Half Yearly Exam Holiday: தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை எப்போது துவங்கும் என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அரையாண்டு தேர்வு குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன.
Half Yearly Exam Holiday: ஆனால், அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்னும் சில தினங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1/5
2026 அரையாண்டு தேர்வு
தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டு நடந்து வருகிறது. மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடப்பது வழக்கம். இந்த நிலையில், இந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், 1 முதல் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
2/5
டிசம்பர் 10 முதல் அரையாண்டு தேர்வு துவங்கலாம்
ஆனால், பள்ளிக்கல்வித்துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இன்னும் சில நாட்களில் அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான், அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, டிசம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
3/5
வகுப்புகள் வாரியாக அரையாண்டு தேர்வு விவரம்
10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 அல்லது டிசம்பர் 16ஆம் தேதி வாக்கில் துவங்கலாம் என சொல்லப்படுகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 அல்லது 17ஆம் தேதி வாக்கில் துவங்கலாம் என கூறப்படுகிறது.
4/5
அரையாண்டு விடுமுறை எப்போது?
தேர்வு முடிந்த பிறகு, அரையாண்டு விடுமுறை எப்போது என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருக்கின்றனர். அதன்படி, அரையாண்டு விடுமுறையானது டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை கிட்டதட்ட 11 நாட்கள் விடப்படலாம் என தெரிகிறது. ஜனவரி 4ஆம் தேதி திங்கள்கிழமை அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல் கசிந்துள்ளது.
5/5
அரையாண்டு தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்?
அரையாண்டு தேர்வு அட்டவணையை இன்னும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை. இன்னும் ஒருசில தினங்களில் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரையாண்டு தேர்வு அட்டவணையை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர்.