• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /இன்றைய ராசிபலன் அக்.8 : சிலருக்கு ஏற்றம்...சிலருக்கு மாற்றம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

இன்றைய ராசிபலன் அக்.8 : சிலருக்கு ஏற்றம்...சிலருக்கு மாற்றம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

மேஷம் முதல், ரிஷபம் வரை இருக்கும் 12 ராசிகளில், எந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்..இதன் மூலம் உங்கள் நாள் எப்படி செல்லப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written ByYuvashree M
Published: Oct 08, 2026, 05:31 AM IST|Updated: Oct 08, 2026, 05:50 AM IST
joinshare
இன்றைய ராசிபலன் அக்.8 : சிலருக்கு ஏற்றம்...சிலருக்கு மாற்றம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Image Credit: அக்டோபர் 8 ராசிபலன் | x page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
“தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!

“தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!

2

இன்றைய ராசிபலன் அக்.8 : சிலருக்கு ஏற்றம்...சிலருக்கு மாற்றம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

3

4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

4

இனி வாஷிங்டன் சுந்தருக்கு ஆப்பு... இடத்தை கப்புனு பிடித்த நமன் திர்

5

இனி இவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்... விதியை தளர்த்திய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மேஷம் முதல் ரிஷபம் வரை இருக்கும் ராசிகளுக்கான ராசி கணிப்புகள். அவரவருக்கான ராசிகளுக்கு ஏற்றபடி, அன்றைய கணிப்புகள் இருக்கும். அதன்படி, அக்டோபர் 8ஆம் தேதி என்னென்ன பலன்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்

எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும்.

ரிஷபம்

தொழில் சார்ந்த கல்விகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். தொழில் நிமித்தமான பயணங்கள் கைகூடும். மனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சொந்த ஊர் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். உறவினர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கட்டிடப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

சகோதரர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுகமாக இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உருவாகும்.

கடகம்

வெளியூர் பயணங்களால் புதிய அனுபவங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். இழுபறியாக இருந்த தனவரவுகள் கிடைக்கும். கல்வி பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். தானிய விற்பனையில் லாபம் மேம்படும்.

சிம்மம்

அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும்.

கன்னி

எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். பயனற்ற கருத்துகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

துலாம்

ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதூர்யத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும்.

விருச்சிகம்

சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள்.

மேலும் படிக்க | திருவண்ணாமலையில் சனி, ஞாயிறு அனுமதி கிடையாது? புதிய கட்டுப்பாடுகள்.. அறநிலையத்துறை விளக்கம்

தனுசு

மனதை உறுத்திக் கொண்டே இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்து செல்லவும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழிலில் இருந்துவந்த முடக்க நிலைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

மனதில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக்கொள்ளவும்.

கும்பம்

வாழ்க்கைத் துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பணி வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதுவிதமான ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை உருவாக்கும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். சந்தைப்படுத்தும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க : ஆயில்யம் 4ஆம் பாதத்தில் குரு பெயர்ச்சி: நாளை முதல் 7 ராசிகளின் கொடி பறக்கும், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan