• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /இன்றைய ராசிபலன் நவம்பர் 9 : மேஷத்திற்கு பலம்..மகரத்திற்கு லாபம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

இன்றைய ராசிபலன் நவம்பர் 9 : மேஷத்திற்கு பலம்..மகரத்திற்கு லாபம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

நவம்பர் 9ஆம் தேதியான இன்று, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிபலன் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 09, 2026, 05:36 IST|Updated: Nov 09, 2026, 06:29 IST
joinshare
இன்றைய ராசிபலன் நவம்பர் 9 : மேஷத்திற்கு பலம்..மகரத்திற்கு லாபம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Image Credit: Rasipalan Tamil | Source : X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

2

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

3

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

4

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

5

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். இதையடுத்து, நவம்பர் 9ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளில் என்னென்ன ராசிகளுக்கு, என்னென்ன பலன்கள் இருக்கின்றன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்

பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். சுப காரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் வரவுகள் உயரும். உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு கிடைக்கும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.

ரிஷபம்

உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கூடும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும்.

மிதுனம்

வாகன வசதிகள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

கடகம்

நினைத்த பணிகளில் இருந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி பெறுவீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும்.

சிம்மம்

சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிலுவை சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி

நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மன தைரியம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும்.

துலாம்

மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபர செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். சிந்தனை திறனில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் லாபம் ஏற்படும். கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்து செயல்படவும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: தீபாவளிக்கு முன்பே 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தொடங்கியாச்சு... உங்க ராசி என்ன?

விருச்சிகம்

பாகப்பிரிவினை விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். கலை செயல்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சில செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். பழக்க வழக்கங்களால் மாறுபட்ட சூழல் ஏற்படும்.

தனுசு

மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகள் நல்ல மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும்.

மகரம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள்.

கும்பம்

கணவன்-மனைவியிடையே நெருக்கம் மேம்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். ஆராய்ச்சி பணிகளில் மேன்மை ஏற்படும்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தீபாவளி ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்...?

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan