IND U19 vs PAK U19, Asia Cup 2026: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இன்று (நவ. 14) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஓமன் நாட்டின் அல் அமீரட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டி கடைசி நொடி வரை பரபரப்புக்கு பஞ்சமின்றி இருந்தது. கடைசி பந்தில் இந்திய அணி வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட, மோகித் உல்வா பவுண்டரி அடித்து கோப்பையை வென்று கொடுத்தார்.
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦 🏆 An absolutely incredible run chase in the Final gives India U19 the #MensU19AsiaCup 2026 title 🇮🇳 👏 Scorecard ▶️ https://t.co/srKsrr1jna https://t.co/BYh3iNO18o
— BCCI (@BCCI) November 14, 2026
50 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் U19 முதலில் பேட்டிங் செய்து 338 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய U19 அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
ஓமன் நாட்டின் அல் அமீரட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டி கடைசி நொடி வரை பரபரப்புக்கு பஞ்சமின்றி இருந்தது. கடைசி பந்தில் இந்திய அணி வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட, மோகித் உல்வா பவுண்டரி அடித்து கோப்பையை வென்று கொடுத்தார்.
50 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் U19 முதலில் பேட்டிங் செய்து 338 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய U19 அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் U19 அணி 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்களை குவித்தது. ஓபனர் உஸ்மான் 107 ரன்களை குவித்தார். அப்துல் காதிர் 80, பர்ஹான் யூசப் 63 ரன்களை அடித்தனர். இந்திய அணி பந்துவீச்சில் காவ்யா பரேஷ் படேல் 4 விக்கெட்டுகளையும், சிக்குருபதி வெங்கடா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஓபனர்கள் கேப்டன் லக்ஷயா ராய்சந்தானி - ஆர்யவீர் சேவாக் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆர்யவீர் சேவாக் 58 ரன்களில் ஆட்டமிழந்தார், இவர் மூத்த இந்திய வீரர் சேவாக்கின் மகன் ஆவார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் விகே வினீத் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் இன்று 4 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் ராஜ்புத் 16, யஷ்பர்ந்தன் சௌகான் 9 என ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர் கடுமையாக பெரியளவுக்கு சோபிக்காவிட்டாலும் கேப்டன் லக்ஷயா ராய்சந்தானி 80 ரன்கள் எடுத்து 37வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் 9 ரன்களுக்கும், ஆர்யன் சவ்சனி 9 ரன்களுக்கும், காவ்யா பரேஷ் படேல் டக்அவுட்டும் ஆக ஒரு கட்டத்தில் 252 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்டை இழந்தது பரிதாபமான நிலையில் இருந்தது. 9வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மனல் சௌகான் - மோகித் உல்வா ஜோடி பொறுப்புடன் விளையாடியது.
இந்த ஜோடி களத்தில் இணைந்த போது, இந்திய அணிக்கு 51 பந்துகளில் 86 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இரண்டு பந்துவீச்சாளர்கள் போராடி, இந்திய அணிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்தது. அதேபோல், லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியடைந்ததால், இந்த போட்டியிலும் தோல்வியை தழுவுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. 35 பந்துகளில் 57 ரன்களை சேர்த்தது. இந்தச் சூழலில் மனல் சௌகான் 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரி என 47 ரன்களை அடித்திருந்தார்.
மனல் சௌகான் ஆட்டமிழக்கும்போது இந்திய அணி வெற்றிக்கு 16 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி வீரராக உள்ளே வந்த சிக்குருபதி வெங்கடா, ஏற்கெனவே செட்டாகியிருந்த மோகித் உல்வாவுக்கு துணையாக நிற்க இந்திய அணி வெற்றியை நோக்கி சீறிப்பாயந்தது. இந்திய அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டன. மோகித் உல்வா ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்தில் ரன் வரவில்லை, 2வது பந்து வைடாக வீசப்பட்டது. எனவே மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் மோகித் 1 ரன்னை எடுத்தார்.
அடுத்தடுத்து மூன்று பந்துகளில் மூன்று சிங்கிள்ஸ் எடுக்கப்பட்டது. எனவே, கடைசி பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. மோகித் உல்வா லாங் ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, ஆசிய கோப்பையை தட்டிச் சென்றது. மோகித் உல்வா 26 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 49 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
A performance we will remember for a very long time 🔥 Mohit Ulva is the Player of the Match for his 𝙘𝙡𝙪𝙩𝙘𝙝 𝙠𝙣𝙤𝙘𝙠 of 4️⃣9️⃣*(26) 🫡 Scorecard ▶️ https://t.co/srKsrr1jna #MensU19AsiaCup https://t.co/SgSuiVSCZz
— BCCI (@BCCI) November 14, 2026
இதனால் மோகித் உல்வாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 10வது வீரராக களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் சிறப்பாக பேட்டிங் செய்து, அதுவும் அழுத்தம் நிறைந்த இறுதிப்போட்டியில் கடைசி வீரருடன் போராடி கோப்பையை பெற்றுக்கொடுத்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. வின்னிங் ஷாட் அடித்ததும் மைதானத்திற்குள் சீறிப்பாய்ந்த இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணியின் ஓபனர் ஆர்யவீர் சேவாக் இந்த தொடரில் 5 இன்னிங்ஸில் 361 ரன்களை அடித்து தொடர்நாயகன் விருதை வென்றார். அவரது சராசரி 90.25 ஆகும். மேலும் அவர் இந்த தொடரில் 38 பவுண்டரிகளையும், 16 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் ஆர்யவீர் சேவாக் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பைனலில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றிருந்தது. அதற்கு நடப்பாண்டில் பழித் தீர்க்கப்பட்டது. இதுவரை 13 முறை U19 ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றிருக்கும் சூழலில் இது இந்திய அணிக்கு 9வது கோப்பையாகும். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இரண்டு முறையும், ஆப்கானிஸ்தான் ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.