)
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 95 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் 79 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 43 வாக்குகளும் பெற்று பின்னடைவில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி வேட்பாளர்களுக்கு இதுவரை தபால் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
தபால் வாக்கு எண்ணிக்கையை பொருத்தவரையில், தற்போது வரை தவெக முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சியின் வேட்பாளர் சத்தியபாமா 22 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 16, அதிமுக வேட்பாளர் பானுமதி 8 வாக்குகளையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. தாராபுரம் தொகுதியிலும் இதேபோல் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆனால், அங்கு மொத்தம் 23 சுற்றுகளாக எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் ஐந்து முனைப் போட்டி நிலவும் நிலையில், வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. (மேலும் படிக்க)
வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக, சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைகப்படிருந்த தபால் வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் எண்ணும் அறைகளுக்கு கொண்டு வரப்பட்டது.
தேர்தல் பார்வையாளர்கள், முக்கிய வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டது. இதையடுத்து ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டது.
தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 80% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் 85.99% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாராபுரத்தில் 89.89% வாக்குகளும். மதுராந்தகத்தில் 93.22% வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதனுடன் ஒப்பிடும்போது, இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள போர் சிங் யாதவ், வாக்கு எண்னும் மையத்திற்கு வருகை தந்தார். இதற்கிடையே, சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மைத்திற்கு கொண்டு வரப்பட்டன. திட்டமிட்டபடி இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணும் வையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
#WATCH | Tiruppur, Tamil Nadu: Security has been tightened at LRG Government Arts and Science College for Women ahead of the counting of votes for the Dharapuram Assembly by-election. https://t.co/DLZnJtMdwv
— ANI (@ANI) October 9, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்த 6 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. (மேலும் படிக்க)
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 09) எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 தரப்பினரிடையே போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் நிலவும் அரசியல் கள நிலவரம் மற்றும் முன்னிலை விவரங்களை இங்கு உடனுக்குடன் பார்க்கலாம்.