SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Puducherry Bypolls: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். அவர் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 09, 2026, 10:50 AM IST | Updated: Oct 09, 2026, 11:28 AM IST
Join

Puducherry Bypolls: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். அவர் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,501 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ஆர். ரங்கசாமி இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடுவுகள்:

மேலும் படிக்க | By Election Result 2026 Live: இடைத்தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் முன்னிலை வகிக்கப்போவது யார்?

பின்னர், தனது தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேது செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் குமாரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சலீம் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 10,056 ஆண்கள், 11,695 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,756 வாக்காளர்கள் (80.81%) வாக்களித்தனர். இது கடந்த பொதுத்தேர்தலை (87.10%) விட 6.29 சதவீதம் குறைவாகும்.

மேலும் படிக்க | இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், முதல் சுற்றிலிருந்தே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்தார். முதல் இரண்டு சுற்றுகளிலேயே 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி பெற்று வெற்றியை உறுதி செய்தார். மொத்தம் 4 சுற்றுகளின் முடிவில், அசோக் ஆனந்த் 8,501 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த பொதுத்தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அசோக் ஆனந்த் அதைவிட பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் வேட்பாளரை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியுள்ளார். இமாலய வெற்றியைத் தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES