ்சல் வழி பிரசாதம் என்பதை கிளிக் செய்து, அதில் இருக்கும் கோயில்களின் பட்டியிலின் 45வது கோயில் எண்ணை இருப்பது திருச்செந்தூர் கோயில். அதனை கிளிக் செய்து, பெயர், முகவரி, செல்போன் எண்ணை உள்ளிட்டு பணம் செலுத்த வேண்டும்.
5/5
ரூ.120 கட்டணம்
ரூ.120 கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். யுபிஐ, நெட் பேக்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாக பிரசாத கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன்பிறகு, உங்கள் மொபைல் எண்ணிற்கு கட்டண சீட்டு வரும். அவ்வளவு தான், திருச்செந்தூர் கோயில் பிரசாதம் உங்கள் இல்லத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.