• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /GT அணிக்கு தாவும் ஹர்ஷல் படேல்... CSK அணிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் - SRH டிரேட் பின்னணி

GT அணிக்கு தாவும் ஹர்ஷல் படேல்... CSK அணிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் - SRH டிரேட் பின்னணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹர்ஷல் படேலை ரூ.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு டிரேட் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரர் சிஎஸ்கே வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.

Written BySudharsan G
Published: Nov 14, 2026, 18:16 IST|Updated: Nov 14, 2026, 18:33 IST
joinshare
GT அணிக்கு தாவும் ஹர்ஷல் படேல்... CSK அணிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் - SRH டிரேட் பின்னணி
Image Credit: Harshal Patel (Left), Sai Kishore (Right) | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

2

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

3

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

4

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

5

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஐபிஎல் அணிகள் தற்போதைய ஸ்குவாடில் உள்ள வீரர்களை தக்கவைக்க வரும் நவம்பர் 17ஆம் தேதிதான் கடைசி நாளாகும். அன்றைய தினமே யார் யார் மெகா ஏலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளனர்...? யார் யார் தக்கவைக்கப்பட்டுள்ளனர்...? என்பது தெரிந்துவிடும்.

அதைத் தொடர்ந்து, ஏலத்திற்கு வீரர்கள் பதிவு செய்யத் தொடங்குவார்கள். ஐபிஎல் மினி ஏலம் இம்முறை கோவாவில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சூழலில், வீரர்கள் டிரேட் பேச்சுவார்த்தையும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | IPL Trading Rules: வீரர்களின் சம்மதம் இல்லாமல் டிரேடிங் செய்ய முடியுமா? பிசிசிஐ விதிமுறைகள் என்ன? Explained

டிரேட் செய்யப்படும் ஹர்ஷல் படேல்

இதுவரை மொத்தம் 10 வீரர்கள் டிரேட் செய்யப்பட்டு அணி மாறியிருக்கின்றனர். இன்னும் பல முக்கிய வீரர்களை குறிவைத்து டிரேட் பேச்சுவார்த்தைகளையும் ஐபிஎல் அணிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மற்றொரு டிரேட் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹர்ஷல் படேலை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு All Cash டிரேட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, வீரர்களுக்கு பதிலாக பணப் பரிவர்த்தனை மட்டுமே வைத்து இந்த டிரேட் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.4 கோடிக்கு குஜராத் போகும் ஹர்ஷல்

முன்னர் ரூ.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட ஹர்ஷல் பட்டேல் தற்போது ரூ.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாற்றிவிடப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பர்ஸில் ரூ.8 கோடி காலியாகி உள்ளது, குஜராத் அணி ரூ.4 கோடியை சேமித்துள்ளது.

இன்னும் இந்த டிரேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மேற்கொள்ளலாம்.

🚨 FIRST CASH TRADE OF IPL 2027. 🚨 - SRH set to trade Harshal Patel to Lucknow Supergiants for an all-cash deal of 4cr. (Cricinfo) https://t.co/XzEc2GyztH

— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 14, 2026

மேலும் படிக்க | IPL 2027: மீண்டும் அணி மாறும் முகமது ஷமி.. LSG போடும் பலே கணக்கு! அதிரடி ஆல்ரவுண்டரை தூக்க திட்டம்!

ஹைதராபாத் அணியின் 3வது டிரேட்

ஹைதராபாத் அணி இந்தாண்டு மேற்கொள்ளும் மூன்றாவது டிரேட் இதுவாகும். இதற்கு முன் ஷீஷன் அன்சாரி கொடுத்து, டெல்லி அணியிடம் இருந்து நடராஜனை பெற்றுக்கொண்டது. தொடர்ந்து, சிஎஸ்கே அணிக்கு லியம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோரை டிரேட் செய்து நேதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோரை பெற்றுக்கொண்டது.

பலமடைந்த குஜராத் பந்துவீச்சு படை

தற்போது 3வது டிரேடாக எந்த வீரரையும் பெற்றுக்கொள்ளாமல் ஹர்ஷல் படேலை குஜராத் அணிக்கு டிரேட் செய்துள்ளது. குஜராத் அணிக்கு அதன் டெத் பௌலிங்கில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தேவை இருந்தது. தற்போது ஹர்ஷல் படேலை வைத்து அந்த இடத்தை நிரப்பியுள்ளது. சிராஜ், ரபாடா, ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா, அசோக் சர்மா என வேகப்பந்துவீச்சுக்கு ஹர்ஷல் படேல் புதிய வெரைட்டியையும் கொடுப்பார்.

சிஎஸ்கே வருகிறாரா சாய் கிஷோர்?

ஹர்ஷல் படேல் ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் என நான்கு  ஐபிஎல் அணிகளில் 2012ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். மொத்தம் 121 இன்னிங்ஸில் அவர் 151 விக்கெட்டை எடுத்துள்ளார். அதுவும் அதிகபட்சமாக 2021 சீசனில் மட்டும் 32 விக்கெட்டை எடுத்திருந்தார். 2024 சீசனில் அவர் 24 விக்கெட்டை எடுத்திருந்தார். இந்த இரண்டு சீசன்களிலும் அவர் பர்பிள் கேப்பை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sai kishore wife insta story, Sai traded?💛 #csk https://t.co/5KqyuIGdab

— Whistlepodu army 💛 (@7003Shivendra) November 14, 2026

குஜராத் அணி வேகப்பந்துவீச்சாளரை பெற்று ஸ்குவாடை பலப்படுத்தி உள்ளது. அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் பேட்டர்கள் தேவை. எனவே, ரூ.2 கோடி மதிப்பிலான சாய் கிஷோர் ஏலத்திற்கு வர வாய்ப்புள்ளது. இல்லையெனில் சிஎஸ்கே போன்ற இடது கை ஸ்பின்னர் தேவைப்படும் அணிகளுக்கு கூட டிரேட் செய்யப்படலாம். எனவே, சிஎஸ்கே ரசிகர்கள் சாய் கிஷோர் தங்கள் அணிக்கு வருவார் என பேசத் தொடங்கி உள்ளனர்.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றியதே இவர்தான்.. மும்பை இந்தியன்ஸில் நடந்தது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL