• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்வது எப்படி? உகந்த நேரம் என்ன?

விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்வது எப்படி? உகந்த நேரம் என்ன?

Vinayagar Chaturthi: நாளை (செப்டம்பர் 14) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம், பூஜை செய்ய நல்ல நேரம், வழிபாடு முறைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 13, 2026, 02:41 PM IST|Updated: Sep 13, 2026, 02:48 PM IST
joinshare
விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்வது எப்படி? உகந்த நேரம் என்ன?
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில், நாளை (செப்டம்பர் 11) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம், பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாடு முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம்

விநாயகர் சிலையை ஞாயிறு மாலை அல்லது நாளை காலை வாங்குவது உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 13ஆம் தேதி பகல் 3.10 மணி முதல் மாலை 4.20 மணி வரையும், மாலை 6 மணிக்கு பிறகு விநாயகர் சிலையை வாங்கலாம். செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வாங்கலாம். விநாயகர் சிலையை வாங்கும்போது, சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

அதாவது, நின்று கொண்டு இருக்கும் விநாயகரை வாங்குவதை தவிர்க்க வேண்டும். திருஷ்டி விநாயகர், நடனம் ஆடும் விநாயகரை வாங்க கூடாது.  விநாயகரின் துதிக்கை இடது பக்கமாக திருப்பி இருக்கிறதா என்பதை பார்த்து வாங்கவும். விநாயகர் கண்களை திறந்து உங்களை பார்ப்பது போல் இருக்கும் சிலையை வாங்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?

விநாயகர் சதுர்த்தி அன்று காலை 9.10 மணி முதல் காலை 10.20 மணி வரையும், பகல் 1 மணி முதல் மதியம் 2.00 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் இரவு 8 மணி வரையும் விநாயகர் சிலையை வைத்து வீட்டில் வழிபாடு செய்யலாம். காலையில் பூஜை செய்தால், மாலையில் தீபாரதனை காட்டுவது சிறந்தது.

விநாயகர் சதுர்த்தி  வழிபாடு முறைகள்

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளே வீட்டைச் சுத்தம் செய்து, பூஜை அறையையும் தூய்மைப்படுத்த வேண்டும். சதுர்த்தி அன்று காலையில் எழுந்து குளித்து, வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். வாசலில் அழகான கோலம் போடுவது சிறப்பு. பூஜை செய்யும் இடத்தில் ஒரு சிறிய மண்டபம் அல்லது பலகை அமைத்து, அதன் மீது மஞ்சள் அல்லது சுத்தமான துணியை விரிக்கலாம். 

முடிந்தால் மண் விநாயகர் சிலையை பயன்படுத்துவது சிறந்தது. சிலையை பூஜை மேடையில் வைத்து, விநாயகருக்கு அருகில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள், அருகம்புல், வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், விளக்கு, ஊதுபத்தி, நைவேத்தியம் ஆகியவற்றைத் தயாராக வைத்துக் கொள்ளலாம்.

விநாயகருக்கு மிகவும் பிரியமானதாகக் கருதப்படுவது அருகம்புல். பொதுவாக அருகம்புல்லைச் சிறு கொத்துகளாக வைத்து விநாயகருக்கு அர்ப்பணிக்கலாம். வீட்டில் உள்ள சிலையின் தன்மைக்கு ஏற்றவாறு எளிய அபிஷேகம் செய்யலாம். பொதுவாக தூய நீர், பால், தயிர், தேன், சந்தனம் கலந்த நீர், இளநீர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். 

அபிஷேகத்திற்குப் பிறகு விநாயகரை சுத்தமான துணியால் அலங்கரித்து, சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரிக்கலாம். செவ்வந்தி, அரளி, மல்லிகை உள்ளிட்ட பூக்களைப் பயன்படுத்தலாம். பிறகு,வெல்லம், தேங்காய், எள் போன்றவற்றால் தயாரிக்கப்படும் கொழுக்கட்டை உள்ளிட்ட பலவகை நைவேத்தியங்களைப் படைக்கலாம். 

மேலும் சுண்டல், அவல், பொரி, பழங்கள், தேங்காய், அப்பம், பாயசம் போன்றவற்றையும் நைவேத்தியமாகப் படைக்கலாம். நைவேத்தியத்தைப் படைக்கும் போது “ஓம் கம் கணபதயே நமஹ” என்று கூறி, மனதில் விநாயகருக்கு உணவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்து.

Add Zee News as a Preferred Source
TAGS:
Festival