• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /மொத்தமாக மாறிய கிங் கோலி... நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்? Explained

மொத்தமாக மாறிய கிங் கோலி... நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்? Explained

இந்திய கிரிக்கெட்டின் அரசனாக புகழப்படும் விராட் கோலி இன்று அவரது 38வது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில், அவரிடம் இருந்து பிறர் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடம் குறித்து இங்கு விரிவாக அலசலாம். இது கிரிக்கெட் சார்ந்தது என்றாலும், கிரிக்கெட்டை மட்டும் சார்ந்ததில்லை...

Written BySudharsan G
Published: Nov 05, 2026, 09:56 AM IST|Updated: Nov 05, 2026, 10:26 AM IST
joinshare
மொத்தமாக மாறிய கிங் கோலி... நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்? Explained
Image Credit: Virat Kohli 38th Birthday | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

2

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

3

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

4

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

5

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இன்று (நவ. 5) 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விராட் கோலிக்கு ரசிகர்களும், முன்னாள் இன்னாள் வீரர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

38 வயதை எட்டியிருக்கும் விராட் கோலி இன்றும் 2008ஆம் ஆண்டில் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்த துடிப்புமிக்க 19 வயது இளைஞனாகவே களத்தில் தென்படுகிறார்.

விராட் கோலியின் மனநிலை மாற்றம்

18 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. விராட் கோலி புதுப்புது உச்சங்களை தொட்டுவிட்டார். ஆக்ரோஷத்திற்கு பெயர் பெற்ற இளம் விராட் கோலி, இப்போது ஆக்ரோஷமும், நிதானமும் கலந்து முதிர்ச்சி பெற்ற மூத்த வீரராக உருவெடுத்துவிட்டார். அதுவும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகான விராட் கோலியின் மனநிலை மாற்றம் பலரையும் வியப்படைய வைத்தது.

மேலும் படிக்க | IPL Retentions... தேதியை தள்ளிவைத்த பிசிசிஐ - என்ன காரணம்?

பொது எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட மைல்கல்களுக்காக பெரும் சுமையை சுமப்பதில் இருந்து, அதிக சுதந்திரத்துடன் விளையாடுவது, வெளிப்புற அழுத்தங்களில் இருந்து மன ரீதியாக எவ்வித பற்றின்றி இருப்பது, புள்ளிவிவரங்களை விட அணி சூழல்களுக்கு முன்னுரிமை அளிப்பது என பல விஷயங்களில் முதிர்ச்சி அடைந்துள்ளதாக விராட் கோலியே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைல் மாற்றம்

மனநிலை மாற்றம் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி பேட்டிங் அணுகுமுறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்தார். விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறை மாற்றம் குறித்து இந்திய மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று (நவ. 4)  வீடியாவாக வெளியிட்டிருந்தார்.

தினேஷ் கார்த்திக் சொன்ன மேட்டர்

அதில் தினேஷ் கார்த்திக், "2023ஆம் ஆண்டில் 173 பந்துகளுக்கு ஒரு முறை சிக்ஸர் அடித்து வந்த விராட், அதே 2023ஆம் ஆண்டு அக்டோபர் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து 133 பந்துகளுக்கு ஒரு முறை சிக்ஸர் அடித்து வந்தார்.

அதன்பின் விராட் கோலி 25 பந்துகளுக்கு ஒரு முறை சிக்ஸர் அடித்து வருகிறார்" என்றார். இனி அதிரடியாக விளையாட வேண்டும் என விராட் கோலி முன்னர் அவரிடம் தெரிவித்திருந்ததாக கூறும் தினேஷ் கார்த்திக், ஆனால் யாரும் இந்தளவிற்கு தங்களின் பேட்டிங்கில் மாற்றத்தை கொண்டுவந்ததில்லை என விராட்டுக்கு புகழாரம் சூட்டினார்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Dinesh Karthik (@dk00019)

மேலும் படிக்க | இந்திய அணியில் இனி இவர்களுக்கு இடமில்லை.. புவி நீக்கம்? கம்பீர் அதிரடி!

அஸ்வின் சுட்டிக்காட்டிய முக்கிய விஷயம்

அதேபோல், கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விராட் கோலி பேக்வர்ட் பாயிண்ட் திசையில் கட் ஷாட் அடித்ததை இந்திய மூத்த வீரர் அஸ்வின் பாராட்டி பேசியிருந்தார். விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலுக்கு கட் ஷாட் அடிப்பது கடினமான ஒன்று என தெரிவித்த அஸ்வின், ஆனால் தனக்கு அனைத்து ஷாட்களும் கையில் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தனை வயதான பின்னரும் அதற்காக பயிற்சி எடுத்து, அதை அழுத்தம் நிறைந்த போட்டியில் வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல என குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, விராட் கோலியிடம் இருந்து இந்த குணத்தை இளைஞர்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அஸ்வின் கேட்டுக்கொண்டார். அதாவது, உங்களுக்கு ஒரு விஷயம் வரவில்லை என்றால், அதை செயல்படுத்த வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கு உரிய பயிற்சியை கண்டிப்பாக பெற வேண்டும். அதற்கு வயது, நேரமின்மை போன்ற சாக்குபோக்குகளை கூறக் கூடாது என்பதுதான் அஸ்வின் சுட்டிக்காட்டியதன் உட்பொருள்.

 

38வது வயதில் அடியெடுத்து வைக்கும் விராட்

விராட் கோலி டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து முறையே 2024, 2025 ஆண்டுகளில் ஓய்வை அறிவித்தார். ஓடிஐ போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் 146 அரைசதம், 86 சதம், 7 இரட்டை சதம் என இதுவரை மொத்தம் 559 சர்வதேச போட்டிகளில் 28,215 ரன்களை குவித்துள்ளார்.

நிச்சயம் 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் வரை அவர் விளையாடுவார். இன்னும் குறைந்தபட்சம் 20 போட்டிகளில் அவர் விளையாடுவார் எனலாம். 38 வயதில் விராட் கோலியை புகழவும், கொண்டாடவும் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்

இருப்பினும், அவரது கிரிக்கெட் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் கூட அவர் தனித்துவமாக திகழ மேற்கொள்ளும் முயற்சிகளை நாமும் வாழ்வில் பின்பற்றினால்தான் அவரின் ரசிகராக பின்தொடர்வதற்கே அர்த்தம் இருக்கும்.

ஒரு விஷயம் நமக்கு தெரியவில்லை என்றால், அதற்கான முயற்சியை மேற்கொள்ளாதது மட்டும்தான் உண்மையான தடை. இந்த மனப்பக்குவத்தை நம் வாழ்க்கையிலும் பின்பற்றினால்தான், விராட் கோலியின் ரசிகராக இருப்பதற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்.

மேலும் படிக்க | விராட் கோலி வெறியாட்டம்... ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீட்... இந்திய அணி வெற்றி

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team