• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20ஐ அணியில் கம்பேக் கொடுத்துள்ள புவனேஷ்வர் குமார், நியூசிலாந்து தொடரில் வாய்பபை பெற்றுள்ளார். அவர் ஐபிஎல் சாதனை மற்றும் அவரது கம்பேக் பின்னணி குறித்த முழு அலசல் இதோ.

Written BySudharsan G
Published: Oct 08, 2026, 12:32 AM IST|Updated: Oct 08, 2026, 12:42 AM IST
joinshare
4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained
Image Credit: Bhuvaneshwar Kumar | Image Source: X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

2

இனி வாஷிங்டன் சுந்தருக்கு ஆப்பு... இடத்தை கப்புனு பிடித்த நமன் திர்

3

இனி இவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்... விதியை தளர்த்திய தமிழ்நாடு அரசு

4

அக்டோபர் 10 டெல்லி போராட்டம்: ஜனநாயகத்தைக் காக்க ஜந்தர் மந்தருக்கு வாருங்கள்! மாணவர் அமைப்பு அழைப்பு

5

Explainer: ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI... கடன் EMI-ஐ குறைக்க உதவும் 4 எளிய வழிகள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Bhuvaneswar Kumar Comeback Explainer: ஒரு காலகட்டத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகளில் புதிய பந்து இவர் கைகளுக்கு தான் செல்லும். இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் என இரண்டு பக்கமும் பந்தை நகர்த்தும் வித்தையை வைத்திருக்கும் மயாஜாலக்காரர் தான் புவனேஷ்வர் குமார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய டி20ஐ அணிக்கு திரும்பியிருக்கிறார். நீல ஜெர்ஸியில் அவரை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டனர்.

36 வயதில் புவனேஷ்வர் குமாருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு, அவரது கிரிக்கெட் வாழ்வில் முக்கியமான கம்பேக் ஆக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்திய அணிக்கு புவனேஷ்வர் குமாரின் வருகையும், அவரது வருகையின் காரணமும் முக்கியத்துவமும் என அனைத்தையும் இங்கு விரிவாக அலசலாம்.

மேலும் படிக்க | இனி வாஷிங்டன் சுந்தருக்கு ஆப்பு... இடத்தை கப்புனு பிடித்த நமன் திர்

கடைசியாக புவி இந்தியாவுக்கு எப்போது விளையாடினார்?

  • புவனேஷ்வர் குமார் கடைசியாக 2022ஆம ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி அந்று இந்திய அணியில் விளையாடினார்.
  • நியூசிலாந்து நாட்டில் நேப்பிர் நகரில் உள்ள Mclean Park மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடியிருந்தார். அதுதான் இதுவரை அவரது கடைசி சர்வதேச போட்டியாக உள்ளது. தற்போது மீண்டும் நியூசிலாந்து பயணிக்க இருக்கிறார்.
  • இந்திய அணி நிர்வாகம் புவனேஷ்வர் குமாரை ஒரு ஆப்ஷனாகவே சிந்திக்கவில்லை. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தொடர்ந்து இளம் வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. இதனால், புவனேஷ்வர் குமாரின் இந்திய அணி வருகை தாமதமானது.

🚨 Announcement 🚨 #TeamIndia's T20I squad and India A squads for New Zealand tour announced 📝 Bhuvneshwar Kumar makes a comeback to the T20I side 🙌 More Details ▶️ https://t.co/oJ52QSH0DO #NZvIND https://t.co/btbXlQ0nQD

— BCCI (@BCCI) October 6, 2026

டி20 கிரிக்கெட்டில் புவியின் ரெக்கார்டு

  • இந்தியாவுக்காக இதுவரை புவனேஷ்வர் குமார் 87 சர்வதேச போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
  • புவியின் டி20ஐ பந்துவீச்சு சராசரி 23.10, எகானமி 6.96, ஸ்ட்ரைக் ரேட் 19.90 ஆகும். டி20 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு 5/4 ஆகும். இவர் 2022இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை அவர் பதிவு செய்தார்.
  • 2022ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவுக்காக 32 டி20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஆண்டில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் டி20 சர்வதேச போட்டிகளில் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள் இதுவாகும்.

மேலும் படிக்க | சூப்பர் கிங்ஸ் அணியில் பொல்லார்ட்... ஷாக்கான MI ரசிகர்கள் - ஏலத்தில் சுவாரஸ்யம்

புவி கம்பேக் எப்படி சாத்தியமானது?

  • புவனேஷ்வர் குமாரை 2025 மெகா ஏலத்தில் SRH கழட்டிவிட, ஆர்சிபி அணி ரூ.10.75 கோடிக்கு எடுத்தது. அடுத்து 2025, 2026 சீசன்களில் ஓபனிங் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசினார்.
  • 2025, 2026 சீசன்களில் முறையே 17 விக்கெட்டுகள், 28 விக்கெட்டுகள் என 45 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுவும் 7.95 எகானமியில் அவர் பந்துவீசியது அவரை இந்திய அணியின் பக்கம் கொண்டுவந்துள்ளது.
  • இதனால், வரும் அக்டோபர் இறுதியில் தொடங்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணி ஸ்குவாடில் புவனேஷ்வர் குமாருக்கு இடம் கிடைத்துள்ளது.

புவியின் தேவை என்ன?

  • புவனேஷ்வர் குமாரின் மிகப்பெரிய பலம் அவரது வேகமும், புதிய பந்தில் ஸ்விங்கும்தான். ஆனால் இவற்றை விட அவரது சரியான லெந்த் & லைன், பவர்பிளே ஓவர்களில் காட்டும் கட்டுப்பாடு, டெத் ஓவர்களில் வெளிப்படும் அனுபவம் ஆகியவை அவரது தனித்து நிற்கச் செய்கிறது.
  • 2026 ஐபிஎல் தொடரில் உலகத் தரம் வாய்ந்த பேட்டர்களுக்கு எதிராக அவர் மீண்டும் தனது பழைய திறனை வெளிப்படுத்தினார்.
  • புதிய பந்தில் ஸ்விங் செய்வதுடன் மீண்டும் தனது பழைய திறமையை வெளிப்படுத்தினார். புதிய பந்தில் ஸ்விங் செய்வதுடன், நடு ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மற்றும் இறுதி ஓவர்களில் யார்க்கர் லெந்தில் பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்திலும் சிறப்பாக செயல்பட்டார்.
  • டி20ஐ போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரருக்கான தேவை உள்ளது. பும்ரா ஓடிஐ தொடருக்கு முழுமையாக தயாராவதால் டி20ஐயில் புவியை பிசிசிஐ முயற்சித்துள்ளது. நல்ல பிட்னஸ் உடன் புவி பந்துவீசினால் அவர் ஓடிஐ தொடர் பக்கமும் செல்ல வாய்ப்புள்ளது.

கம்பேக்கில் காத்திருக்கும் சவால்

  • புவனேஷ்வர் குமார் அவரது பிட்னஸை சீராக வைத்திருக்க வேண்டும். அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் உள்ளிட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர்களுடன் அவர் போட்டிப்போட வேண்டியிருக்கும்.
  • அதேநேரத்தில், நியூசிலாந்து டி20ஐ தொடரில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வேட்டையாடினால் ஓடிஐ பக்கமும் வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம், 2027 ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் புவனேஷ்வர் குமாரால் இடம்பிடிக்க முடியும்.
  • இந்திய அணிக்கு அனுபவ வீரர்கள் தேவை என்பதால் புவனேஷ்வர் குமார் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
  • 2022ஆம் ஆண்டில் இந்திய அணியில் இருந்து விலகிய புவனேஷ்வர் குமார், 2026ஆம் ஆண்டில் மீண்டும் அதே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே கம்பேக் செய்ய உள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதே இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

மேலும் படிக்க | சாமியார் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடி வாங்கினாரா விராட் கோலி...? உண்மை என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket