Tirupati Darshan Ticket: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, டிசம்பர் மாதம் தரிசனத்திற்கு எப்போது டிக்கெட்டுகள் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tirupati Darshan Ticket: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் டிசம்பர் மாதம் தரிசன டிக்கெட்டுகள் குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
1/5
திருப்பதி ஏழுமலையான் கோயில்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் பல்வேறு டிக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. தரிசனம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
2/5
திருப்பதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் டிசம்பர் மாதம் வழிபட தரிசன டிக்கெட்டுகள், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு செப்டம்பர் மாதம் ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிட உள்ளது. அதன்படி, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகுள் ஆன்லைனில் செப்டம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு தரிசன டோக்கன் செப்டம்பர் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியாகும்.
3/5
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள்
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் செப்டம்பர் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். அங்கப்பிரதட்ச டோக்கன் செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். மெய்நிகர் சேவைகள், அவற்றுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/5
சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை டிக்கெட்கள் வெளியீடு
மேலும், ஸ்ரீவாரின் ஆர்ஜித சேவைகளுக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பக்மாராதனை ஆகிய சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் செப்டம்பர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த டிக்கெட்டுகள் மின்னணு குலுக்கலில் பங்கேற்க செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்வு செய்யப்படுபவர்கள் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி மணிக்குள் கட்டணம் செலுத்தினால் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும்.
5/5
திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாத டிக்கெட்டுகள்
மேலும், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த டிக்கெட்டுகளை ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.