ஆஸ்திரேலியா தோல்வி; இந்தியாவுக்கு பெரிய பூஸ்ட்... WTC பைனலுக்கு போக வாய்ப்பிருக்கா? Explained
தென்னாப்பிரிக்க அணியிடம் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் தோல்வி இந்தியாவுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இதன்மூலம், இந்திய அணியின் WTC இறுதிப்போட்டி வாய்ப்பில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? என்பதை இங்கு காணலாம்.
தென்னாப்பிரிக்கா அணி தான் ஏன் உலக டெஸ்ட் சாம்பியன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஆஸ்திரேலியாவை 1-2 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது.
டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்திருந்தாலும், கெபெர்ஹாவில் நடந்த 2வது டெஸ்டில் வென்று தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது. இந்நிலையில், கேப் டவுனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியை 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை தட்டிச் சென்றிருக்கிறது, தென்னாப்பிரிக்க அணி.
மேலும் படிக்க | 3 தமிழக வீரர்களுக்கு CSK குறி.. யாரெல்லாம் தெரியுமா? இவர் வந்தா நல்லா இருக்கும்!
புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம்
இதனால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 3வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அதேநேரத்தில் தொடரை இழந்த ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனால், 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும். அடுத்தாண்டு ஜூன் 9ஆம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதிவரை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் WTC இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
எனவே, ஒவ்வொரு அணிக்கும் இன்னும் மிக சில தொடர்கள் மட்டுமே நடப்பு ஐசிசி WTC சுழற்சியில் பாக்கி இருக்கிறது. எனவே, டாப் 2 இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதுநாள் வரை டாப்பில் இருந்த ஆஸ்திரேலியா 3வது இடத்திற்கு சரிந்திருப்பதன் மூலம் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கணக்கீடுகள் என்ன சொல்கின்றன? என்பதை இங்கு காணலாம்.
ICC WTC புள்ளிப்பட்டியல்...
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும், அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி ஐசிசி WTC புள்ளிப்பட்டியல் நிலவரம் இதோ
| இடம் | அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டிரா | புள்ளிகள் சதவீதம் |
| 1 | நியூசிலாந்து | 6 | 4 | 1 | 1 | 72.22% |
| 2 | தென்னாப்பிரிக்கா | 7 | 5 | 2 | 0 | 71.43% |
| 3 | ஆஸ்திரேலியா | 13 | 9 | 4 | 0 | 69.23% |
| 4 | இந்தியா | 11 | 5 | 4 | 2 | 51.52% |
| 5 | வங்கதேசம் | 7 | 3 | 3 | 1 | 47.62% |
| 6 | இங்கிலாந்து | 16 | 7 | 8 | 1 | 38.54% |
| 7 | இலங்கை | 6 | 1 | 2 | 3 | 33.33% |
| 8 | மேற்கு இந்திய தீவுகள் | 13 | 3 | 8 | 2 | 26.92% |
| 9 | பாகிஸ்தான் | 9 | 2 | 7 | 0 | 54.63% |
- இதில் டாப் 4 அணிகளே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
- ஒரு வெற்றிக்கு 12 புள்ளிகள், டிராவுக்கு 4 புள்ளிகள். அணிகள் பெற்ற மொத்தப் புள்ளிகளை விட, அவற்றின் புள்ளிகள் சதவீதமே இறுதிப்போட்டிக்கான தரவரிசையைத் தீர்மானிக்கிறது.
இந்த பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியை விட 17.71 புள்ளிகள் சதவீதத்தில் பின்தங்கி உள்ளது. இருப்பினும் இந்தியாவுக்கு 7 டெஸ்ட் போட்டிகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு 9 டெஸ்ட் போட்டிகளும் பாக்கி இருப்பதால் இரு அணிகளுக்கும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புகள் உள்ளன. அவற்றை அலசலாம்.
ஆஸ்திரேலியாவின் வாய்ப்புகள் என்ன...?
- ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கின்றன. உள்நாட்டில் நியூசிலாந்து அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் டிசம்பர் - ஜனவரியில் ஆஸ்திரேலிய அணி மோத உள்ளது. அடுத்து இந்தியாவில் இந்திய அணியுடன் ஜனவரி - பிப்ரவரியில் 5 டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது.
- தற்போது 108 புள்ளிகளைப் பெற்றிருக்கும் ஆஸ்திரேலியா, அடுத்த 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 216 புள்ளிகளை பெறும். மொத்தம் 22 போட்டிகளில் விளையாடிருக்கும். எனவே அதிகபட்சமாக 264 புள்ளிகளை அடிப்படையாக வைத்து கணக்கிடும்போது, அதன் புள்ளிகள் சதவீம் 81.82% ஆக இருக்கும்.
- எனவே, தென்னாப்பிரிக்காவிடம் தொடரை இழந்தாலும் கூட ஆஸ்திரேலியாவின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்தால் முதலிரண்டு இடங்களைப் பிடிப்பது கடினமாகலாம்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா வேண்டாம்? பின்வாங்கும் CSK! என்ன காரணம்?
இந்தியாவின் பைனல் வாய்ப்பு எப்படி இருக்கு...?
- இந்திய அணி நவம்பர் மாதம் இரண்டு டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து நாட்டிலேயே விளையாட உள்ளது. அடுத்து ஆஸ்திரேலியா உடன் 5 போட்டிகள் கொண்ட உள்நாட்டு டெஸ்ட் தொடர். மொத்தம் 7 போட்டிகள் இந்தியாவுக்கு இருக்கிறது.
- தற்போது இந்திய அணியின் புள்ளிகல் 68 ஆகும். அடுத்த 7 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் மொத்தமாக 152 புள்ளிகளை எட்டும். அப்போது இந்தியாவின் புள்ளிகள் சதவீதம் 70.37% ஆக உயரும்.
- எனவே, இந்திய அணி அடுத்த 7 போட்டிகளில் வெற்றிபெற்றால் கூட நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளின் வெற்றி தோல்விகளை உற்று கவனிக்க வேண்டியதாக இருக்கும். ஏனெனில் அந்த அணிகளும் இப்போதே 70 சதவீதத்திற்கும் அதிமான புள்ளிகள் சதவீதத்துடன் உள்ளன.
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எத்தனை போட்டிகள்...?
நியூசிலாந்து: இந்தியாவுக்கு எதிராக உள்நாட்டில் (Home) 2 டெஸ்ட் போட்டிகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிநாட்டில் (Away) 4 டெஸ்ட் போட்டிகள் உள்ளன.
தென்னாப்பிரிக்கா: வங்கதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களும் தென்னாப்பிரிக்காவிலேயே நடைபெறுகிறது என்பதால் தென்னாப்பிரிக்கா கூடுதல் சாதகம்.
ஆஸ்திரேலியா தொடர் இந்தியாவுக்கு முக்கியம்...
இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவைத் தீர்மானிப்பதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் மிக முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்புள்ளது.
அதற்கு முன் நியூசிலாந்து தொடரை வெல்ல வேண்டும் என்றாலும், உள்நாட்டில் 5 போட்டிகளையும் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாகும். இதனால், ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டி ரேஸில் இருந்து நீக்கிவிடலாம். ஒருவேளை நியூசிலாந்து - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் டிராவானாலும் இந்தியாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
முடிவு என்ன?
ஆஸ்திரேலியாவின் தோல்வி இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால், அது மட்டும் இந்தியாவைப் பைனலுக்கு அழைத்துச் செல்லாது. இந்தியா தனது மீதமுள்ள 7 போட்டிகளில் அதிகபட்ச வெற்றிகளைப் பெறுவதும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின் முடிவுகளும் முக்கியம்.