• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /அக்டோபரில் திருப்பதி போறீங்களா? 5 நாட்களுக்கு இந்த தரிசனம் ரத்து.. நோட் பண்ணுங்க

அக்டோபரில் திருப்பதி போறீங்களா? 5 நாட்களுக்கு இந்த தரிசனம் ரத்து.. நோட் பண்ணுங்க

Written ByUmabarkavi K
Published: Sep 29, 2026, 13:50 IST|Updated: Sep 29, 2026, 13:55 IST
joinshare
Tirupati VIP Darshan: அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எனவே, அக்டோபர் மாதம் திருப்பதி செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

Tirupati VIP Darshan: அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ஆம் தேதி விஐபி தரிசனத்தை தவிர, மற்ற அனைத்து தரிசனங்களும் வழக்கம் போல் இருக்கும் என தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
 

Tirumala Tirupati1/5

திருப்பதி ஏழுமலையான் கோயில்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினந்தோறும் 90,000 வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்காக பல்வேறு தரிசன முறைகளையும் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
Tirumala Tirupati2/5

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன முறைகள்

அதாவது, ரூ.300 சிறப்பு தரிசனம், சர்வ தரிசனம், மூத்த குடிமக்கள், விஐபி தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது.
Tirumala Tirupati3/5

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1, வியாழன் மற்றும் அக்டோபர் 5, திங்கள் ஆகிய நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தேவஸ்தானம் ஐந்து நாட்களுக்கு விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளது.
Tirumala Tirupati4/5

அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து

இதனால், முந்தைய நாட்களான செப்டம்பர் 30, அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுகிழமை விஐபி தரிசனதத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் பெருங்கூட்டத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவை பக்தர்கள் கவனத்தில் கொண்டு, தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவிதுள்ளது.
Tirumala Tirupati5/5

திருப்பதில் மற்ற அனைத்து தரிசனங்களும் வழக்கம்போல் இருக்கும்

விஐபி தரிசனத்தை தவிர்த்து, மற்ற அனைத்து தரிசனமும் வழக்கம்போல் இருக்கும் என தேவஸ்தானம் தெளிவுப்படுத்தியுள்ளது. ரூ.300 சிறப்பு தரிசனம், சர்வ தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசனம் வழக்கம்போல் இருக்கும் என தேவஸ்தானம் கூறியுள்ளது.
TAGS:
Tour Travel

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.