Krishna jayanthi Rasipalan: செப்டம்பர் 4ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின்படி, இந்த நாளில் சிறப்பு கிரகப் பெயர்ச்சி நடக்கிறது. சந்திரன், சுக்கிரனின் பெயர்ச்சி நடக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி நடக்கும் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. செப்டம்பர் 4ஆம் தேதி சந்திரன் அதன் உச்ச ராசியான ரிஷபத்திலும், வியாழன் அதன் உச்ச ராசியான கடகத்திலும், சூரியன் அதன் சொந்த ராசியான சிம்மத்திலும், சுக்கிரன் அதன் சொந்த ராசியான துலாவிலும் அமையும்.
மேலும், அன்றைய நாள் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இடையே நவபஞ்சம யோகமும் உருவாகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று இருக்கும் கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். அவை என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று ரிஷப ராசியில் சந்திரன் உச்சத்தில் இருக்கும். இது உங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தை கொடுக்கும். நிதி விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகலாம். அத்துடன் திடீர் பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகளும் வரலாம். பணியிடத்தில் அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரம். குடும்ப சூழலும் சாதகமாக இருக்கும். மேலும், வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பழைய கடன் அடையும். வருமானமும் உயரக் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பெற்றோர் வழியில் இருந்து உதவி கிடைக்கும். புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். கடக ராசியில் குரு உச்சத்தில் இருப்பார். மேலும், சந்திரனும் உச்சம் பெறுவார். சூரியன் செல்வ ஸ்தானத்தில் இருப்பார். இந்த கிரக நிலைகள் உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கக்கூடும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திட்டம் அல்லது பணியின் நிறைவு முன்னேற்றம் காணப்படலாம்.
நிதி நிலைமை வலுப்பெறும். மேலும், உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடு மூலம் அதிகமான லாபத்தை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். பணம் விஷயத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். கிருஷ்ண ஜெயந்தி அன்று நல்ல செய்திகளை கேட்பீர்கள்.
கிருஷ்ண ஜெயத்தி அன்று கன்னி ராசியின் லாப ஸ்தானத்தில் குருவின் நிலை இருக்கும். இதனால், செல்வம் கொட்டும். பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
பணியில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்பிற்குச் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடைவது மன திருப்தியையும் தரும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். நேர்மறையான ஆற்றல் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும்.
எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். மேலும், உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. காதலில் இருந்து பிரச்னைகள் தீரும். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகள், பல்வேறு ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee News Tamil) பொறுப்பேற்காது)