SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிள்ளையார் சுழியை ‘உ’ என எழுதுவது ஏன்? இதற்கு பின் இருக்கும் ரகசியம்!

செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பிள்ளையார் சுழியை ஏன் ‘உ’ என்று எழுதுகிறோம் தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரம்..

Written By Yuvashree M
Published: Sep 14, 2026, 13:19 IST | Updated: Sep 14, 2026, 13:34 IST
Image Credit: Vinayagarchaturthi | X Page
Join

“பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு..” எனும் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் பாடலை வாழ்நாளில் ஒருமுறையாவது கேட்டிருப்போம். பிரபலமான பிள்ளையாரின் பக்தி பாடல்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த பாடலில்ல் முழுவதும், எந்த காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் பிள்ளையாரை கும்பிட வேண்டும் என்றும் எதை தொடங்குவதற்கு முன்னாலும் பிள்ளையார் சுழி போட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

’உ’ எனும் பிள்ளையார் சுழி:

பல மாணவர்கள், தாங்கள் படிக்கும் காலங்களில் தேர்வு சமயங்களில் ‘உ’ எனும் பிள்ளையார் சுழியை போட்ட பின்னரே தங்கள் தேர்வை தொடங்குவர். கணக்கு எழுதுபவர்கள் கூட தங்களின் கணக்கு புத்தகத்தில் ‘உ’ எனும் பிள்ளையார் சுழியை போடுவர். பிள்ளையாருக்கு பல பெயர்கள் இருக்கிறது. அதில் ஒரு பெயர் கூட ‘உ’ எனும் எழுத்தில் ஆரம்பித்ததில்லையே! எப்போதாவது ஏன் இந்த ‘உ’ எனும் சொல் பிள்ளையார் சுழியாக பயன்படுத்தப்படுகிறது? என்பதை சிந்தித்ததுண்டா?

காரணம் இதுதான்..

எப்போதும், ‘ஓம்’ எனும் சொல்லுக்கு பிறகுதான், ‘கணேச நமஹ, நாராயண நமஹ, சிவாயநம’ என்று நாம் மந்திரங்களை கூறுகிறோம். இதில், ‘ஓம்’ எனும் சொல்லுக்கு ‘பிரணவ’ என்று பொருள். இதனால்தான் இதனை பிரணவ மந்திரம் என கூறுவார்கள். பிரணவ என்றால் புதியது என்று பொருள்.

இந்த வார்த்தையை பிரித்தால், ’அஉம்’ என்று வரும். இதில், ‘அ’ எனும் எழுத்து படைப்பதையும், ’உ’ எனும் எழுத்து காப்பதையும், ’ம்’ எனும் எழுத்து அழிப்பதையும் குறிக்கும். உ எனும் எழுத்து, உயிரெழுத்துகளின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. இது பஞ்ச இயந்திரங்கள் எனப்படும் மெய்,வாய்,கண்,மூக்கு செவி எனும் ஐந்து உறுப்புகளையும் குறிக்கிறது.

மேலும் படிக்க | செப்டம்பர் 18ல் செவ்வாய் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!

இவற்றை மனிதன் அடக்கி வைத்துக்கொண்டான் என்றேயானால், அவனது ஆயுள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆயுள் கூடும் போது, ஒருவன் துவங்கிய செயல், தடையின்றி முழுமையாக நிறைவேறும்.

காத்தல்!

‘உ’ என்பது, காத்தல் எழுத்தாகும். இது, இறைவன் நம்மை பாதுகாப்பதை குறிக்கிறதாம். இது, நம்முடைய செயல்படுகள் அனைத்திற்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறதம்.

தேவ் தத் பட்நாயக், ’99 Thoughts on Ganesha' எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அவர், பிள்ளையார் சுழி குறித்து தன் புத்தகத்தில் ஒரு வாதத்தை வைத்துள்ளார். அதில், பிள்ளையார் சுழியை, ஓலச்சுவடியில் எழுதும் முன்பு, அந்த ஓலையின் தரத்தை பார்ப்பதற்காக ‘உ’ எனும் எழுத்தை எழுதி சோதித்ததாக கூறியிருக்கிறார். அந்த எழுத்தை எழுதும் போது, பலவீனமான ஓலைகள் கிழிந்து விடும். அப்படி கிழிந்த ஓலைகள் பயன்படுத்தப்படாது. நாளடைவில், இப்போது நாம் காகிதத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாலும், பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது என்பது இப்போது ஒரு மரபாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

’உ’ எனும் எழுத்தில், வட்டம், வளைவு, இரண்டு கோடுகள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளவையாக இருந்திருக்கின்றன. அந்த காலத்தில் எழுத்தர்கள் எழுதுவதற்கு பனை ஓலைகளை பயன்படுத்தி இருக்கின்றனர். இது வியாசருக்கு மகாபாரதத்தை எழுத உதவிய எழுத்தரான விநாயகரின் அடையாளமாக மாறியிருக்கிறது. அப்போதிருந்து, பிள்ளையார் சுழி, மங்களகரமானதாகவும் நல்ல அதிர்ஷ்டத்தை தருவதாகவும் கருதப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் சிலையை எந்த நாளில் கரைக்கலாம்? முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES